இந்த வார ராசிபலன் 06/06/2022 முதல் 12/06/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு.

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் அவசரப்பட்டு செய்யக்கூடாது. நிறைய பணம் கிடைக்கிறதே என்று அவசரப்பட்டு ஒரு வேலையில் கால் வைக்காதீர்கள். அதற்கு பின்னால் என்ன நல்லது கெட்டது இருக்கிறது என்பதை ஆராய்ந்து பாருங்கள். தேவையற்ற பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டைகள் வந்து போகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. வீட்டில் பிள்ளைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுடைய நடவடிக்கையில் அக்கறை கொள்ள வேண்டும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தினம்தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரக்கூடிய வாரமாக இருக்கப்போகின்றது. புதிய முயற்சிகள் வெற்றி தரும். நிறைய வருமானம் வரும். அதை சேமிக்கும் வழியை பாருங்கள். வரக்கூடிய வாய்ப்பை எந்தவிதத்திலும் கைநழுவி விடக்கூடாது. சொந்தத் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் குவியும். எதிர்பாலின உறவுகளோடு நட்பு வைத்துக் கொள்ளும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். தினம்தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிறைய புகழ் தேடி வரப் போகின்றது. உங்களுடைய பேச்சாற்றலும் திறமையும் வெளிப்படும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். கஷ்டமாக இருக்கக்கூடிய பெரிய பெரிய விஷயங்களை எல்லாம் கூட சுலபமாக முடித்து விடுவீர்கள். வாங்கிய கடனை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி கொடுத்து விடுவீர்கள். குடும்பத்தோடு வெளியூர் பயணங்கள் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. தினம் தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமான வாரமாக இருக்கப் போகின்றது. நீங்கள் எதிர்பாராத நல்லது கூட உங்களை தேடி வரும். வருமானம் பல மடங்காகப் பெருகும். சந்தோஷத்தில் உங்களால் என்ன செய்வது என்றே தெரியாது. வியாபாரத்தில் புதிய முயற்சியில் ஈடுபடலாம். வங்கி கடன் சுலபமாக கிடைக்கும். விரும்பிய வரன் கை கூடிவரும். குடும்ப விஷயங்களில் பேசும் போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவி இருவருமே அனுசரித்து செல்லுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. இந்த வாரம் முழுவதும் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று இருப்பீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று எல்லா வேலையையும் ஒரு நாளுக்கு முன் கூட்டியே செய்து வைத்து விடுவீர்கள். சொந்த தொழிலில் கொஞ்சம் கவனம் தேவை. யாரை நம்பியும் பணத்தை கொடுக்க வேண்டாம். யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வாகனங்களில் செல்லும் போது கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். வார்த்தைகளில் நிதானம் தேவை. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். கடன் வாங்கி இருந்தால் அதை உடனடியாகத் திருப்பி கொடுக்க பாருங்கள். தினம்தோறும் அம்பாள் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி கிடைக்கக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. வெற்றி என்றால் சுலபமான வெற்றி அல்ல. கொஞ்சம் போராட்டத்திற்கு பின்பு கிடைக்கக்கூடிய வெற்றி. ஆகவே இந்த வாரம் முழுவதும் நீங்கள் விடா முயற்சி செய்ய வேண்டும். அந்த விடாமுயற்சி உங்களுக்கு விஸ்வரூப வெற்றியைத் தேடிக் கொடுக்கும். எந்த ஒரு விஷயத்திலும் தோற்றுப் போய் விட்டோமே என்று அசந்து போய் அமர வேண்டாம். சிக்கலான வேலையைக் கூட முடித்துக் காட்டும் திறன் உங்களிடம் உள்ளது. அயராது உழையுங்கள். வெற்றி உங்கள் பக்கமே. தினம்தோறும் ஹனுமன் வழிபாடு மன தைரியத்தை கொடுக்கும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சில சிக்கல்கள் இருக்கும். எந்த பிரச்சனைக்கு எந்த முடிவு எடுப்பது என்று தெரியாமல் கொஞ்சம் குழப்பம் அடைவீர்கள். இருந்தாலும் வருத்தப்பட வேண்டாம். பெரிதாக பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு இல்லை. எல்லா விஷயத்திலும் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். அவசரப்படக்கூடாது. ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். மனைவிக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். தினம்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். இருப்பினும் பெரிய பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு இல்லை. நினைத்தது நடக்காத போது கொஞ்சம் கோபம் வரத்தான் செய்யும். இருப்பினும் வாழ்க்கை என்றால் அப்படி மேலும்கீழும் இருக்கத்தான் செய்யும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் காட்டுங்கள். எந்த விஷயத்திலும் முன் கோபப்பட வேண்டாம். சொந்தத் தொழிலில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். பிள்ளைகளால் லேசாக சிறிய மனவருத்தம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆடம்பர செலவை குறைத்துக் கொள்வது நல்லது. தினம்தோறும் ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை மனதிற்குள் உச்சரியுங்கள்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். நீங்கள் தவறாக செய்யக்கூடிய ஏதோ ஒரு காரியம் கூட இறுதியில் உங்களுக்கு ஏதாவது ஒரு நன்மையை கொண்டு வந்து சேர்க்கும். கடன்தொகை வசூலாகும். விற்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த உங்களுடைய சொத்துக்களை நல்ல விலைக்கு விற்று முடிப்பீர்கள். புதிய சொத்து சுகம் வாங்க கூடிய யோகம் உள்ளது. வாய் ஜால வித்தையால் நிறையவே சாதிக்க போகிறீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். தினம்தோறும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. புதியதாக யாரிடமும் நட்பு வைத்துக்கொள்ள வேண்டாம். குடும்ப விஷயங்களை மூன்றாவது மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களுடைய நெருங்கிய உறவுகளாக இருந்தாலும் அதில் பகை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. விலை உயர்ந்த பொருட்கள் பணம் இவைகளை பத்திரமாக வைக்க வேண்டும். திருடு போவதற்கு வாய்ப்பு உள்ளது. அதேசமயம் தேவையற்ற வீண் விரயம் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வெற்றி என்பது அவ்வளவு சுலபமாக உங்களுக்கு கிடையாது. கொஞ்சம் போராட்டத்தில் தான் வெற்றியை அடைய முடியும். எதிலும் கொஞ்சம் இந்த வாரம் உஷாராக இருக்கவேண்டும். தினம்தோறும் மனதிற்குள் ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருங்கள்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தேவையற்ற பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளக் கூடிய வாரமாக இருக்கப்போகின்றது. உங்களுடைய வாயால் உங்களுக்கு சூனியத்தை வைத்துக் கொள்வீர்கள். அந்த அளவிற்கு பிரச்சனைகள் வரும். வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்தால் பிரச்சினைகள் இல்லை. எதையும் நீங்களே இழுத்து கொள்ள வேண்டாம். மற்றபடி குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சொத்துசுகம் வாங்க கூடிய யோகம் உள்ளது. வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் நடக்கும். வழக்கு உங்கள் பக்கம் தீர்ப்பாகும். நம்முடைய வாயை மூடி வைத்துக்கொண்டு அமைதியாக இருந்தால் தப்பித்தோம். தினம்தோறும் மவுன விரதம் இருங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது. இந்த மாதம் 8, 9 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் உள்ளது.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும். கவலைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கும். குடும்பத்தில் சந்தோஷமான நல்ல காரியங்கள் நடக்கும். தேவையற்ற இடங்களில் பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள். யாரை நம்பியும் எதற்காகவும் வாக்கு கொடுக்க வேண்டாம். வாக்கை நிறைவேற்றாமல் போய் விட்டால் அது உங்களுக்கு தான் அவமானத்தை தேடித் தரும். வாகனங்களில் செல்லும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மேல் அதிகாரிகள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். தினம் தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -