இந்த வார ராசிபலன் 24/1/2022 முதல் 30/1/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு.

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் உற்ச்சாகத்தோடு செயல்பட்டு உங்களுடைய வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகள் வெற்றி தரும். வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல தேவையான முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை வரும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பெருமைகளை சோதிப்பதற்கு சில சங்கடமான சம்பவங்கள் நடக்கும். முன்கோபம் கூடாது. பொறுமையோடு இருந்தால் எதையும் சாதிக்கலாம். சொந்தத் தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் இருக்காது. தினந்தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள் இந்த வாரம் முழுவதும் பொறுமையாக செயல்பட வேண்டும். எந்த ஒரு விஷயத்தை செய்வதற்கு முன்பும் ஒன்றுக்குப் பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். சில இடங்களில் நம்மால் இந்த வேலையை செய்ய முடியுமா என்ற சந்தேகம் உங்களுக்கு வருவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். என்பதை மனதில் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள். தன்னம்பிக்கையை கைவிடாதீர்கள். அடுத்தவர்களிடம் பேசும் போது வார்த்தையில் கவனம் தேவை.‌ உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. தினம்தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஒரு சில தடைகள் வந்து உங்களுடைய முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் நிற்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். சொந்த தொழிலில் பெரியதாக முதலீட்டை போட வேண்டாம். இருக்கும் வேலையை அப்படியே பார்த்துக் கொண்டால் நல்லது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தோடு வெளியூர் செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. குழந்தைகளின் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். தினம்தோறும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரும் வாரமாக அமைந்தாலும், உங்களுடைய முன்கோபத்தை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். எந்த விஷயத்தையும் கோபத்தோடு செய்யக்கூடாது. தன்மையாக நடந்து கொண்டால் நிறைய விஷயங்களில் வெற்றி அடையலாம். உங்களுக்கு விருப்பமான, பொக்கிஷமாக நினைக்கும் சில பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். இந்த வார இறுதியில் உங்களுடைய பொருட்கள் தொலைந்து போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அது தேவையற்ற மன வேதனையை கொடுக்கும். தினம் தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமான நல்ல பலன்களை கொடுக்க போகின்றது. நீண்ட நாட்களாக உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் பிரச்சனை நீங்கும். வருமானம் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. வராஹி அம்மன் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் யோகம் நிறைந்த வாரமாக இருக்கப்போகின்றது. நீங்கள் எதிர்பார்க்காத நிறைய நல்லது ஒன்றன்பின் ஒன்றாக நடக்கவிருக்கும். வேலை செய்யுமிடத்தில் வேலைப்பளு கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், வெற்றி வாகை சூடுவீர்கள். இதுநாள் வரை இருந்து வந்த குடும்பப் பிரச்சனைகள் சரியாகி சந்தோஷம் நிலவும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நீண்ட தூர பயணம் செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. வெளியே செல்லும்போது மாஸ்க் அவசியம் தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தினந்தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அனுபவம் நிறைந்த வாரமாக தான் இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் புகழும் கிடைக்கும். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆனால் குடும்ப விஷயங்களில் சில பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அனாவசியமாக உங்கள் குடும்ப பிரச்சினையை மூன்றாவது நபரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வாழ்க்கை துணையிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். உடன்பிறந்தவர்களால் உங்களுடைய தேவை பூர்த்தி அடையும். திருமணத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு கெட்டி மேள சத்தம் கேட்கும். தினம்தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த வாரம் எல்லாத் தடைகளும் தகர்க்கப்படும். வேலையில் இருந்து வந்த சின்ன சின்ன சிக்கல்கள் பிரச்சனைகள் எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு பெருமூச்சு விடுவீர்கள். சொந்த தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் உறவினர்களின் வருகை இருக்கும். சுப செலவு ஏற்படும். சிறிய அளவில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சுபநிகழ்ச்சிகள் தொடர்பான பேச்சுக்களை அடுத்த வாரம் தள்ளிப் போடுவது நல்லது. தினந்தோறும் கோவிலுக்கு சென்று நவகிரகங்களை வழிபாடு செய்வது நன்மை தரும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் மௌன விரதம் இருப்பது மிக மிக நல்லது. அதாவது தேவையற்ற இடங்களில் தேவையற்ற விஷயத்திற்காக வாயைத் திறக்கக் கூடாது, அப்படி என்றால் தப்பித்துக் கொண்டீர்கள். அனாவசியமாக வார்த்தையை விட்டால் பிரச்சனை உங்களுக்கு தான். மற்றபடி குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தேவையற்ற குழப்பங்கள் படிப்படியாக குறையத் தொடங்கும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு உண்டு. தைரியமும் தன்னம்பிக்கையும் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக நிற்கும். தினம் தோறும் அனுமன் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கப்போகின்றது. பணவரவும் இருக்கும். அதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. இருப்பினும் வந்த பணத்தை சேமிக்க முடியாது. வீட்டில் உறவினர்களின் வருகை இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய சாதுர்யமான பேச்சினால் சில விஷயங்களை சாதித்துக் கொள்வீர்கள். சொந்தத் தொழிலில் புத்திக் கூர்மையால் சில விஷயங்களை பிரச்சனை இல்லாமல் கையாண்டு அதில் சக்சஸும் அடைவீர்கள். இந்த வார தொடக்கத்தில் சில சொதப்பல்கள் இருந்தாலும், இந்த வார இறுதியில் மனமகிழ்ச்சி பெறுவீர்கள். தினம்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றத்தை தரக்கூடிய வாரமாக அமையப் போகின்றது. பதவி உயர்வு சம்பள உயர்வு, அரசு அதிகாரிகளுக்கு நீங்கள் எதிர்பாராத பிரமோஷன் அனைத்துமே ஒவ்வொன்றாக கிடைக்கப் போகின்றது. சிலர் வேலை விஷயமாக வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீட்டில் இருப்பவர்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. புதிய முயற்சிகள் வெற்றி தரும். கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது சின்னச் சின்ன சிக்கல்கள் வந்துபோகும். தினம்தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் செலவுகள் நிறைந்த வாரமாக இருக்கப்போகின்றது. ஒரு பக்கம் சுபச்செலவுகள் வந்தால், ஒரு பக்கம் வீண் விரயச் செலவுகள் வந்து தொல்லை கொடுக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. குழந்தைகளுடைய நலனில் இன்னும் கொஞ்சம் அதிக அக்கறை செலுத்த வேண்டும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். பொருளாதாரத்தில் எந்த சிக்கலும் கிடையாது. தெளிவான மனநிலையோடு நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். இந்த வாரம் 25, 26, 27, இந்த இந்த தேதிகளில் கொஞ்சம் கவனமாக இருங்கள். சந்திராஷ்டமம் உள்ளது. ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள்.

- Advertisement -