இந்த வார ராசிபலன் 31/1/2022 முதல் 6/2/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு.

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த வாரமாக இருக்கப்போகின்றது. வாராக் கடன் வசூலாகும். கையில் நிறைய பணம் புழங்க ஆரம்பிக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எதிர்பாராத பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. திருமண தடை நீங்கும். சொத்துசுகம் வாங்க கூடிய யோகம் ஏற்படும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவச் செலவு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தினம்தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். எந்த விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது. நிதானமாக ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து முடிவுகளை எடுக்கவேண்டும். பண விஷயங்களில் அதிக கவனம் தேவை. யாரை நம்பியும் பணம் கொடுக்காதீர்கள். யாரிடம் இருந்தும் கடனாக பணத்தை வாங்காதீர்கள். நீங்கள் ஜாமீன் கையெழுத்து போட்டு மூன்றாவது நபருக்கு காசு வாங்கி கொடுக்காமல் இருப்பது ரொம்பவும் நல்லது. ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். சொந்தத் தொழிலில் லாபம் எப்போதும்போல கிடைக்கும். அலுவலகத்தில் வேலைப்பளு சற்று அதிகமாக காணப்படும். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தொட்ட காரியம் எல்லாம் வெற்றி அடைய கூடிய வாரமாக இருக்கப்போகின்றது. நீண்ட நாட்களாக முடிக்காமல் இருக்கும் சில காரியங்களை இந்த வாரம் சட்டென முடித்து விடுவீர்கள். சொந்த தொழிலில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். பார்ட்னரை நம்பி அதிகமாக முதலீடு செய்ய வேண்டாம். தொழிலை விரிவுபடுத்த வேண்டாம். பண வரவுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. வருமானம் சீராக இருக்கும். வீட்டில் மட்டும் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உறவினர்களை அனுசரித்து செல்லுங்கள். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். கணவன்-மனைவிக்குள் சண்டை வந்தால் யாராவது ஒருத்தர் அமைதியாக இருங்கள். தினம்தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அற்புதமான நிறைய பலன்கள் இருக்கின்றது. வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். வாராக் கடன் வசூலாகும். வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கத் தொடங்கும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். ஆனால் அதேசமயம் குடும்ப விஷயங்களில் ரொம்பவும் கவனமாக இருக்கவேண்டும். உங்களுடைய குடும்ப பிரச்சனைகளை மூன்றாவது மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பிப்ரவரி மாதம் வரக்கூடிய 2, 3 தேதிகளில் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். சந்திராஷ்டமம் உள்ளது. வண்டி வாகனங்களில் செல்லும் போது அதிக கவனம் தேவை. மனதிற்குள் ஓம் நமசிவாய மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரும் வாரமாக இருக்கப்போகின்றது. புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். புதிய வேலையைத் தேடலாம். புதியதாக தொழில் தொடங்கலாம். முதலீட்டை அதிகப்படுத்தலாம். ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு இந்த வாரம் அமோகமான லாபம் உண்டு. கோர்ட் கேஸ் வழக்குகள் உங்கள் பக்கம் சாதகமாக தீர்ப்பாகும். படிப்படியாக கடன் தொல்லைகள் குறைந்து வரும். வீட்டில் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கை கூடி வரும். தினம்தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் தரக்கூடிய வாரமாக அமையப்போகின்றது. குடும்பத்தில் இருந்து வந்த சின்ன சின்ன பிரச்சனைகள் கூட சரியாகிவிடும். உங்களுடைய குழந்தைகளின் மூலம் மன மகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பாராத யோகம் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து உங்களை சந்தோஷப்படுத்தும். குடும்பத்தோடு குல தெய்வ கோவிலுக்கு சென்று நன்றி தெரிவித்து விட்டு வாருங்கள். வேலை சம்பந்தமாக வெளியூர் செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்படும். மாஸ்க் அணிந்து கொண்டு செல்ல வேண்டும். கூடுமானவரை பிரயாணத்தின் போது ஆரோக்கியத்தில் அதிக கவனம் காட்ட வேண்டும். தினம்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் யோகம் நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. நீங்கள் எதைத் தொட்டாலும் அது உங்களுக்கு நன்மை தான். எதைத் தொட்டாலும் அது உங்களுக்கு லாபம் தரக்கூடிய விஷயமாக தான் அமையும். ஆகவே சந்தோஷமாக இந்த வார நாட்களை கழித்து செல்லலாம். ஆனால் குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ரொம்பவும் உஷாராக இருக்க வேண்டும். வீட்டில் இருப்பவர்களுடைய உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக பெண்கள் தங்களுடைய ஆரோக்கியத்தில் கவனத்தைச் செலுத்த வேண்டும். தினம்தோறும் காலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்வது நன்மை தரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரை இருந்து வந்த பிரச்சினைகளுக்கு படிப்படியாக விமோசனம் கிடைக்க தொடங்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள், சொந்தத் தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள், குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள், இப்படியாக எல்லா பிரச்சினைகளிலிருந்தும் வெளிவந்து பெருமூச்சு விடுவீர்கள். பூர்விக சொத்து மூலம் சில பணவரவு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அந்த பணத்தின் மூலம் சொத்து சேர்க்கும் வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய உறவினர்களின் அருமை பெருமைகளை தெரிந்து கொள்ளக் கூடிய சில விஷயங்கள் நடக்கும். தினம் தோறும் குரு பகவான் வழிபாடு நன்மை தரும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல பலன்கள் இருந்தாலும் கூடவே சின்ன சின்ன பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சந்தோஷமாக வேலைக்கு செல்வீர்கள். வேலையை சுறுசுறுப்பாக முடிக்கவும் செய்வீர்கள். ஆனால் ஏதாவது ஒரு சமயத்தில் தேவையில்லாத பிரச்சனையில் மூக்கை நுழைத்து பிரச்சனையில் சிக்கிக் கொள்வீர்கள். கூடுமானவரை அடுத்தவர்களுடைய விஷயத்தில் தலையிடாமல் மௌனமாக இருப்பது மிக மிக நல்லது. பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். யார் வம்புக்கும் போக வேண்டாம். உங்கள் வேலையை நீங்கள் பார்த்தால் இந்த வாரம் தப்பித்துக் கொள்ளலாம். சின்ன சின்ன சண்டை என்று சொல்லி கை கலப்பு போவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. இருப்பினும் எல்லா பிரச்சனையும் சமாளிக்ககூடிய தன்னம்பிக்கை தைரியம் உங்கள் மனதில் இருக்கும். தினம் தோறும் அனுமன் வழிபாடு செய்யுங்கள்.

மகரம்:
மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் சிக்கனமாக இருக்கவேண்டும். வீண் விரயங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு ஒன்று மட்டும் தான் எதிர்காலத்திற்கு நல்லது என்பதை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் அசத்தலான பேச்சினால் அனைவரையும் கவர்ந்து இருப்பீர்கள். சாதுர்யம் வெளிப்படும். உங்கள் திறமையை பார்த்து அனைவரும் பாராட்டுவார்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி வாழ்க்கை துணையை சந்தோஷப்படுத்தவீர்கள். எதிர்பாராத சில மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். தினம்தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் யோகமான வாரமாக இருக்கப் போகின்றது. எதிர்பாராத பணவரவு வந்து உங்களை சந்தோஷத்தில் மூழ்கடித்து விடும். பணம் வந்தவுடன் அனாவசியமாக செலவு செய்ய வேண்டாம். உங்களுக்கு இருக்கும் கடனை திருப்பிக்கொடுக்க பாருங்கள். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். உயர் பதவிகள் தேடி வரும். உங்கள் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. உங்கள் வீட்டில் உள்ளவர்கள் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள். பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். தினம்தோறும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சில மாற்றங்கள் வரக்கூடிய வாரமாக இருக்கப்போகின்றது. நீங்கள் எதிர்பார்க்காத நிறைய விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கும். எதிர்பாராத நல்ல வேலை திடீரென்று கிடைக்கும். இருக்கின்ற வேலையை விட்டு திடீரென்று வேறு வேலைக்கு மாறுவீர்கள். சொந்தத் தொழிலில் எதிர்பாராத அதிக லாபம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. பாராட்டுக்கள் ஒன்றன்பின் ஒன்றாக உங்களைத் தேடி வரும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் அமோகமான நல்ல பலன்களை கொடுக்க போகின்றது. பொருளாதார நிலையில் எந்த பிரச்சனையும் இருக்காது. இந்த வார இறுதியில் சில வீண் விரயங்கள் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இதுநாள் வரை இருந்த குழப்பம் எல்லாம் நீங்கி, உங்களுடைய வேலையை சுறுசுறுப்பாக செய்ய தொடங்கி விடுவீர்கள். தினம்தோறும் கோவிலுக்கு சென்று இறைவழிபாடு செய்து விட்டு நவகிரகங்களை ஒன்பது முறை சுற்றி வருவது நன்மை தரும்.

- Advertisement -