இந்த வார ராசிபலன் 10/07/2023 முதல் 16/07/2023 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

varapalan3
- Advertisement -

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரக்கூடிய வாரமாக தான் இருக்கப் போகின்றது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் வேலை சுமை அதிகமாக இருக்கும். இருந்தாலும் அதையெல்லாம் சமாளிக்கும் அளவுக்கு தெளிவும் திறமையும் உங்களிடத்தில் உள்ளது. தொழிலில் கூடுதல் கவனம் எடுத்து சில முடிவுகளை எடுக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம். முன்பின் தெரியாதவர்களிடம் எந்த ஒரு புது டீலர்ஷிப்பும் வச்சுக்காதீங்க. தொலைபேசியின் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். வாரா கடன் வசூல் ஆகும். முன் பின் தெரியாதவர்களிடம் உங்களுடைய குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு உண்டாக வாய்ப்புகள் உள்ளது. வீண் விவாதம் செய்யாதீங்க. உறவுகளை விட்டுக் கொடுத்து பழகுங்கள். அனாவசியமான வார்த்தைகளை பேசவே கூடாது. முன்கோபத்தை குறைக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூடுதல் கவனம் தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. உங்கள் வேலையை மட்டும் நீங்கள் பார்த்தால் நல்லது. அடுத்தவர்களுடைய வேலையில் தலையிட்டால் பிரச்சினை தான் ஜாக்கிரதை.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திட்டமிட்ட வேலைகள் எல்லாம் சரியாக நடக்காது. என்னதான் கஷ்டப்பட்டாலும் நினைத்ததை செய்ய முடியாமல் கொஞ்சம் திண்டாட்டம் இருக்கும். புதிய முயற்சிகளை அடுத்த வாரம் தள்ளிப் போடவும். தொழிலில் புதிய முடிவுகளை எடுக்க வேண்டாம். மற்றபடி குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். சுப காரிய நிகழ்ச்சிகள் சுமூகமாக நடக்கும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இடம் மாற்றம் நன்மையை தரும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசி காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கப் போகிறது. பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். கணவன் மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். மனதிற்கு பிடித்த வேலையை செய்வீர்கள். சந்தோஷமாக இருப்பீர்கள். நிம்மதியான தூக்கம் இருக்கும். வருமானத்திற்கு பிரச்சனை இருக்காது. சேமிப்பு உயரும். வியாபாரத்தில் உஷாராக இருந்து கொள்ளுங்கள். பங்குதாரர்களை முழுமையாக கண்ணை மூடிக்கொண்டு நம்ப வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனம் இருக்கட்டும்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிக்கல்கள் நிறைந்த வாரம் ஆகத்தான் இருக்கும். வியாபாரத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். சொன்ன டைமுக்கு ஆடர் டெலிவரி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் வேலை பளு அதிகம் இருக்கும். என்னதான் வேலை செய்தாலும் நல்ல பெயர் கிடைப்பதில் சிரமம் இருக்கும். மேலதிகாரிகளின் பேச்சுக்கு காது கொடுங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். குறுக்கு வழியில் செல்ல கொஞ்சமும் யோசிக்காதீங்க. நல்லதோ கெட்டதோ நேர் வழியில் செல்வது நல்லது. இந்த வாரம் 10, 11 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம், ஜாக்கிரதை.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எல்லா விஷயத்திலும் ஆர்வம் அதிகம் இருக்கும். எதையாவது சாதித்தே ஆக வேண்டும் என்று வாழ்க்கையை போராட்டத்தோடு நகர்த்தி செல்வீர்கள். வாழ்க்கையில் முன்னேறியே ஆக வேண்டும் என்ற வெறி உங்கள் மனதிலும் இருக்கும். கண்களிலும் தென்படும். ஆனால் ஏனோ தெரியவில்லை. பிரச்சனைகள் வந்து சூழ்ந்து நம்மை ஒரு படி கூட முன்னேற விடாமல் செய்யும். அதனால் மனசோர்வு அடையக்கூடும். கவலைப்படாதீங்க இந்த வார இறுதியில் உங்களுக்கு எல்லாம் நன்மையாகவே நடக்கும். விடாமுயற்சி நிச்சயம் விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். முயற்சிகளை கைவிட வேண்டாம்.

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பெயரும் புகழும் தேடிவரும். நீங்கள் செய்த வேலை செய்யாத வேலை எல்லாவற்றிற்கும் உங்களை சுற்றி இருப்பவர்கள் பாராட்டி தள்ளப் போகிறார்கள். சந்தோஷத்தில் திக்கு முக்காட போகிறீர்கள். புதிய முயற்சி வெற்றியைத் தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. சில பேருக்கு அவார்ட் எல்லாம் கிடைத்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு கிடையாது. சொந்தத் தொழிலில் நல்ல லாபம் இருக்கும். உற்சாகமாக செயல்பட்டு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் ஏற்றம் இறக்கம் நிறைந்த வாரமாகத் தான் இருக்கும். பெரியதாக துன்பம் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. சின்ன சின்ன சிக்கல்கள் இருக்கும். அதே சமாளித்துக் கொள்வீர்கள். சுப காரிய நிகழ்ச்சிகளை மட்டும் அடுத்த வாரம் தள்ளிப் போட்டுக் கொள்ளுங்கள். ஆடி மாதம் முடிந்ததும் நல்ல விஷயத்தை பற்றி பேசலாம். எல்லா விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவு எடுக்காமல் அதற்கான காலமும் நேரமும் கொடுப்பது நன்மையை தரும். எதுவுமே தெரியாத விஷயத்தில் காலை விடாதீங்க. அது எதிர்காலத்தில் பிரச்சனையை கொடுத்து விடும்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் த்ரில்லான வாரமாக இருக்கப் போகின்றது. ஆமாங்க இது நடக்குமோ, நடக்காதோ என்ற பயம் உங்களுடைய மனதிற்குள் இருந்து கொண்டே இருக்கும். இரவில் தூக்கம் வராது. அந்த பிரச்சனை, இந்த பிரச்சனை என்று எல்லாவற்றையும் மனதில் போட்டு குழப்பிக் கொண்டே இருப்பீர்கள். ஆனால் இறைவன் என்ன நினைக்கிறானோ அதுதான் நடக்கும் என்று கவலைகளை விட்டு தள்ளுங்கள். அப்போதுதான், இரவில் நல்ல தூக்கத்தை பெறுவீர்கள். மனக்குழப்பமான இந்த சமயத்தில் எந்த புது முடிவையும் எடுக்க வேண்டாம். தினமும் உங்களுக்கு பிடித்த கோவிலுக்கு சென்று பிடித்த தெய்வத்தை வணங்கி மனதை அமைதிப்படுத்தி தியானம் செய்யுங்கள். மணக்குழப்பத்திலிருந்து வெளிவந்து விடுவீர்கள்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எல்லாம் வெற்றி தான். நீங்கள் கையை வைத்த இடம், காலை வைத்த இடம் எல்லாம் நல்லது நடக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். சொந்த பந்தங்கள் உங்களுடைய முன்னேற்றத்திற்கு தோள் கொடுக்கும். உங்களை ஊக்குவிக்க வாழ்க்கை துணை வழி காட்டுவார்கள். எதிரிகள் என்னதான் சூழ்ச்சி செய்தாலும் உங்களை ஆட்டவோ அசைக்கவோ முடியாது. தந்திரமாக செயல்பட்டால் குள்ளநரி வேலை செய்து உங்களை வீழ்த்த வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட உங்களிடம் சரண் அடைந்து விடுவார்கள் என்றால் பாருங்களேன். அவ்வளவு அதிர்ஷ்டம் உங்களுக்கு இந்த வாரம்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன நிம்மதியான வாரமாக இருக்கும். சந்தோஷமாக குடும்பத்தோடு நேரத்தை கழிப்பீர்கள். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் கூட குடும்பத்தோடு இருக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் நீங்கள் நட்பு வட்டாரத்திலும் சுற்று வட்டாரத்திலும் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும். முன்பின் தெரியாத மனிதர்களோடு நட்பு வைத்துக் கொள்ளக் கூடாது. முன்பின் பழக்கம் இல்லாதவர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ள கூடாது. பண வரவு சீராக இருக்கும்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எல்லாம் நல்லதாகவே நடக்கும். நீங்கள் உஷாராக இருந்தால் மட்டும். யாரையும் நம்பாதீங்க. உங்களை நிறைய பேர் ஏமாற்றுவதற்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். மூன்றாவது நபரின் பேச்சை கேட்கவே கூடாது. வாழ்க்கைத் துணை பேச்சை கேளுங்கள். தொழிலில் கணக்கு வழக்குகளை சரியாக கவனியுங்கள். வேலை செய்யும் இடத்தில் ரொம்பவும் நெருங்கிய நண்பரையும் முழுசாக நம்பக் கூடாது. எல்லா விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள கூடாது. முதலாளிக்கு உண்மையாக இருந்தால் மட்டும் போதும். இருக்கும் வேலையை விட்டு வேறு வேலைக்கு முயற்சி செய்வதாக இருந்தால் செய்யலாம். ஆனால் புதுசாக வேலை கிடைக்கும் வரை இருக்கிற வேலையை விடக்கூடாது.  யாரையும் நம்பாமல் எல்லா விஷயத்திலும் சரியாக இருப்பவர்களுக்கு பிரச்சனை இல்லை. கண்மூடித்தனமாக முழுசாக அடுத்தவர்களை நம்பியவர்கள் மோசம் போவதற்கு வாய்ப்பு உண்டு.

- Advertisement -