இந்த வார ராசிபலன் 17/07/2023 முதல் 23/07/2023 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

varapalan4
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரக்கூடிய வாரமாகத் தான் அமையப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் நீங்கள் எதிர்பாராத முன்னேற்றம் கிடைக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல வேலை கிடைக்கும். நீங்கள் நினைத்த சம்பளத்தில் மன நிறைவான இடத்தில் வேலை கிடைப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது.

இடமாற்றம் கிடைத்தால் சந்தோஷமாக அதை ஏற்றுக்கொள்ளலாம். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டனைகள் அவ்வப்போது வரும். ஆனால், இந்த வார இறுதியில் எல்லாம் சரியாகிவிடும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். சொந்த தொழில் அமோகமான வெற்றியை கொடுக்கும். ஆடி மாதம் முடிவதற்குள் அம்மன் கோவிலுக்கு சர்க்கரை பொங்கல் நிவேதனமாக செய்து தருவது நன்மை தரும்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி வாய்ப்புகள் குவியும். பெயர் புகழ் தேடி வரும். சந்தோஷம் அதிகரிக்கும். வாரா கடன் வசூல் ஆகும். நீண்ட நாள் இருந்த மன குழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏதாவது பிரச்சனை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகவும். வேலையில் எவ்வளவு அக்கறை செலுத்துகிறீர்களோ, அதே அளவுக்கு குடும்பத்திலும் அக்கறை செலுத்த வேண்டும். வண்டி வாகனம் ஓட்டும்போது ஜாக்கிரதையாக இருக்கவும். ஆடி மாதம் முடிவதற்குள் ஏதாவது அம்மன் கோவிலில் எலுமிச்சம்பழம் மாலை சாத்துவது நன்மையை கொடுக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் கூடுதல் செலவு இருக்கும். எவ்வளவுதான் வருமானம் கைக்கு வந்தாலும் உடனடியாக காலி ஆகிவிடும். அதையும் தாண்டி கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஆனால் அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க. கூடுமானவரை அனாவசிய சொல்லவை குறைக்க பாருங்கள்.

வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். நாளை செய்து கொள்ளலாம் நாளை செய்து கொள்ளலாம், என்று தள்ளிப் போடக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். சொந்தத் தொழிலில் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டாம். செய்யக்கூடிய வேலையை சரியாக செய்தாலே லாபம் உண்டு. ஆடி வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலில் குங்குமம் அபிஷேகம் செய்து வைப்பது சிறப்பான பலனைத் தரும்.

- Advertisement -

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அவசியம் தேவையான ஒரு விஷயம். பொறுமை, எதிலும் அவசரப்படக்கூடாது. உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். உறவினர்களிடம் ஜாக்கிரதையாக பேச வேண்டும். எதிரிகளிடம்  மோதி போராட வேண்டாம். எதிரிகள் என்று தெரிந்தால் விட்டு விலகி விடுங்கள்.

பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். ஆடி மாதம் வீட்டின் அருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு உங்கள் கைகளால் கூழ் காய்ச்சி அன்னதானம் செய்வது சிறப்பான பலனைத் தரும்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக இருக்க போகின்றது. நீண்ட நாட்களாக செய்து முடிக்காமல் வைத்திருக்கும் காரியங்களை இந்த வாரம் செய்து முடிப்பீர்கள். அரசாங்கத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் கவனமாக இருக்க வேண்டும். வேலையில் அலட்சியம் வேண்டாம். குறுக்கு வழியில் செல்லாதீர்கள். நேர்வழியில் சம்பாதிப்பது நன்மையை தரும்.

கடன் பிரச்சனை படிப்படியாக குறையும். பெண்கள் சமையலறையில் சமைக்கும் போது கூடுதல் கவனம் வைக்க வேண்டும். முன்கோபத்தை குறைக்க வேண்டும். அம்மன் கோவிலுக்கு சிவப்பு நிறத்தில் புடவை எடுத்துக் கொடுப்பது சிறப்பான பலனை கொடுக்கும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நினைத்தது நினைத்தபடி நல்ல படியாக நடக்கும். ரொம்பவும் கஷ்டமான சமயத்தில் சரியான நண்பர்களோ, உறவினர்களோ வந்து உங்களை காப்பாற்றி விடுவார்கள். பெரியதாக பிரச்சனைகள் எதுவும் இல்லை. வேலை செய்யும் இடத்தில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும். அலட்சியமாக இருக்காதீங்க. நீங்கள் செய்யாத குற்றத்திற்கு உங்கள் மேல் பழி விழுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

அடுத்தவர்களுடைய முக்கியமான விஷயங்களில் நீங்கள் பொறுப்பு ஏற்க வேண்டாம். அதேசமயம் முன்கோபத்தோடு நடக்கக்கூடாது. உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது ரொம்ப ரொம்ப நன்மையை கொடுக்கும். பகையை வளர்க்கும் அளவுக்கு யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். அம்மன் கோவில்களுக்கு நல்லெண்ணெய் வாங்கி தானமாக கொடுப்பது சிறப்பான பலனை கொடுக்கும்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரக்கூடிய வாரமாக இருக்கும். நிறைய முறை முயற்சி செய்து தோற்றுப் போன விஷயங்களை இந்த வாரம் முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு அதில் வெற்றி கிடைக்கும். ரொம்பவும் நெருங்கிய நண்பர்களாகவே இருந்தாலும் அவர்களிடம் குடும்ப விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

மூன்றாவது நபர்களால் உங்களுடைய குடும்பத்தில் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆகவே கொஞ்சம் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். மேல் அதிகாரிகளை எதிர்த்து பேசக்கூடாது. அம்மன் கோவிலுக்கு வேப்பிலை மாலையை கட்டி போடுவது சிறப்பான பலனை தரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சிரமங்கள் நிறைந்த வாரமாக தான் இருக்கும். எந்த வேலையை எடுத்தாலும் அது அவ்வளவு எளிதில் முடியாது. இழுபறியாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் வேலை இருக்கும். ஓவர் டைம் பார்த்தால் கூட வேலையை முடிக்க முடியாது.

கொஞ்சம் சிரமப்பட்டாலும் அன்றைய வேலையை அன்றைக்கே முடித்து விடுங்கள். நாளைக்கு என்று தள்ளி வைக்காதீங்க. வீட்டில் இருப்பவர்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்‌. சில பேருக்கு இரவில் படுத்தால் நிம்மதியாக தூக்கம் வராது. அம்மன் கோவிலுக்கு சென்று தினமும் விளக்கு ஏற்றுவது சிறப்பான பலனை கொடுக்கும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன பிரச்சனைகள் அவ்வப்போது வந்து போகும். செலவுக்கு கையில் பணம் இருக்காது. ஆனால் வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். பிள்ளைகள் ஒரு பக்கம் செலவு வைப்பார்கள். செலவை சமாளிக்க முடியாமல் திக்குமுக்கு ஆட வேண்டிய சூழ்நிலை இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம்.

எந்த ஒரு விஷயத்திலும் ஆழம் தெரியாமல் காலை வைக்காதீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த வாரம் 18, 19 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் உள்ளது. ஜாக்கிரதை. முடிந்தால் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று பத்து நிமிடம் அமர்ந்து வருவது மன அமைதியை தரும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ரொம்பவும் சுறுசுறுப்பான வாரமாக இருக்க போகின்றது. எல்லா வேலைகளையும் முன்கூட்டியே முடித்து விடுவீர்கள். சுறுசுறுப்பில் எறும்பையே மிஞ்ச போகிறீர்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் குவியும். சொந்த தொழிலை விரிவுபடுத்துவதற்கு தேவையான முயற்சிகளை எடுப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அம்மன் கோவிலுக்கு சென்று அங்கு வரும் பக்தர்களுக்கு மஞ்சள் நிற வாழைப்பழத்தை தானம் கொடுப்பது சிறப்பு. இந்த வாரம் 20 தேதி உங்களுக்கு சந்திராஷ்டமம் ஜாக்கிரதை.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வருமானம் அதிகரிக்கும். வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். மனைவிக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொடுத்து சந்தோஷப்படுத்துவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

வங்கி கடன் சுலபமாக கிடைக்கும். குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று வரக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்ட வேண்டாம். அம்மன் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை வெண்பொங்கல் பிரசாதமாக செய்து கொடுப்பது உங்களுக்கு நன்மையை கொடுக்கும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எச்சரிக்கை அவசியம் தேவை. எந்த ஒரு விஷயத்திலும் நீங்கள் சுலபமாக ஏமாந்து விடுவீர்கள். யாரையும் நம்பாதீங்க. குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். உடல் சோர்வு ஏற்படும். மன வலிமையோடு இருந்தால், உடல் சோர்வு இருந்தாலும் வேலை செய்யலாம் என்பதை உங்கள் மூளைக்கு தெரியப்படுத்துங்கள்.

சோம்பேறித்தனத்தை கொஞ்சம் தூக்கி தூர போட்டு விட்டால் உங்கள் வாழ்க்கையில் எல்லாம் ஜெயம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வேலைக்கு ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள். முடிந்தால் வரும் வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு சர்க்கரை பொங்கலை செய்து உங்கள் கைகளால் பிரசாதமாக பக்தர்களுக்கு அன்னதானம் செய்வது நன்மை தரும்.

- Advertisement -