இந்த வார ராசிபலன் 03/1/2022 முதல் 9/1/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு நினைத்தது எல்லாம் நல்லபடியாக நடைபெறப்போகும் வாரம் இது. எந்த ஒரு வேலையாக இருந்தாலும் துணிச்சலாக ஒரு கை இறங்கி பார்த்து விடலாம் என்பதில் உறுதியாக இருப்பீர்கள். இதுநாள் வரை மந்தமாக இருந்த வியாபாரம் இனி சூடு பிடிக்கத் தொடங்கும். வியாபாரத்திற்கு தேவையான முதலீடு கடனாகக் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. தேவையற்ற கசப்பான சம்பவங்கள் உங்கள் வாழ்க்கையை விட்டு நீங்கிவிடும். இனி கவலை வேண்டாம். சந்தோஷமான எதிர்காலம் உங்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறது. தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மையை தரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அவசியம் தேவையான ஒரு விஷயம் பொறுமை. எந்த ஒரு முக்கியமான காரியமாக இருந்தாலும் ஒன்றுக்கு பல முறை சிந்தித்து முடிவெடுங்கள். அவசரப்படாதீர்கள், வருமானத்திற்கு அதிகமாக செலவுகள் காத்துக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். அதிக வட்டிக்கு அனாவசியமாக கை நீட்டி பணம் வாங்காதீர்கள். கூடுமானவரை செலவை கட்டுப்படுத்த பாருங்கள். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் மந்தமான போக்கு காணப்படும். தொழில்சாலையில் வேலை செய்பவர்களாக இருந்தால் உங்களுடைய கவனம் பல மடங்காக இருக்க வேண்டும். மெஷினில் வேலை செய்யும் போது கவனக் குறைவு கூடாது. தினம் தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி கொடுக்கக்கூடிய வாரமாகத்தான் இருக்கப்போகின்றது. தேவையற்ற வீண் விரயங்கள் வந்த இந்த வார இறுதியில் பிரச்சினை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. சொந்தத் தொழிலில் எதிர்பாராத லாபத்தைப் பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டிலிருக்கும் பெண்கள் குடும்ப உறவுகளை அனுசரித்துச் செல்ல வேண்டும். தினமும் பெருமாள் வழிபாடு பிரச்சினைகளுக்கு தீர்வு தரும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் துணிச்சலுடன் கூடிய வெற்றி கிடைக்கப் போகின்றது. வரக்கூடிய பிரச்சினைகளை துணிச்சலோடு எதிர்கொண்டு, சரியான போக்கில் கையாண்டு அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் சுமூகமான போக்கு நிலவும். பிரச்சினைகள் எதுவும் இருக்காது. இந்த வாரம் முழுவதும் இறைவழிபாட்டில் உங்களுடைய மனதை ஈடுபடுத்த போகிறீர்கள். குறிப்பாக குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. வீடு வாகனம் நிலம் போன்ற அசையும் அசையா சொத்துகளை வாங்குவதற்கு இந்த வாரம் முயற்சிக்கலாம். தினமும் ஐயனார் வழிபாடு மன தைரியத்தை அதிகரிக்கும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிம்மதியான வாரமாக இருக்கப்போகின்றது. தேவையற்ற பிரச்சினைகளில் சிக்கி இருந்த மனக்குழப்பத்திற்கு எல்லாம் தீர்வு கிடைக்கும். கைக்கு வரவேண்டிய பணம் வந்துசேரும். கடன் பிரச்சனை இருக்காது. பேசும்போது மட்டும் கொஞ்சம் உஷாராக பேசுங்கள். தந்திரமாக பேசி காரியத்தை சாதித்துக் கொண்டால்வது உங்களுடைய புத்திசாலித்தனம். வாக்குவாதத்தில் ஈடுபட்டால் நிச்சயமாக எந்த வேலையும் நடக்காது. சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் அந்தந்த வேலைகள் அந்த நேரத்தில் சரியாக நடந்து முடிந்து விடும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். தினம்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அற்புதமான வாரமாக இருக்கப்போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். கிடப்பில் கிடந்த முடிக்க முடியாத நிறைய வேலையை இந்த வாரம் கையில் எடுத்து முடிக்கப் போறீங்க. வெளியூர் பயணம் செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. வெளியூருக்கு செல்வதாக இருந்தால் ஜாக்கிரதை. மாஸ்க் அணியாமல் வெளியில் செல்ல வேண்டாம். இதுநாள் வரை இருந்த அலைச்சல் படிப்படியாக குறையத் தொடங்கும். ஆனால் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும்‌. எல்லாம் நன்மைக்கே. குடும்பப் பெண்கள் கொஞ்சம் பொறுமை காப்பது குடும்பத்திற்கு நன்மை தரக்கூடிய விஷயமாக இருக்கும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் மகிழ்ச்சியான வாரம் தான். எந்த கவலையும் இருக்காது. சந்தோசமாக நேரத்தை கழிக்க போகிறீர்கள். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளிடம் பாராட்டுக்கள், சொந்த தொழிலில் நீங்கள் எதிர்பார்க்காத புதிய ஆர்டர்கள் கிடைக்கப் போகின்றது. நல்ல முன்னேற்றம் கிடைக்கப் போகின்றது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடு அகலும். வீண் செலவு குறையும். கடன்தொகை வசூலாகும். உங்களுடைய திறமையான செயல்பாடுகள் நல்ல பாராட்டை வாங்கிக் கொடுக்கும். தினம் தோறும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மனம் தெளிவாக இருக்கப் போகின்றது. ஏதோ ஒரு குழப்பத்தில் இருந்த நீங்கள் எல்லா பிரச்சினைகளிலிருந்தும் வெளிவர போகிறீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் மூலம் சில நல்லது நடக்க தொடங்கும். உறவினர்களின் மூலம் இந்த வார இறுதிக்குள் ஏதாவது ஒரு ஆதாயம் கிட்டும். வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத போனஸ் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. இன்சென்டிவ் மாதிரி ஏதாவது நிச்சயமா கொடுப்பாங்க. சில பேருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் கவலைகள் வந்து தொல்லை கொடுக்கும். தவிர மற்றபடி இந்த வாரம் முழுவதும் நிறைவான வாரமாக தான் இருக்கப் போகின்றது. தினம்தோறும் குலதெய்வ வழிபாடு மன நிம்மதியை கொடுக்கும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எல்லா விஷயங்களும் நல்லபடியாக நடக்கும். எதிர்பாராத பண வரவிற்கு வாய்ப்பு உள்ளது. தேவையற்ற சில்லரை கடன் பிரச்சனைகளை திருப்பி கொடுத்து விடுவீர்கள். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாக நிறையவே வாய்ப்புகள் உள்ளது. தொழிலில் சீரான முன்னேற்றம் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் உடன் வேலை செய்பவர்களை கொஞ்சம் அனுசரித்து சென்றால் வெற்றி உங்கள் பக்கம். போட்டி பொறாமைகள் நிறைந்த இந்த உலகத்தில் கண்ணியம் கட்டுப்பாடுடன் சேர்ந்த, தந்திரமும் தேவை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். குடும்பத்திற்கு தேவையான நேரத்தை கொடுங்கள். குடும்பத்துடன் நேரத்தை செலவழியுங்கள். சந்தோஷம் அதிகரிக்கும். தினம் தோறும் வீட்டில் ஆஞ்சநேயரை நினைத்து வழிபாடு செய்வது நல்ல பலன்களை கொடுக்கும்.

மகரம்:
மகர ராசி காரர்களுக்கு சிந்தனையும் செயல்படும் திறனும் அதிகரிக்கப் போகின்றது. எந்த வேலையாக இருந்தாலும் அதில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு செயலாற்றி வெற்றி காணப்போகிறீர்கள். புகழின் உச்சிக்கே செல்வதற்குக் கூட வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யுமிடத்தில் பாராட்டுகள் குவியும். சொந்தத் தொழிலில் எதிர்பாராத சாதனை புரிவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். குடும்பத்தில் இருந்த மன சஞ்சலங்கள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் பேச்சை கேளுங்கள். நீங்கள் கணவனாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி, ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து, ஒருவருக்கொருவர் சொல்வதை கேட்டாலே போதும். வாழ்க்கையில் முன்னேறி விடலாம். தினம்தோறும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
கும்ப ராசி காரர்களுக்கு குடும்பத்தில் சந்தோஷத்திற்கு இந்த வாரம் எந்த குறையும் இருக்காது. எடுத்த புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக வெற்றியை கொடுக்கும். சொந்தத் தொழிலில் இருந்துவந்த இடர்பாடுகள் படிப்படியாக குறையும். வேலை செய்யும் இடத்தில் இருந்த வேலைப்பளு குறையும். மேலதிகாரிகளின் அனுசரணை ஒத்துழைப்பு கிடைக்கும். கூடுமானவரை அதிக வட்டிக்கு கடன் வாங்குவதை தவிர்த்து கொள்ளுங்கள். வரவுக்கேற்ற செலவு செய்வது நல்லது என்பதை பழகிக் கொள்ளுங்கள். கடன் பிரச்சனை கடைசியில் கழுத்தை இருக்கும் என்பதை மறவாதீர்கள். தினந்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். துணிச்சலாக சில விஷயங்களை செய்துதான் பார்ப்போமே என்று காலடி எடுத்து வைப்பீர்கள். நீங்கள் காலடி எடுத்து வைத்த அந்த காரியம் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக வெற்றியை தரும். வேலை செய்யும் இடத்தில் இதனால் வரை இருந்து வந்த கஷ்டம் இனி படிப்படியாக குறையத் தொடங்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் அடுத்தடுத்து நல்ல காரியங்கள் நடைபெற இருக்கின்றது. சுப செலவுகள் வரும். அதற்கான சேமிப்பை உயர்த்த தினம்தோறும் வாராஹி அம்மன் வழிபாடு வரத்தை தரும்.

- Advertisement -