இந்த வார ராசிபலன் 30/01/2023 முதல் 05/02/2023 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

varapalan4
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சிக்கல் நிறைந்த வாரமாக தான் இருக்கும். செலவுகளை சமாளிக்க ரொம்பவும் சிரமப்படுவீர்கள். வருமானத்தில் பிரச்சனை, கடன் பிரச்சனை, என்று பிரச்சனைகள் வரிசை கட்டி நிற்கும். தொழிலில் ஏற்பட்ட சின்ன சின்ன சிக்கல்கள் விலகும். வேலை பார்க்கும் இடத்தில் மன நிம்மதி கிடைக்கும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். அலைச்சலின் காரணமாக உடல் உபாதைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உறவுகளை அனுசரித்து செல்ல வேண்டும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் சந்தோஷம் நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். வருமானம் ஓரளவுக்கு அதிகரிக்க தொடங்கும். செலவுகளை கட்டுப்படுத்துங்கள். சேமிப்பை இரண்டு மடங்காக உயர்த்துங்கள். எதிர்காலத்திற்கு நல்லது. கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில் சில சமயம் சிக்கல் ஏற்படும். யாருக்கும் அவசியமாக வாக்கு கொடுக்காதீங்க. குறிப்பாக பண விஷயத்தில். நல்ல நல்ல வாய்ப்புகள் வீட்டு வாசல் கதவை தட்டும், வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது. தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அயராது உழைத்தால் தான் வெற்றி கிடைக்கும். கொஞ்சம் சோம்பேறித்தன பட்டு, சுறுசுறுப்பை இழந்தாலும், எல்லா வேலையிலும் பிரச்சனை தான். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். குடும்ப உறவுகளிடம் பாசத்தை காட்டுங்கள். மனைவிக்கு பிடித்த ஆடம்பர பொருட்களை, பரிசு பொருட்களாக வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சி அடையச் செய்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு கை நிறைய பணம் சேரும். தினம் தோறும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை அவசியம் தேவை. எந்த விஷயத்திலும் முன்கோபம் படக்கூடாது. அதனால் நிறைய இழப்புகள் ஏற்படும். பணத்தை இழக்கலாம். சில உறவுகளை கூட நிரந்தரமாக இழக்க கூடிய சூழ்நிலை கூட ஏற்படும். வார்த்தைகளை கோபத்தில் பேசும்போது ஜாக்கிரதையாக பேசுங்கள். வேலையில் நல்ல சுறுசுறுப்பு இருக்கும். அடுத்த மாதம் செய்ய வேண்டிய வேலையை கூட இந்த மாதமே செய்து முடித்து, நல்ல பெயர் வாங்குவீர்கள். மனது நிம்மதி பெறும். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும். திருமணம் கைகூடி வரும். மனதிற்கு பிடித்த வரன் அமையும். வெளிநாட்டிற்கு சென்று படிக்க வேண்டும், வேலை செய்ய வேண்டும் என்ற கனவு நினைவாகும். சொத்து சுக சேர்கை உண்டு. மருத்துவ செலவு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பார்த்துக்கோங்க, தினம் தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிறைய நன்மைகள் நடக்கப் போகின்றது. வேலையில் இட மாற்றம், சம்பள உயர்வோடு கிடைத்தால் ஏற்றுக் கொள்ளலாம். வாடகை வீடு மாற்றக்கூடிய சூழ்நிலை ஏற்படும். சொந்த வீடு வாங்கக்கூடிய யோகம் சிலருக்கு உண்டு. சொந்த தொழிலில் வியாபாரம் நல்லபடியாக நடந்தாலும், போட்டி பொறாமைகள் அதிகமாக இருக்கும். சமாளிப்பதில் சில சிக்கல்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் அதிகரிக்கும். வண்டி வாகனங்களில் செல்லும்போது அதிக கவனம் தேவை. ஹெல்மெட் அணிந்து கொள்ளுங்கள். அதிக வேகமாக வண்டி ஓட்டாதீர்கள். உங்களுடைய துணிச்சல் ஒரு சில இடங்களில் உங்களுக்கு நல்ல பெயரை வாங்கி தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகை இருக்கும். சுபச் செலவுகள் ஏற்படும். தினம் தோறும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி பெறக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். புதிய வேலைக்கு செல்லலாம். புதிய தொழில் தொடங்கலாம். பெரியதாக எந்த பிரச்சனையும் இருக்காது. வெளியிடங்களுக்கு செல்லும்போது உங்களுடைய பொருட்களை கொஞ்சம் ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள். முக்கியமான பொருட்களை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். குடும்ப விஷயங்களையும் அடுத்தவர்களை நம்பி பகிர்ந்து கொள்ளாதீங்க. பிரச்சனையை பெரிதாக்கி விடுவார்கள். வாரத் தொடக்கத்தில் கொஞ்சம் நிதானம் தேவை. எல்லா விஷயத்திலும் சிந்தித்து செயல்பட வேண்டும். தினம் தோறும் அனுமன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் பணம் சம்பாத்தப்பட்ட விஷயத்தில், சொந்த தொழிலில் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். எதிலும் அலட்சியமாக இருக்கக் கூடாது‌. ஏதாவது ஒரு வகையில் யாரிடம் ஆவது ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஜாக்கிரதை, கையில் இருக்கும் பணம் தண்ணீராக செலவாகும். செலவை கட்டுப்படுத்துங்கள். சிக்கனத்தை உயர்த்துங்கள். உறவுகள் மிக நாசுக்கானவை. முன்கோபத்தால் அதை உடைத்துக் கொள்ள வேண்டாம். பணம் காசு இருந்தாலும் பிரச்சனை என்று வரும் போது நம்மை தாங்கி பிடிப்பது நம்முடைய உறவுகள். ஆகவே உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சொத்து சுகம் வாங்குவதற்கான யோகம் உள்ளது. இந்த வாரம் 30, 31 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. தினமும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. நீங்கள் எந்த வேலையை செய்தாலும் அதில் கஷ்டம் வந்தாலும், அடுத்தவர்கள் வந்து தானாகவே உங்களை கைதூக்கி விடுவார்கள். நெருங்கிய உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் யாரும் உங்களை விட்டுக் கொடுக்க மாட்டாங்க. அதே சமயம் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. வாக்குவாதம் செய்ய வேண்டாம். கணவன் மனைவி இருவருக்குள் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து தான் செல்ல வேண்டும். தொழில் சிறப்பாக நடக்கும். தடைபட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் மேல் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். தினம்தோறும் முருகர் வழிபாடு நன்மை தரும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக நிறைவேறாத ஆசைகளை எல்லாம் கூட, இந்த வாரம் நிறைவேற்றிக் கொள்ளலாம். எந்தவித தடங்களும் ஏற்படாது. புதியதாக சொத்து சுகம் வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் நாசுக்காக பேசி, நாசுக்காக நடந்து கொள்ளுங்கள். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வாடிக்கையாளர்களிடம் கெட்ட பெயர் வாங்கி விட்டால், வியாபாரம் சிறப்பாக நடக்காது. பந்தயங்களில் வெற்றி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இருந்தாலும் சூதாட்டத்தில் ஈடுபடுவது என்பது தவறுதான். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டைகள் வரும். பிள்ளைகளுடைய படிப்பில் கவனம் செலுத்தச் சொல்லுங்கள். அவர்களுடைய நடவடிக்கைகளை கவனியுங்கள். உறவினர்களோடு நண்பர்களோடு சந்தோஷமாக நேரத்தை கழிக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். தினம்தோறும் ஸ்ரீ ராம ஜெயம் மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சிரமம் தரக்கூடிய வாரமாக தான் இருக்கப் போகின்றது. எந்த ஒரு விஷயத்தை தொட்டாலும், அது இழுத்துக் கொண்டு இருக்கும். வீண் அலைச்சல் ஏற்படும். நீண்ட தூரம் பயணம் செய்யாமல் இருப்பது நல்லது. பொறுப்பான வேலை என்றால் உங்களுடைய வேலையை நீங்களே செய்து விடுங்கள். உங்களுடைய வேலை அடுத்தவர்களிடம் ஒப்படைக்காதீங்க. உங்களுக்கு கெட்ட பெயர் வந்துவிடும். பணவரவு சீராக இருக்கும். கடன் பிரச்சினை படிப்படியாக குறையும். கலைத்துறையினர் அரசியல்வாதிகளுக்கு இந்த வாரம் சிறப்பாக அமையும். சொந்த தொழிலை கவனமாக நடத்திச் செல்ல வேண்டும். தொழிலை விரிவு படுத்த வேண்டாம். புதிய முதலீட்டையும் செய்ய வேண்டாம். தினம்தோறும் நவகிரக வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் படிப்படியாக பிரச்சனைகள் குறையும். கடந்த வாரம் நிறைய சிரமங்களை எதிர்கொண்டு இருப்பீர்கள். குடும்பத்தில் சண்டை சச்சரவு, வாக்குவாதம் என்ற சூழல் நிலவி இருக்கும்  மன நிம்மதி இல்லாமல் இருத்திருக்கும். அந்தப் பிரச்சனைகள் எல்லாம் ஒவ்வொன்றாக படிப்படியாக சரியாக தொடங்கும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அனாவசியமாக யாரையும் எதிர்த்து பேசாதீங்க. சில பேர் குடும்பத்தை விட்டு, வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை கூட ஏற்படும். வேலைக்காக தான். கடன் பிரச்சனை படிப்படியாக குறையும். இனிவரும் காலம் உங்களுக்கு நல்லபடியாக அமையும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அனுபவரீதியாக நிறைய பாடம் கிடைக்கும். வாழ்க்கையில் செய்த தவறுகளை எல்லாம் நினைத்து வருத்தப்படுவீர்கள். ஆனால், இறந்து போன நேற்றைய நாளை நினைத்து ஒரு பிரயோஜனமும் இல்லை. இனிமேலாவது செய்த தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள். பணத்தின் அருமை பெருமைகளை தெரிந்து கொள்ளுங்கள். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பை உயர்த்துங்கள். ஆனாலும் முட்டி மோதி எதிரிகளுக்கு சவால் விடுவீர்கள். உங்களை வீழ்த்த யாராலும் முடியாது. செலவுகளை சரி செய்யும் அளவுக்கு வருமானம் கிடைக்கும். முடிந்தால் குடும்பத்தோடு ஒருமுறை குலதெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள். தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -