இந்த வார ராசிபலன் 19/06/2023 முதல் 25/06/2023 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

varapalan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. சந்தோஷம் மனதில் நிறைவாக இருக்கும். குடும்பத்தில் விருந்தினர்களின் வருகை கலகலப்பை கொடுக்கும். சுப செலவுகள் வரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதைகள் நீங்கும். உங்களுடைய வேலையை சுறுசுறுப்பாக செய்ய தொடங்கி விடுவீர்கள். வாழ்வில் முன்னேற்றம் தரக்கூடிய நிறைய சம்பவங்கள் இந்த வாரம் நடக்கும்.

புதிய அனுபவங்கள் கிடைக்கும். நினைத்த பொருளை வாங்கி, நினைத்த நேரத்தில், நினைத்த காரியத்தை முடிப்பீர்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருக்கும் சிக்கல்கள் விலகும். தொழிலை விரிவுபடுத்தலாம். அதற்கான வங்கி கடன் சுலபமாக கிடைக்கும். உங்களுடைய பேச்சுத் திறமையால் இந்த வார இறுதியில் சில நன்மைகள் நடக்கும்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசி காயர்களுக்கு இந்த வாரம் எல்லா விஷயத்திலும் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். அலட்சியமாக எந்த வேலையையும் செய்யக்கூடாது. முழு கவனத்தோடு செய்யக் கூடிய வேலைகள் வெற்றியை கொடுக்கும். கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன சண்டைகள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் உடன் பழகுபவர்களுடன் கவனமாக இருங்கள். அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள்.

வியாபாரத்தில் புதிய முடிவுகளை அதிரடியாக எடுக்க வேண்டாம். ஒன்றுக்கு பலமுறை பெரியவர்களிடம் அனுபவ சாலைகளிலும் ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. மன குழப்பத்தில் இருக்கும்போது முடிவு எடுப்பதை கொஞ்ச நாள் தள்ளிப் போடுங்கள். அவசரப்படாதீர்கள். நீண்ட தூர பயணத்தை தள்ளிப் போடுவது நல்லது.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த வாரமாக இருக்கும். உங்களை தேடி பெயர் புகழ் பாராட்டுகள் வரும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். கோர்ட்டு கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

கணவன் மனைவிக்குள் அன்யூனியம் அதிகரிக்கும். பிரிந்த கணவன் மனைவி கூட ஒன்று சேர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்கள் பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். சில பொருட்கள் திருடு போவதற்கு வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூடுதல் கவனம் தேவை.

- Advertisement -

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். புதியதாக சொத்து சுகம் வாங்கலாம். புதியதாக வேலைக்கு அப்ளை செய்யலாம். மேல்படிப்புக்கு உண்டான முயற்சிகளை எடுக்கலாம். வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்றால் அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளலாம்.

மணல் செங்கல் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடிய வாரம் இது. உங்களுடைய விடா முயற்சியால் நீங்கள் நிறைய விஷயங்களில் வெற்றிக்கான போகிறீர்கள். அதற்கான வெகுமானமும் உங்களுக்கு கிடைக்கும்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாக இருக்கும். சுப செலவுகள் அதிகமாக வரப் போகின்றது. அதற்காக சில பேர் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். தொழிலில் கூடுதல் கவனம் எடுத்து செயல்பட வேண்டும். பங்குதாரர்களை நம்ப வேண்டாம். பார்ட்னர்ஷிப்பில் எப்போதும் கொஞ்சம் கவனம் இருக்க வேண்டும்.

எந்த ஒப்பந்தமாக இருந்தாலும் பத்திரப்பதிவு இருக்கட்டும். சுப நிகழ்ச்சிகளை ஒரு சில நாட்கள் தள்ளி வைப்பது நல்லது. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். ஆழம் தெரியாமல் பிரச்சனையில் காலை விடாதீர்கள். எதுவாக இருந்தாலும் சிந்தித்து செயல்படுங்கள்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நீண்ட தூர பயணம் நன்மை தரும். வேலை சம்பந்தமாக, சொந்த தொழில் சம்பந்தமாக வெளியூர் செல்வதாக இருந்தால், தாராளமாக செல்லலாம். அதேபோல நீங்கள் எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் சிந்தித்து செயல்பட வேண்டும். அடுத்தவர்கள் பேச்சை கேட்டு ஆடக்கூடாது. குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அடுத்தவர்களை நம்பாதீர்கள். புதிய நட்புறவுடன் அளவோடு பழக வேண்டும். எதிர் பாலின நட்பு கூடாது. விவசாயம் செழிப்பாக நடக்கும்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். எல்லா பிரச்சனைகளையும் போட்டு மனதை குழப்பிக் கொள்ளாதீர்கள். நிதானமாக சிந்தித்தால் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். வழக்கறிஞர்கள் ஆசிரியர்கள் பேச்சாளர்கள், பாருங்கள் இவர்களுக்கு இந்த வாரம் நல்ல முன்னேற்றம் தரக்கூடிய வாரமாக இருக்கும். கணவன் மனைவி சண்டையை மூன்றாவது நபர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். பிரச்சனையை நீங்களே பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். எதிரிகளால் சில பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது ஜாக்கிரதை.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். நீங்கள் எதை பேசினாலும் அதை குறை சொல்ல எதிராளி காத்துக் கொண்டிருப்பார். நீங்கள் நல்லதே செய்தாலும் உங்களுக்கு இந்த வாரம் நல்ல பெயர் கிடைக்கப் போவது கிடையாது. ஆகவே எல்லா விஷயங்களிலிருந்தும் ஒதுங்கி இருப்பது நல்லது. வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகளை கொஞ்சம் தள்ளிப் போடுங்கள். எந்த முடிவாக இருந்தாலும் பெரியவர்களை கேட்டு எடுங்கள். அவசரமாக எந்த வேலையையும் செய்யாதீர்கள். உறவுகளுடன் பொறுமையாக பேசவும். கடினமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். இன்றைய தினம் 19ஆம் தேதி உங்களுக்கு சந்திராஷ்டமம்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் லேசான மனசு சம்பந்தப்பட்ட சஞ்சலம் இருக்கும். எல்லாம் நல்லதாகவே நடந்தாலும் எதையோ இழந்தது போல சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். இரவு படுத்தால் நல்ல தூக்கம் வராது. சின்ன சின்ன பிரச்சனைகள் பெரிய தலை பாரத்தை கொடுத்து விடும். இதில் எப்படி தான் விடுபடுவது என்று யோசிக்கும் அளவிற்கு குழப்பங்கள் வரும். பயப்பட வேண்டாம். எல்லாம் இந்த வார இறுதியில் சரியாகிவிடும்.

குழந்தைகள் படிப்பு விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். வேலை வேலை என்று மட்டும் இல்லாமல் வீட்டையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள். அனாவசிய செலவை குறைக்க வேண்டும். தேவையில்லாத விஷயங்களுக்கு அதிக செலவு செய்ய வேண்டாம். இந்த வாரம் 20, 21, 22ஆம் தேதியில் உங்களுக்கு சந்திராஷ்டமும் ஜாக்கிரதை.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரக்கூடிய வாரமாக இருக்கும். தொலைபேசியில் நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்த சேரும். நீங்கள் விரும்பிய வேலையை செய்து மனநிறைவை அடைவீர்கள். தொழிலை விரிவு படுத்துவதற்கு தேவையான அத்தனை உதவிகளும் உங்களுக்கு கிடைக்கும் எல்லோருடைய சப்போர்டுடன் வாழ்வில் முன்னேற்றம் அடைவீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களைத் தாங்கி பிடிப்பார்கள். யாரும் கைவிட மாட்டார்கள். அந்த சப்போர்ட் உங்களுக்கு மன தைரியத்தை கொடுக்கும். மனைவியிடம் மட்டும் கொஞ்சம் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. ஏட்டிக்கு போட்டி பேசாமல் இருப்பது நல்லது.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நினைத்தது எதுவுமே நடக்காது. நீங்கள் நினைத்தது ஒன்று. நடக்கப்போவது ஒன்று. யாருமே நீங்கள் சொல்வதைக் கேட்க மாட்டார்கள். நீங்கள் சொல்வதை புரிந்து கொள்ள மாட்டார்கள். உங்களுக்கு தலைவலியை கொடுப்பார்கள். வேறு வழியே கிடையாது எல்லாவற்றையும் அனுசரித்து செல்ல வேண்டும்.

பணப்புழக்கம் இருந்தாலும் வந்த பணம் எங்கே சென்றது என்றே தெரியாது. ஏதாவது ஒரு செலவு வந்து வரிசை கட்டி நிற்கும். கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன வாக்குவாதம் வரும். எதுவாக இருந்தாலும் நின்று நிதானமாக யோசிங்க முன்கோபடாதீர்கள். பொறுமை ஒன்றுதான் இந்த வாரம் உங்களுக்கு வெற்றியைத் தரும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன அலைச்சல்கள் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் டார்கெட்டை சரியாக முடித்துவிட்டு, மன நிம்மதியோடு இருப்பீர்கள். சொந்த தொழிலில் எதையோ சாதித்தது போல ஒரு மன நிம்மதி இருக்கும். அந்த அளவுக்கு வருமானமும் வரும். கவலைப்படாதீர்கள், கஷ்டப்பட்டால் தான் பலன் உண்டு, ஆகவே வேலை பளு அதிகமாக இருக்கும் சமயத்தில் சோர்ந்து போய் உட்காராதிங்க.

உழைக்க உழைக்க உங்களுடைய வருமானம் நிச்சயம் அதிகமாகும். கடன் பிரச்சனையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுவீர்கள். சேமிப்பை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்துவீர்கள். பணத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை இனிமேல் புரிந்து நடந்து கொள்வீர்கள். அந்த அளவிற்கு வாழ்க்கை உங்களுக்கு பாடத்தை கற்றுக் கொடுத்திருக்கும்.

- Advertisement -