இந்த வார ராசிபலன் 25/07/2022 முதல் 31/07/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு.

varapalan3
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். நேரத்திற்கு ஆரோக்கியமான உணவினை சாப்பிடுங்கள். தேவையற்ற பிரச்சனை என்று வந்தால் அமைதி காப்பது நல்லது. தேவை இல்லாத இடங்களில் வாக்குவாதம் செய்யவே கூடாது. உங்களுடைய விலை மதிப்பு உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். சொந்தத் தொழிலில் நல்ல லாபம் உண்டு. சுப காரிய தடைகள் விலகும். தினம்தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
ரிஷப ராசி காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கப் போகின்றது. தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். சொந்த தொழில் நீங்கள் நினைத்தபடி லாபத்தை கொடுக்காது. சில பிரச்சனைகள் வரத்தான் செய்யும். வேலை செய்யும் இடத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்களுடன் வேலை செய்பவர்களிடம் சுமுகமாக நடந்து கொள்ளுங்கள். குடும்ப பிரச்சனைகளை மூன்றாவது நபரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். தினம்தோறும் முருகர் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமைதி அவசியம் தேவை. எந்த பிரச்சனையாக இருந்தாலும் உங்களுடைய பதில் மௌனமாக தான் இருக்க வேண்டும். ஆமாம் இல்லை என்ற வார்த்தைகளை பேசினாலும் பழி உங்கள் மேல் விழுந்து விடும். சில இடங்களில் எந்த முடிவை எடுப்பது என்று தெரியாமல் தடுமாறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பிக்கல் பிடுங்கள் இருக்கத்தான் செய்யும். இருக்கின்ற வேலையை பத்திரமாக காப்பாற்றிக் கொள்ள வேண்டும். வியாபாரத்தில் சில சிக்கல்கள் ஏற்படும். சில சமயம் சின்ன சின்ன நஷ்டங்கள் வருவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. தினம் தோறும் முருகர் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
கடக ராசி காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. நீங்கள் நினைத்த வேலையை நினைத்த மார்கத்தில் செய்து முடிப்பீர்கள். முன்கோபத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். எல்லோர் இடத்திலும் ஒரே மாதிரி பேசாதீங்க. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சிரமம் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். வீண் பழி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மற்றபடி குடும்பத்தில் சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. எதிர் பாலின நெருங்கிய நட்பு சிக்கல்களை கொடுக்கும். வீண் செலவுகளை தவிர்க்க முடியாது. தினம் தோறும் அம்பாள் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுபகாரிய செலவு வந்து கழுத்தை நெறிக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகலாம். சொந்த தொழிலில் எந்த பிரச்சனை வந்தாலும் குறுக்கு வழியை கையாளாதீர்கள். நேர்மையாக நின்று பிரச்சனைகளை சாதிக்க வேண்டும். சூதாட்டத்தில் பணத்தை முதலீடு செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட வேண்டாம். பேராசை பெரு நஷ்டத்தில் கொண்டு போய் விட்டு விடும். பிரிந்த கணவன் மனைவி உறவில் ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். அரசாங்க வேலையில் இருப்பவர்கள் அவர்களுடைய வேலையில் கவனமாக இருக்க வேண்டும். விதிமுறைகளுக்கு எதிராக நடக்கக் கூடாது. தினம் தோறும் துர்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி காணக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக நீங்கள் முயற்சி செய்து வரும் எந்த காரியமாக இருந்தாலும் அது உங்களுக்கு சாதகமாக முடியும். குடும்ப சம்பந்தப்பட்ட விஷயங்களில் பொறுமை காப்பது நல்லது. உறவுகளுக்கிடையே சண்டை வந்தால் முன்கோபத்தில் வார்த்தைகளை விட வேண்டாம். மன கசப்பான விஷயங்கள் நடப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் நல்ல முன்னேற்றத்தை அடையும். எதிரிகளுடன் முட்டி மோதி வெற்றியை காண்பீர்கள். தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாகனமாகத்தான் இருக்கப் போகின்றது. எடுத்த காரியத்தில் உடனடியாக வெற்றி கிடைக்காது. எல்லா காரியமும் இழுபறியாகவே இருக்கும். இருப்பினும் சோர்ந்து அயர்ந்து உட்கார வேண்டாம். விடாமுயற்சி உங்களுக்கு விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சில பிரச்சனைகள் வரும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். குடும்ப உறவுகளில் சண்டை சச்சரவுகள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே பிளவு உண்டாகும். அதை சமாளிக்க சண்டை வந்தால் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும். சொந்தத் தொழிலில் ஏற்ற இறக்கங்கள் இறக்கும். எதிர்பாராத நஷ்டத்தை சந்திக்க தயாராக இருங்கள்‌‌. இதில் முதலீடு செய்தால் லாபம் வருமா நஷ்டம் வருமா என்ற கேள்வி இருந்தால், அதில் முதலீடு செய்யாமல் இருப்பது தான் நல்லது. உங்கள் முதலீட்டை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள். நேரம் அவ்வளவு சரியாக இல்லை. தினம்தோறும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
விருச்சக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை அவசியம் தேவை. நீங்களாக எந்த விஷயத்திலும் மூக்கை நுழைக்காதீர்கள். மூன்றாவது மனிதர்களுடைய பிரச்சனையில் தலையிட்டால் உங்களுக்கு கெட்ட பெயர் நிச்சயம் வரும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிரிகளின் பிரச்சினையில் இருந்து தப்பித்துக் கொள்வீர்கள். குடும்பத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல பாராட்டு இருக்கும். சொந்த தொழிலில் அதிகப்படியான முதலீட்டை செய்ய வேண்டாம். பங்குதாரர்களுடன் கவனமாக இருந்து கொள்ளுங்கள். வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த மாதம் 26, 27 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் உள்ளது. தினம் தோறும் ஹனுமன் வழிபாடு நன்மை தரும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கும். ஆனால் வீண் செலவு கொஞ்சம் பிரச்சனைகளை கொடுக்கும். நிதி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் எச்சரிகையாக இருக்க வேண்டும். கூடுமானவரை செலவை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பை அதிகரித்துக் கொள்ளுங்கள். நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அவர்களிடம் அளவாக பேசி பழக வேண்டும். அரசாங்க வேலைகள் தடையில்லாமல் நடக்கும். வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற கனவு நினைவாகும். விரும்பிய படிப்பை படிப்பதற்கு வாய்ப்புகள் வரும். நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியை அடையும். இந்த வாரம் 28ஆம் தேதி உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். தினம் தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் குழப்பமான வாரமாக தான் இருக்கும். அவசர நேரத்தில் எந்த முடிவை எடுப்பது எந்த முடிவை விடுப்பது என்ற குழப்பத்தில் இருப்பீர்கள். எந்த இடத்திலும் கெட்ட பெயர் வாங்காமல் நடந்து கொள்ளுங்கள். அவசரப்பட்டு யாரையும் எடுத்து தெரிந்து பேசாதீர்கள். மேலதிகாரிகள் சொல்வதைக் கேட்டுக் கொள்ளுங்கள். சொந்தத் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதானமாக முடிவு எடுத்தால் எந்த பாதிப்பும் இருக்காது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்தோடு சுற்றுலா செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். தினம் தோறும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகமான வாரமாக இருக்கும். எவ்வளவு வேலையாக இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். கொஞ்சம் அலைச்சல் இருக்கத்தான் செய்யும். சொந்த தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதியதாக சொத்து வாங்கக்கூடிய யோகம் இருக்கிறது. போட்டிகள் பொறாமையில் உங்களைப் பார்த்து நிறைய பேர் வயிற்று எரிச்சல் படுவார்கள். பதவி உயர்வு சம்பளம் உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. புதியதாக நட்பு வட்டாரத்தை விரிவு படுத்த வேண்டாம். மூன்றாவது மனிதரிடம் நெருங்கி பழகுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். அதாவது தெரியாதவங்க கிட்ட நெருங்கி பழகாதீங்க. குடும்பத்தில் உள்ளவர்களுடைய ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பிக்கள் பிடுங்கலான வாரமாக இருக்கப் போகின்றது. இருக்கும். அங்கு செல்ல வேண்டும் இங்கு செல்ல வேண்டும் என்று அலைச்சல் இருக்கும். சொந்த தொழிலில் பிரச்சனைகள் வரும். நிறைய தொந்தரவை சமாளிக்க கூடிய நேரம் இது. ஆகவே மனதை எப்போதும் அமைதியாக ஒருநிலைப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். மனம் அலைபாயக் கூடாது. வண்டி வாகனத்தில் செல்லும்போது ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும். வீதியில் நடந்து செல்லும் போது சொந்த விஷயங்களை நினைத்து குழப்பிக் கொள்ள வேண்டாம். சில பிரச்சனைகள் உங்களை தடம் மாறி போகச் சொல்லும். ஆனால் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். குறுக்கு வழியில் செல்லவே கூடாது என்ற உறுதி மொழியை எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வளவு பிரச்சனை இருந்தாலும் உங்களுடைய வாழ்க்கை துணை உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். உங்கள் பிரச்சனைகளை புரிந்து கொள்வார்கள். அந்த ஒரு நிம்மதியே உங்களை உயர்த்தி செல்லும். விபத்துகளில் இருந்து தப்பிக்க உங்களுடைய கவனத்தை சிதற விடவே கூடாது. தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -