இந்த வார ராசிபலன் 17/1/2022 முதல் 23/1/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரக்கூடிய வாரமாக தான் இருக்கப்போகின்றது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் காரியங்களை இந்த வாரம் செய்து முடிப்பீர்கள். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் மீண்டும் தொடங்கும். உங்களுடைய பேச்சில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். அனாவசியமாக யார் மனதும் புன்படும்படி பேச வேண்டாம். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தேவையற்ற மனக்குழப்பங்கள் வந்துபோகும். உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லவேண்டும். உடன் வேலை செய்பவர்களிடம் அனாவசியமாக வாக்குவாதம் செய்ய வேண்டாம். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை வந்தால் யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். சில விஷயங்கள் சுறுசுறுப்பாக நடக்காமல் இழுபறியாக இழுத்துக் கொண்டே செல்லும். வீட்டில் இருக்கும் பெண்கள் பொறுமை காத்தல் அவசியம். தினம்தோறும் ஸ்ரீராமஜெயம் மந்திரம் உச்சரிப்பதால் நன்மை நடக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வருமானத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. தேவைக்கு அதிகமாகவே சில இடங்களில் இருந்து பணம் வந்து பையை நிரப்பும். கடன் பிரச்சனையில் இருந்து வெளி வந்து விடுவீர்கள். குடும்பத்தில் இதுவரை இருந்துவந்த குழப்பங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. தினம்தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் செலவுகள் அதிகமாக இருக்கும். பயப்பட வேண்டாம்‌. எல்லாம் சுபச்செலவுகள் தான்‌ வேலை செய்யும் இடத்தில் இருந்த சின்ன சின்ன பிரச்சனைகளும் இனி வரக்கூடிய காலங்களில் சரியாகிவிடும். சிறிய அளவில் உடல் உபாதைகள் வரும் போது, உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. வெளியிடங்களுக்குச் என்றால் உணவு சாப்பிடுவதில் கவனம் தேவை. ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ளுங்கள். நேரத்திற்கு சாப்பிட வேண்டும். வார இறுதியில் உற்சாகத்துடன் மன உறுதியோடு செயல்பட்டு நிறைய விஷயங்களில் வெற்றியடைவீர்கள். தினம் தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரக்கூடிய வாரமாக இருக்கப்போகின்றது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தோடு கோவில்களுக்கு சென்று வரக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிதாக சொத்து வாங்க கூடிய யோகமும் சேர்ந்து வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். எதிரிகளின் மூலம் பிரச்சினைகள் அதிகமாக இருக்காது. அரசாங்கம் சம்பந்தப்பட்ட கோர்ட் கேஸ் வழக்குகள் உங்கள் பக்கம் தீர்ப்பாவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. தினந்தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் உற்சாகத்தோடு உங்களுடைய எல்லா வேலைகளையும் முன்கூட்டியே செய்து முடிக்கப் போகிறீர்கள். உங்களுடைய சுறுசுறுப்பைப் பார்த்து உங்களை சுற்றி இருப்பவர்கள் திருஷ்டி வைக்கும் அளவிற்கு உங்களுடைய முன்னேற்றம் இருக்கும்‌. கூடுமானவரை குடும்ப பிரச்சனைகளை வெளியாட்களிடம் அதாவது மூன்றாவது மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் கூடுதலாக வேலைப்பளு இருக்கும். இருப்பினும் அதையெல்லாம் சமாளித்து விடுவீர்கள். சொந்தத் தொழிலில் யாரையும் நம்பி கடன் கொடுக்க வேண்டாம். பண விஷயங்களில் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது. தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சோர்வான மனநிலை இருக்கப்போகின்றது. எந்த வேலையை எடுத்தாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளி போட்டு விடுவீர்கள். அதனாலேயே உங்களுடைய சில முயற்சிகள் தோல்வியை தழுவும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் படிப்படியாகக் குறையும். உங்களுடன் சண்டை போட்டு சென்றவர்கள் கூட உங்களைப் பற்றி புரிந்து கொண்டு, போட்ட சண்டைக்கு வந்து மன்னிப்பு கேட்பார்கள். வேலை செய்யும் இடத்தில் வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் உங்களுக்கு உதவி செய்ய உங்கள் நண்பர்கள் உறுதுணையாக நிற்பர். தினந்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்தவாரம் வருமானத்தில் சில பிரச்சனைகள் இருக்கும். செல்லவும் அதிகமாக இருக்கும். கொஞ்சம் கடன் வாங்கக் கூடிய சூழ்நிலை இருக்கும். இருப்பினும் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். கூடுமானவரை செலவைக் குறைத்துக்கொள்ள பாருங்கள். உங்களுடைய குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளின் மூலம் குடும்பத்திற்கு மதிப்பும் மரியாதையும் உயரும். வேலை செய்யும் இடத்தில் நீங்களே எதிர்பார்க்காத உயர் பதவிகள் சம்பள உயர்வு வரும். மனமகிழ்ச்சி அடைவீர்கள். சொந்தத் தொழிலில் எப்போதும்போல வருமானம் இருக்கும். தினம்தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மையை தரும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மையைத் தரக்கூடிய பலன்கள் இருந்தாலும், குடும்பத்தில் தேவையற்ற நபர்களால் தேவையற்ற பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அனாவசியமாக நண்பர்கள் உறவினர்கள் என்று குடும்ப விஷயங்களை அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். பஞ்சாயத்துக்கு என்று வெளியாட்களிடம் சென்றால் பிரச்சனை இரட்டிப்பாகும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நீங்களே அனுசரித்து சென்று விடுங்கள். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகைகள் ஒவ்வொன்றாக கிடைக்கும். வியாபாரத்தில் அதிக அக்கறையோடு ஈடுபட்டால் தான் நினைத்தபடி லாபத்தை எடுக்க முடியும். தினம்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். அனாவசியமாக குடும்ப உறவுகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட கூடாது. எந்த வேலையிலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவுகளை எடுக்கக் கூடாது. அலசி ஆராய்ந்து பொறுமையோடு முடிவெடுப்பது உங்கள் வாழ்க்கைக்கு நல்ல பலன்களை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. சொந்தத் தொழிலில் பங்குதாரர்களிடம் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் எல்லாவற்றிற்கும் ஆதாரம் அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதாவது பில் காபி, வவுச்சர் இவைகளை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சந்தோஷமாக நேரத்தை கழிக்க போகிறீர்கள். வாழ்க்கைத் துணைக்கு பிடித்தமான ஆடை ஆபரணங்களை வாங்கி கொடுத்து சந்தோஷப்படுவார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களையும் வாங்குவீர்கள். வருமானம் நிறைவாக இருக்கும். நீண்ட நாட்களாக செய்ய முடியாத வேலைகளை கூட இந்த வாரம் செய்து முடிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் எப்போதும்போல சுமூகமான நிலை இருக்கும். தினம்தோறும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் செலவுகள் அதிகரிக்கும். கையில் சேமிப்பு இருப்பவர்கள் சமாளித்துவிடலாம். சேமிப்பு இல்லாதவர்களுக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதிக வட்டிக்கு கடன் வாங்காமல் இருப்பது நமக்கு நல்லது. உடன்பிறந்தவர்களுடன் சண்டை சச்சரவு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதால், உறவுகளை விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். வேலை செய்யும் இடத்தில் தேவையற்ற சின்ன சின்ன சிக்கல்கள் வந்து அகலும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். சொந்த தொழிலில் புதிய முதலீடு போடவேண்டாம். தினம்தோறும் துர்க்கை வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -