இந்த வார ராசிபலன் 12/06/2023 முதல் 18/06/2023 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

varapalan7
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். வரவேண்டிய பண வரவுகளில் சில சிக்கல்கள் இருக்கும். முக்கியமான செலவுகளுக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சில பேருக்கு வீடு வேலை என்று இடமாற்றம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பெண்களுக்கு உடல் சோர்வு ஏற்படும். துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வருமானம் எந்த ஒரு குறையும் இல்லாமல் வரும். சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். வாங்கிய கடனை எல்லாம் திருப்தி கொடுத்து விடுவீர்கள். மன நிம்மதி ஏற்படும். இரவு நல்ல தூக்கம் வரும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் குவியும். சந்தோஷத்திற்கு எந்த குறையும் இல்லை. தினம் தோறும் லட்சுமி நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன நிறைவான வாரமாக இருக்கப்போகின்றது. நீங்கள் எந்த காரியத்தை தொட்டாலும் அது வெற்றி அடையும். நீங்கள் செல்லும் இடமெல்லாம் பேரும் புகழும் உங்களை தேடி வரும். நாலு பேர் மதிக்கும் அளவிற்கு வாழ்க்கைத் தரம் உயரும். உங்களை எதிரிகளாக பார்த்தவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள். விவசாயிகளுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. வேலை செய்யும் இடத்தில் மன நிறைவை பெறுவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். தினம் தோறும் பிள்ளையார் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக இருக்க போகின்றது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். இதுநாள் வரை இருந்து வந்த கணவன் மனைவி பிரச்சினைகள் எல்லாம் சரியாகும். சில பேருக்கு நீண்ட தூர பயணம் ஆதாயமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சுறுசுறுப்பாக வேலை செய்யப் போகிறீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். புதுசாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கிறது. மேல் படிப்புக்காக வெளிநாட்டுக்கு செல்ல இருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. தினம் தோறும் அஷ்டலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வீண் செலவுகளை குறைக்க வேண்டும். சேமிப்பை உயர்த்த வேண்டும். அடுத்தவர்கள் பேச்சைக் கேட்டு எந்த முடிவையும் எடுக்காதீங்க. முன்பின் தெரியாதவர்களிடம் நட்பு வைத்துக் கொள்ள வேண்டாம். எந்த விஷயமாக இருந்தாலும் சிந்தித்து செயல்பட வேண்டும். முன்கோபத்தை குறைக்கவும். ரொம்பவும் நண்பர்களாக இருந்தால் கூட, அவர்களை நம்பாதீங்க. உங்கள் காலை வாரி விடுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தினம் தோறும் ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்வது நன்மை தரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன சிக்கல்கள் வந்து போகும். குறிப்பாக நண்பர்கள் உறவினர்கள் என்று உங்களை சண்டைக்கு இழுக்கவே வீடு தேடி வருவார்கள். பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிய சூழ்நிலையில் சிக்கிக் கொள்வீர்கள். உங்களுடைய பிரச்சனைகளை வெளியாக்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வெளி ஆட்கள் பிரச்சனையில் நீங்கள் மூக்கை நுழைக்க வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் ரொம்ப ரொம்ப நல்லது. மற்றபடி தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் திறமையாக செயல்பட்டு பாராட்டை பெறுவீர்கள். குடும்பத்தில் இருக்கும் பெண்கள் முன்பின் யோசிக்காமல் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. தினமும் அனுமன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் அசதி இருக்கும். எந்த வேலையை எப்போது செய்வது என்று தெரியாமல் கொஞ்சம் கஷ்டப்படுவீர்கள். எப்போதும் தூக்கம் வந்து கொண்டே இருக்கும். உங்களை நீங்களே சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள காலையில் எழுந்து யோகா பயிற்சி செய்யலாம். சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து நடை பயிற்சி செய்யலாம். இப்படி சில விஷயங்களை உங்களுக்கு நீங்களே பழக்கப்படுத்திக் கொண்டால் சோம்பேறித்தனத்திலிருந்து வெளிவந்து விடலாம். மேல் அதிகாரிகளை எதிர்த்துக் கொள்ள வேண்டாம். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளவும். தினம்தோறும் முருகர் வழிபாடு உற்சாகத்தை கொடுக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு தேவையான நல்ல வாய்ப்புகள் வாசல் கதவை தட்டும். பெயர் புகழ் அந்தஸ்து உயரும். குடும்பத்தோடு கோயில் குளங்களுக்கு சென்று வர வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் வேலை பளு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். என்னதான் வேலை செய்தாலும் நல்ல பெயர் கிடைக்காது. சொந்த தொழிலில் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். புதிய இடமாற்றம் நன்மையை தரும். தினம் தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சி நிறைந்த வாரமாக தான் இருக்க போகின்றது. நீங்கள் எதிர்பார்த்த நல்ல காரியம் எதிர்பாராத நல்ல காரியம் என்று நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். நீங்கள் எதைத் தொட்டாலும் அது பொன்னாகும். ஆகவே புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய தொழில் தொடங்கலாம். புதிய வேலைக்கு செல்லலாம். சொத்து சுகம் வாங்குவதற்கு கூட நேரம் காலம் கைகூடி வந்துவிட்டது. கட்டுமான தொழில் லாபத்தை கொடுக்கும். கமிஷன் தொழில் லாபத்தை கொடுக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தினமும் சிவன் வழிபாடு நன்மையை தரும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எல்லாம் நல்லதாகவே நடந்தாலும், மனதில் ஒரு சின்னதாக சோர்வு இருக்கும். மன பயம் இருக்கும். இரவில் படுத்தால் நிம்மதியாக தூக்கம் வராது. எல்லாம் சரியாக வருமா என்ற ஏதோ ஒரு சின்ன சஞ்சலம் உருத்தி கொண்டே இருக்கும். வாழ்க்கை துணை சொல்லுவதை கேளுங்கள். மூன்றாவது நபர் பேச்சை கேட்காதீர்கள். எதிர் பால் இன நட்பு கூடாது. மற்றபடி குடும்பத்தில் நின்று போன சுப நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கத் தொடங்கும். இருக்கும் வேலையை காப்பாற்றிக் கொள்வது நல்லது. புதிய வேலைக்கு முயற்சி செய்ய வேண்டாம். தினம்தோறும் வராகி அம்மன் வழிபாடு நன்மையை செய்யும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி பெறக்கூடிய வாரமாக அமையப் போகின்றது. நீண்ட நாட்களாக போராடிக் கொண்டிருந்த விஷயங்களில் எல்லாம் ஜெயிக்கப் போகிறீர்கள். சந்தோஷம் அடையப் போகிறீர்கள். குடும்பத்தோடு ஒன்று சேரும் நேரம் காலம் வந்துவிட்டது. குடும்பத்தை விட்டு வெளிநாடுகளில் இருப்பவர்கள் மீண்டும் தாய்நாடு திரும்புவதற்கான நேரம் வந்துவிட்டது. அப்பா அம்மா கிட்ட பேசும் போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். யாரையும் தூக்கி எறிய வேண்டாம். புதுசாக வந்த உறவுக்காக ஏற்கனவே இருந்த உறவை அலட்சியப்படுத்தக் கூடாது. பெரியவர்கள் சொன்னால் அது பெருமாள் சொன்னது போல. ஆகவே பெரியவர்களை மதிக்க பழகுங்கள். சொந்த தொழிலை விரிவு படுத்தலாம். வங்கி கடன் பெறலாம். தினம்தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும் ‌

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் அலைச்சல் நிறைந்த வாரமாக இருக்கும். வேலை சம்பந்தமாக வெளியூர் செல்லும்போது கவனமாக இருங்கள். ஆரோக்கியம் நிறைந்த சாப்பாட்டை மட்டும் சாப்பிடுங்கள். நிறைய தண்ணீர் குடுங்க. உடல் உபாதைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சூடு சம்பந்தப்பட்ட பிரச்சனை, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலை சுமை கொஞ்சம் அதிகமாக இருக்கும் இருந்தாலும் சமாளிக்கும் தெம்பு உங்களிடம் உள்ளது. சொந்தமாக சொத்து வாங்குவதற்கான யோகமும் உண்டு. தினம் தோறும் அம்பாள் வழிபாடு வெற்றியைத் தரும்.

- Advertisement -