இந்த வார ராசிபலன் 22/01/2024 முதல் 28/01/2024 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

jan 22 to 28
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுமாரான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவுக்கு பணவரவு ஏற்படாது. எனினும் வரவிற்கு ஏற்ற செலவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். புதிய முயற்சிகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். புதிதாக எந்த வேலைக்கும் முயற்சி செய்வதை தவிர்ப்பது நன்மை தரும். உடன் வேலை செய்பவர்களுடன் சமரசமாக செல்வது நல்லது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் இருக்காது. புதிதாக எந்த தொழிலிலும் முதலீடு செய்வதை தவிர்ப்பது நன்மையை தரும். ஒரு சிலருக்கு பழைய முதலீடுகள் கை கொடுக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை மேலோங்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் ஏற்படும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். இருப்பினும் தொழிலில் மாற்றத்தை செய்ய வேண்டும் என்று நினைத்து எந்த முடிவுகளையும் எடுக்காமல் இருப்பது நன்மையை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஆதாயமான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் நலத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கி ஒற்றுமை ஏற்படும். பிரிந்த உறவுகள் விரும்பி வந்து சேர்வதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். இருப்பினும் உடன் பணிபுரிபவர்களின் உதவியால் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழிலை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றியைத் தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திருப்திகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த பணவரவு ஏற்படும். உடல் நலத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி ஆரோக்கியம் மேலோங்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் சுப நிகழ்ச்சிக்குரிய முயற்சியை இந்த வாரத்தில் மேற்கொள்ளலாம்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று குறைவாகவே இருக்கும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை விரிவாக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தக்ஷிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். மூன்றாவது நபரால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். உடன் பணி புரிபவர்களை அனுசரித்து சென்று வேலையில் கவனம் செலுத்தி செய்வதன் மூலம் பிரச்சினைகள் ஏதும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். தொழிலை பொருத்தவரை உழைப்புக்கேற்ற ஆதாயமே கிடைக்கும். தொழிலை விரிவாக்க எந்த முயற்சியையும் இந்த வாரம் எடுக்க வேண்டாம். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பாதுகாப்பாக இருக்க வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருந்தாலும் மனதில் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது கவனமாக இருப்பது நல்லது.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருந்தாலும் அதை திறம்பட செய்து உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பிய சலுகைகள் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிகமான அளவு லாபம் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. உரிய ஆலோசனை பெற்று தொழிலை விரிவுபடுத்த முயற்சி செய்யலாம். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பைரவரை வழிபட வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்க்கு பணவரவு ஏற்படும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. பழைய பொருட்களை மாற்றி புதிய பொருட்களை வாங்க முயற்சி செய்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

வேலையை பொருத்தவரை வேலை சாதகமான சூழ்நிலையே தென்படுகிறது. ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பிய சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். தொழிலை விரிவு படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பழனி முருகரை வழிபட வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் சுமூகமாக நீங்கும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாக இருக்கும். கூடுதல் கவனத்துடன் வேலை செய்வதன் மூலம் அதிகாரிகளின் கண்டிப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். தொழிலைப் பொருத்தவரை அதிக அளவு லாபம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அந்த லாபத்திற்கு ஏற்ப கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அபிராமியை வழிபட வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் போட்டிகளை சமாளிக்கும்
வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு இருக்காது. உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். ஒரு சிலருக்கு சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் ஏற்படும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது கடினமாகவே இருக்கும். புதிதாக எந்த முயற்சிகளிலும் ஈடுபடாமல் இருப்பது நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகரை வழிபட வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தன்னம்பிக்கையுடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது, என்றாலும் செலவுகளை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். உடல் நலத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். திருமணம் முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். புதிதாக எந்த வேலைக்கும் முயற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். வேலையில் கவனம் செலுத்தி பொறுமையை கையாளுவது நல்லது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் தள்ளி வைப்பது நல்லது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு உமா மகேஸ்வரரை வழிபட வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்தை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். அதே சமயம் செலவுகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து பொறுமையுடன் செல்வது நன்மையை தரும். குடும்ப நிகழ்வுகளை பிறரிடம் கூறுவதால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையை நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த இந்த வாரத்தில் முயற்சிகள் மேற்கொள்ளலாம். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் திருமணம் முயற்சிகள் வெற்றியைத் தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். அதை திறம்பட செய்து முடிப்பதன் மூலம் அதிகாரிகளின் பாராட்டை பெற்று விரும்பிய சலுகைகளையும் பெற முடியும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.

- Advertisement -