இந்த வார ராசிபலன் 26/06/2023 முதல் 02/07/2023 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

varapalan1
- Advertisement -

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் செல்வ மழை பொழியப் போகின்ற வாரமாக இருக்க போகின்றது. நீங்கள் எதைத் தொட்டாலும் அது உங்களுக்கு வெற்றி தரும். பாதகமாக இருந்த சில விஷயங்களை எல்லாம் கூட, சாதகமாக மாற்றி விடுவீர்கள். செய்யும் தொழிலில் இருந்த தடைகளை எல்லாம் உடைத்து விடுவீர்கள். வாழ்க்கையில் மேலும் மேலும் முன்னேறுவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு, அதில் சாதனை படைக்கப் போகிறீர்கள். அவசரம் வேண்டாம். எல்லா விஷயத்திலும் கொஞ்சம் நிதானம் காக்க வேண்டும். இரண்டு மூன்று வெற்றிகளை பார்க்கும் போது, அடுத்த முயற்சியில் நாம் அலட்சியமாக இருப்போம். அதை மட்டும் செய்யக்கூடாது. கொஞ்சம் ஜாக்கிரதை.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கஷ்டங்கள் எல்லாம் தூர விலகி செல்ல போகின்றது. சந்தோஷம் எல்லாம் ரொம்பவும் அருகே இருக்கப் போகின்றது. குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். புதிய உறவுகள் வந்து சேரும். சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வந்து போகும். இருந்தாலும் சமாளித்துக் கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் வேலை பளு அதிகமாக இருக்கும். இருந்தாலும் உயர் அதிகாரிகளின் சப்போர்ட்டின் மூலம் நல்லது நடக்கும்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பயணங்கள் வெற்றி தரும். ஏதாவது வேலை விஷயமாக வெளியூர் செல்ல வேண்டும். இடமாற்றம் செய்ய வேண்டும் என்றால் இந்த வாரத்தில் செய்யலாம். சொத்து வாங்க விற்க அணுகூலம் நிறைந்த வாரம் இது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெற்றோர்கள் கல்வியை வியாபாரமாக பார்க்காதீர்கள். எவ்வளவு பணம் கொடுத்தாலும் இந்த கல்லூரியில் சீட்டு கிடைக்க வேண்டும் என்று பணத்தை வீண்விரயம் செய்வது ரொம்ப ரொம்ப தவறு. வேலை செய்யும் இடத்தில் மூன்றாவது நபரின் பேச்சை கேட்டு நடக்க வேண்டாம். மேலதிகாரிகளை அனுசரித்து செல்லவும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசி காரர்களுக்கு இந்த வாரம் பாராட்டும் புகழும் கிடைக்கப் போகின்றது. நீங்கள் செய்த செயலை பார்த்து அனைவரும் மிரண்டு போவார்கள். துணிச்சலாக செயல்பாடு உங்களுடைய வாழ்க்கையை முன்னேற்றத்தில் செல்ல வைக்க தேவையான சில முடிவுகளை எடுப்பீங்க. பண வரவு அதிகரிக்கும். கடன் சுமை குறையும்‌. வாரா கடன் வசூல் ஆகும். இழுப்படியாக இருந்து வந்த நிறைய பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ராஜ வாழ்க்கை தான். உங்களை எதிர்த்து யார் போட்டி போட்டாலும், அவர்கள் நிச்சயம் தோற்கப் போகிறார்கள். எதிரிகளால் உங்களை ஜெயிக்கவே முடியாது. வேலை செய்யும் இடத்தில் ராஜமரியாதை உண்டு. சொந்த தொழிலில் கொடி கட்டி பறக்க போகிறீர்கள். உங்களுடைய தலையில் கிரீடம் இல்லை. அது மட்டும் தான் குறை. மற்றபடி உங்களுக்கு தேவையான சகல வசதிகளும் கிடைக்கும். வரா கடன் வசூலாகும். பேங்க் பேலன்ஸ் அதிகரிக்கும். கமிஷன் தொழில் கொடிகட்டி பறக்கும். விவசாயிகளுக்கு நன்மை தரக்கூடிய வாரம் இது. சுபகாரியங்களை மட்டும் அடுத்த வாரம் தள்ளிப் போடுவது நல்லது.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எல்லா விஷயத்திலும் கூடுதல் கவனம் தேவை. ஆர்வம் இல்லாமல் எந்த ஒரு வேலையையும் செய்யாதீங்க. புதிய முயற்சிகளை அடுத்த வாரம் தள்ளிப் போடுங்கள். சோம்பேறித்தனம் வேண்டாம். நாளைக்கு செய்ய வேண்டிய வேலையை இன்றே செய்து வைப்பது ரொம்ப ரொம்ப நல்லது. குடும்ப விஷயங்களை மூன்றாவது மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். தகாத வார்த்தைகளை பேச வேண்டாம். பொறுமை அவசியம் தேவை. சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட அடுத்தவர்களை குறை சொல்லும் கெட்ட பழக்கத்தை விட்டு விடுங்கள்.

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பிரச்சனைகள் எல்லாம் சரியாகிவிடும். மனக்குழப்பம் தீரும். நிம்மதியான தூக்கம் கிடைக்கும். ஆனாலும், இந்த வார இறுதியில் உங்களுடைய கவனக்குறைவால் சின்ன சின்ன சிக்கலில் மாட்டிக்கொள்ளுவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. நீங்கள் முன் நின்று எந்த ஒரு நல்ல விஷயத்தையும் செய்து வைக்க வேண்டாம். உதாரணத்திற்கு தெரிந்தவர்களுக்கு மாப்பிள்ளை பார்ப்பது, பெண்பார்ப்பது, தெரிந்த இடத்தில் வேலை செய்வது போன்ற உதவிகளை செய்தாலும் அது உங்களுக்கு உபத்திரமாக வந்து முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதி பற்றாக்குறை ஏற்படும். எவ்வளவு வருமானம் வந்தாலும் பத்தாது. செலவுக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை. அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க. செலவை கூடுமானவரை குறைக்க பார்க்கவும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் வேலை பல அதிகமாக தான் இருக்கும். எவ்வளவு வேலை செய்தாலும் நல்ல பெயர் கிடைக்காது. சம்பள உயர்வு கிடைக்காமல் கஷ்டப்படுவீர்கள். இருந்தாலும் இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள். புதிய வேலை கிடைப்பது ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கின்றது. தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வந்தாலும், சரி செய்து லாபத்தை சீர்படுத்திக் கொள்வீர்கள்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு நினைத்தது நினைத்தபடி நல்லபடியாக நடக்கும். வருமானம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீங்கள் சின்ன வேலையை செய்தாலும் அதற்கு உண்டான பாராட்டும் புகழும் உங்களைத் தேடி வந்துவிடும். வாழ்க்கையை ரொம்பவும் பிடித்தமாக வாழ தொடங்கி விடுவீர்கள். உங்களுக்கே உங்கள் வாழ்க்கையின் மீது ஆசை வந்துவிடும். வெளியிடங்களுக்கு செல்வது விருந்து விழாக்களில் கலந்து கொள்வது போன்ற மனதிற்கு சந்தோஷம் தரக்கூடிய விஷயங்கள் நடக்கும். பொய் சொல்லாதீங்க. பிரச்சனையில் சிக்கிக் கொள்வீர்கள்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நண்பர்கள் மூலம் நன்மை நடக்கப் போகின்றது. உங்களுடைய புது நண்பர் பழைய நண்பர் என்று யாராக இருந்தாலும் சரி,உங்களுடைய நலனுக்காக போராடுவார்கள். உங்களுடைய பிரச்சனைகளுக்கு தோல் சாய்ப்பார்கள். விவசாயிகளுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்த தொழிலில் இத்தனை நாள் பட்ட கஷ்டத்திற்கு நல்ல பலன் கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்கும். புதிய முதலீட்டை செய்து தொழிலை விரிவுபடுத்துவீர்கள். குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு செல்வது நல்லது.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு நினைத்ததெல்லாம் நல்லபடியாக முடியும். சந்தோஷம் அதிகரிக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேருவீர்கள். கஷ்டம் வரும்போது புத்திசாலித்தனம் உங்களுக்கு கை கொடுக்கும். திறமையாக செயல்பட்டு சிக்கலை சமாளித்து விடுவீர்கள். நண்பர்களுடன் பழகும் போது கொஞ்சம் கவனமாக இருக்கவும். கூடவே இருப்பவர்கள் உங்களுக்கு பின்னால் குழி தோண்டவும் வாய்ப்புகள் உள்ளது. வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த ஊர், தாயகம் திரும்ப நேரம் காலம் வந்துவிட்டது. இந்த வாரம் 26, 27 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பலன் தெரியும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். டார்கெட்டை அச்சீவ் செய்வீர்கள். சேமிப்பை உயர்த்த வேண்டும். பணத்தை ஏதாவது ஒரு இடத்தில் முதலீடு செய்வதற்கு சிந்தியுங்கள். பணம் வெறும் பணமாகவே இருந்தால் அதன் மூலம் நமக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. நிலத்தில் முதலீடு செய்யவோ, அல்லது வீடு வாங்கவோ அல்லது வேறு ஏதாவது வாகனம் வாங்கவோ இது நல்ல நேரம். பணம் கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். 28, 29 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் ஜாக்கிரதை.

- Advertisement -