இந்த வார ராசிபலன் 13/06/2022 முதல் 19/06/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு.

varapalan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து, இந்த வார இறுதிக்குள் சரியாகிவிடும். தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் சுமூகமாக மீண்டும் நடக்கும். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டுப் பெண்களுக்கு கையில் இருப்பு இரட்டிப்பாக உயரும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய திறமையை மேலதிகாரி பாராட்டுவார். பண வரவு அதிகரிக்கும். கடன் சுமை குறையும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆனால் முன் கோபத்தை கொஞ்சம் கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். அனாவசியமாக தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வார்த்தைகளில் அதிக கவனம் தேவை. புதிய முதலீட்டை போட்டு வியாபாரத்தை விரிவு செய்யலாம். சொத்து சுகம் வாங்கி போடுவதற்கு இது நல்ல நேரம். இந்த மாதம் 14, 15, 16 இந்த 3 தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் திறமையாக செயல்பட போகிறீர்கள். உங்களுக்கு கொடுத்த வேலையை முன்கூட்டியே சுலபமாக திறமையாக முடித்து விட்டு, அதற்கான பாராட்டை பெற்றுவிடுவீர்கள். வாய் வித்தையில் ஜெகஜாலக் கில்லாடியாக திகழ்வீர்கள். வியாபாரத்தில் புதியதாக ஐடியாக்களை கொண்டு வந்து இறக்கி லாபத்தை பல மடங்காக பெருகி விடுவீர்கள். வார்த்தையில் நிதானம் தேவை. உறவுகளுக்கிடையே அனுசரித்து நடக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் சின்னச்சின்ன மாற்றங்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும். தினம் தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கப் போகின்றது. குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று சந்தோஷமாக நேரத்தை கழிக்க போகிறீர்கள். சுப செலவுகள் ஏற்படும். எதிர்பாராத நல்ல மாற்றம் ஏற்படும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சமையல் செய்யும்போது பெண்கள் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். கத்தி பயன்படுத்தும்போது அடுப்பில் சமைக்கும் போது சுட்டுக் கொள்ளாமல், கையை வெட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. கடன் சுமை குறையும். தினம்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிறைய நன்மைகள் நடக்கப்போகின்றது. உங்களை சுற்றியிருப்பவர்களில் யார் நல்லவர் யார் கெட்டவர் என்று தெரிந்துகொள்ள வேண்டிய நேரம் காலம் வந்துவிட்டது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். எதிரி பிரச்சனை உண்டாகும். வாடிக்கையாளர்களை கொஞ்சம் அனுசரித்து செல்லுங்கள். முன் கோபம் கொள்ள வேண்டாம். பிரச்சினை என்று வரும்போது நண்பர்கள் உறுதுணையாக நிற்பார்கள். போதிய அளவு பணவரவு இருக்கும். இந்த வார இறுதியில் வீண் செலவுகள் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. கூடுமானவரை சொந்தத் தொழிலில் அதிக முதலீடு செய்ய வேண்டாம். தினம்தோறும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் இந்த வாரம் முட்டிமோதி தான் வெற்றியை காண வேண்டியதாக இருக்கும். கொஞ்சம் சிரமங்கள் இருந்தாலும், இறுதியில் ஜெயிக்கப் போவது நீங்கள் தான். ஆகவே தோல்வியை கண்டு துவண்டு போக வேண்டாம். வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களுடைய வீட்டை அலங்காரம் செய்து பார்ப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இரும்பு சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு நல்ல லாபம் உண்டு. சொந்த தொழிலில் எதிர்பார்த்ததை விட நிறைய லாபம் கிடைக்கும். தினம் தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். ஆனால் வந்த வழியிலேயே அந்த வாய்ப்பு கைநழுவி சென்றுவிடும். ஆனால் அதற்காக கவலைப்பட வேண்டாம். நமக்கு கிடைக்காதது எதுவும் நமக்கு நன்மை தரப்போவது இல்லை என்று மனதை தேற்றிக் கொள்ளுங்கள். சந்தோஷத்திற்கு பின்னாலேயே சோகம் வரும். சோகத்திற்கு பின்னாலேயே சந்தோஷமும் வரும் என்ற நிதர்சனமான உண்மையை உணர்ந்து வாழ வேண்டிய காலம் இது. வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். மேலதிகாரிகளிடம் திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். சுபகாரிய பேச்சுகள் தள்ளிப்போகும். கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். அது பின்பு சமாதானத்தில் முடியும். ஆக மொத்தத்தில் இந்த வாரம் பொறுமையோடு நல்லது நடக்க வேண்டும் என்று அந்த ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வேறு வழியில்லை. மனதிற்குள் ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லுங்கள்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்கள் காணம் போன போக்கில் இந்த வாரம் முழுவதும் செல்லப் போகிறீர்கள். நல்லது நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனபக்குவம் உங்களுக்கு இருக்கும். கெடுதல் நடந்தாலும் இதுவும் கடந்து போகும் என்று மனதை தேற்றிக் கொள்வீர்கள். போட்டிகள் பொறாமைகள் நிறைந்த இந்த உலகத்தில் உங்களுடைய வாழ்க்கையை நடத்திச் செல்வதில் நிறைய சிக்கல்கள் இருக்கும். இருப்பினும் துணிச்சலாக எல்லா பிரச்சினைகளையும் எதிர்கொண்டு துணிச்சலான முடிவுகளை எடுத்து பிரச்சனையிலிருந்து வெளிவர முயற்சி செய்வீர்கள். இறுதியில் வெற்றியும் காண்பீர்கள். இந்த வாரம் போராட்டமே வாழ்க்கையாக இருக்கும். நீங்கள் நல்லதையே பேசினாலும் எதிராளிக்கு கெட்டது சொல்வது போல தோன்றும். கூடுமானவரை யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். தேவையற்ற அவமானங்களை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டாலும் கொஞ்சம் பொருத்து போகவேண்டும். ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை சொல்லுங்கள்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் நிம்மதியான வாரமாக இருக்கப் போகின்றது. எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு நிம்மதியாக ஓய்வு எடுப்பதற்கு நிறைய நேரம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். மனைவி உங்களுக்காக நிறைய விஷயங்களை விட்டுக் கொடுப்பார்கள். வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் செல்வதற்கான அத்தனை வழிகளும் உங்களுக்காக திறக்கப் போகின்றது. கொஞ்சம் பணம் அதிகமாக செலவாகும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். யார் பேச்சையும் கேட்டு சொந்தத் தொழிலில் நிறைய முதலீடு செய்ய வேண்டாம். யாரை நம்பியும் தெரியாத இடத்தில் பணத்தை கொடுக்க வேண்டாம். கொடுக்கல்-வாங்கலில் நிறைய கவனம் தேவை. பூர்வீக சொத்து கைக்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தினம் தோறும் அனுமன் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகமான வாரமாக இருக்கப்போகின்றது. சோர்ந்துபோய் உட்காரவே மாட்டீர்கள். பம்பரமாக சுற்றி சுற்றி வேலையை செய்து பாராட்டை பெறுவீர்கள். வேலையில் இடமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலை சம்பந்தமாக வெளியூர் பயணத்திற்கும் வாய்ப்புகள் உள்ளது. வாராக் கடன் வசூலாகும். சொந்த பந்தங்கள் இடையே சில பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆகவே சொந்தங்களை அனுசரித்து செல்லுங்கள். தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். நீங்கள் எதிர்பாராத லாபம் சொந்த தொழிலில் கிடைக்கும். உங்களுடைய பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். திருடு போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தினம்தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன தைரியம் அதிகமாக இருக்கப்போகின்றது. எந்த விஷயமாக இருந்தாலும் இரண்டில் ஒன்று பார்த்து விடலாம் என்று அந்த விஷயத்தில் இறங்கி செய்வீர்கள். அரசு வேலைகளுக்கு உண்டான தேர்வுகளை எழுதலாம். அரசு வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. சொந்தத் தொழிலில் நல்ல லாபம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் வேலைப்பளு அதிகமாக இருக்கும். சோர்வாக காணப்படுவீர்கள். ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. யார் எதிர்த்து நின்றாலும் அவர்களை கண்டு பயப்படாமல் துணிந்து போராடி வெற்றி அடைவீர்கள். துணிச்சலோடு சேர்த்த கவனமும் கொஞ்சம் தேவை. தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிறைய நல்லது நடக்கப் போகின்றது. கடந்து வந்த கஷ்டமான பாதைகள் எல்லாம் காணாமல் போகும். வருமானம் அதிகரிக்கும். மன அழுத்தம் குறையும். சொந்த தொழில் முதலீட்டை போட்டு விரிவுபடுத்தலாம். வங்கிக் கடன் கிடைக்கும். எல்லாம் நல்லதாக நடந்தாலும், உங்களுடைய புத்தி லேசாக, குறுக்கு புத்தி ஆக யோசனை செய்து, ஒரு சில காரியங்களை செய்து சிக்கலில் கொண்டு போய் நிறுத்தி விடும். சின்ன சின்ன நஷ்டங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எதையும் நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது கொஞ்சம் கவனம் தேவை. இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடைய ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். ஏதாவது பிரச்சினையாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும். தினம்தோறும் ஓம் சரவணபவ மந்திரத்தை சொல்வது நல்லது.

- Advertisement -