இந்த வார ராசிபலன் 7-06-2021 முதல் 13-06-2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சி நிறைந்த வாரமாக இருக்கப்போகின்றது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உறவினர்களின் வருகை இருக்கும். சுபச்செலவுகள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. சொந்தத் தொழில் கொஞ்சம் மந்தமாக தான் செல்லும். முடிந்தவரை வெளியாட்களிடம் வீண் விவாதம் செய்வதை தவிர்த்துக் கொள்வது நல்லது. அறிமுகமில்லாத மனிதர்களிடம் எந்த ஒரு நெருங்கிய பழக்கத்தினையும் வைத்துக்கொள்ள வேண்டாம். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மனநிறைவான வாரமாக தான் இருக்கப் போகின்றது. தேவையற்ற பிரச்சினைகளில் இருந்து படிப்படியாக விடுபட்டு சந்தோஷமான வாழ்க்கையை நடத்திச் செல்லப் போகிறீர்கள். குடும்பத்திற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கும் சந்தர்ப்பங்கள் அமையும். எந்த ஒரு வேலையிலும் திறமையாக செயல்பட்டு அந்த வேலையை வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள். சொந்தத் தொழிலில் எதிர்பாராத முன்னேற்றங்கள் வரும். எதிர்பார்த்ததை விட அதிகமான லாபம் கிடைக்கும். தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணம் பாக்கெட்டை நிரப்ப போகின்றது. வந்த பணத்தை எப்படி செலவு செய்வது என்று தெரியாத அளவிற்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆனால், சேமிப்பு அவசியம் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்பு வரும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்கள் பக்கம் தீர்ப்பாகும். வேலை சம்பந்தமாக, தொலை தூர பயணத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை. தினம்தோறும் சிவ வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுக்கக்கூடாது. பொறுமை அவசியம் தேவை. பணம் சம்பந்தப்பட்ட பரிமாற்றங்களில் உஷாராக இருக்கவும். யாரையும் நம்பியும் கடனாக படத்தை கொடுக்காதீர்கள். கடனாகவும் பணத்தை வாங்காதீர்கள். வேலை செய்யும் இடத்தில் அவ்வப்போது சின்னச் சின்ன சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சொந்த தொழிலில் எதிர்பார்த்ததை விட லாபம் குறைவாகத்தான் கிடைக்கும். தினம் தோறும் அம்மன் வழிபாடு நன்மையை தரும்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. எந்த ஒரு காரியத்தைத் தொட்டாலும் அது இழுத்துக் கொண்டே செல்லும். எடுத்த காரியத்தை முடிக்க முடியாமல் கொஞ்சம் திணறத்தான் செய்வீர்கள். இருப்பினும் விடாமுயற்சி வெற்றி தரும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவுபடுத்தலாம். இருப்பினும் வங்கியில் மட்டுமே கடன் வாங்குவது நன்மையை தரும். குடும்பத்தில் உள்ள பெண்கள் குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்ல வேண்டும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். தினம் தோறும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அற்புதமான வாரமாக தான் இருக்கப்போகின்றது. வேலை செய்யும் இடத்தில் நீங்கள் எதிர்பாராத பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழில் செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. எதிர்பாராத லாபம் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. பணம் காசுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. இருப்பினும் உங்களுடைய ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வீட்டு உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் வீட்டில் வாயில்லா ஜீவன்களை வளர்த்து வந்தால் அவைகளையும் அக்கறையாக பார்த்துக்கொள்ள வேண்டும். தினந்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கையெழுத்து வாங்குவதில் அல்லது பத்திரம் பதிவு செய்ய வேண்டிய விவகாரங்கள் ஏதேனும் இருந்தால் இந்த வாரம் அந்த முயற்சிகளை தாராளமாக எடுக்கலாம். குடும்பத்தில் சந்தோஷமாக சில நல்ல விஷயங்கள் நடக்கப்போகின்றது. தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கும். தேவையற்ற கடன் பிரச்சனையிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். இந்த வாரம் கஷ்டம் என்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லை. சுமுகமாக செல்லும். தினமும் காலையில் குலதெய்வத்துக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல முன்னேற்றத்தைத் தரும் வாரமாக தான் இருக்கப் போகின்றது. புதியதாக வீடு வாகனம் சொத்து வாங்க கூடிய வாய்ப்புகள் வரலாம். உங்களுடைய வாழ்க்கை துணைக்கு ஆடம்பரமான பரிசுப்பொருட்களை வாங்கி அன்பளிப்பாக கொடுத்து மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் உறவினர்களின் வருகை இருக்கும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். முடிந்தவரை வெளியிடங்களுக்கு அனாவசியமாக செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள். வீட்டிலிருந்து அலுவலகப் பணியை மேற்கொள்பவர்களுக்கு சில சங்கடங்கள் அவ்வப்போது வரும். வேலைபளு அதிகரிக்கும். வியாபாரம் எப்போதும்போல சுமுகமாக செல்லும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும். காலையில் சூரியன் உதயமாகும் போது சூரிய நமஸ்காரம் செய்வது நன்மை தரும்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மதிப்பும் மரியாதையும் கூட போகின்றது. உங்களை சுற்றி உள்ளவர்களுக்கு நீங்கள் ஒரு ஹீரோ போல தெரிய போகிறீர்கள். அந்த அளவிற்கு புத்திக்கூர்மையும் திறமையும் வெளிப்படும். நீங்கள் வேலை செய்யும் விதமும் பிரகாசமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் புகழின் உச்சிக்கே செல்வீர்கள். இதைப்பார்த்து பொறாமையில் நிறையபேர் உங்களுக்கு பின்னால் குழி தோண்ட தொடங்குவார்கள். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். தினம்தோறும் காலையில் கண்களை மூடி ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை சொல்லி தியானத்தில் ஈடுபட்டு மனதை அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். பிரச்சனை என்று மாட்டிக் கொண்டால் எதிராளிகளை எடுத்தெறிந்து பேச வேண்டாம். குறிப்பாக அரசாங்கம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள். அவர்களை எதிர்த்து பகையை உண்டு பண்ணிக் கொள்ள வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வந்து போகும். சொந்த தொழில் சுமுகமாக செல்லும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கொஞ்சம் வேலை சுமை அதிகமாக தான் இருக்கும். தேவையில்லாமல் முன்கோபத்தை வெளிக் காட்டாதீர்கள். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரக்கூடிய வாரமாக தான் இருக்கப் போகின்றது. நீங்கள் செல்லுமிடமெல்லாம் உங்களுக்கு நல்ல வரவேற்பும் மரியாதையும் கிடைக்கும். இருப்பினும் உங்களுடைய முன்கோபமும் சில தேவையற்ற வார்த்தைகளும் உங்களுக்கு பிரச்சினைகளை கொண்டு வந்து சேர்த்துவிடும். வேலை செய்யும் இடத்தில் நன்றாக உழைத்து விட்டு, அதற்கான பலன் கிடைப்பதில் ஏதாவது ஒரு குழப்பம் வந்துவிடும். சில தேவையற்ற சகவாசத்தின் மூலம் உங்களுடைய பெயர் கெட்டுப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதையாக அடுத்தவர்களிடம் பழகவேண்டும். யாரையும் நம்பி ஏமாறாதீர்கள். தினம்தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுறுசுறுப்பான வாரமாக இருக்கப்போகின்றது. அடுத்த வாரம் செய்யக்கூடிய வேலையை கூட இந்த வாரமே செய்து முடித்து விடுவீர்கள். ஆனால், பணத்தட்டுப்பாடு உங்களுக்கு இருக்கும். செலவுக்கு ஏற்ற வருமானம் வராது. அவ்வப்போது கடன் பிரச்சனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த மாத இறுதிக்குள் உங்களுடைய கடன் பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக குறைந்துவிடும். வியாபாரத்தில், வரும் சில நாட்களில் படிப்படியாக முன்னேற்றத்தை காணலாம். எல்லா விஷயத்திலும் கொஞ்சம் உஷாராக இருந்து கொள்ளுங்கள். யாரையும் நம்ப வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ள வேண்டும். முடிந்தால் ஒருமுறை குலதெய்வ கோவிலுக்கு சென்று குல தெய்வத்தை வழிபாடு செய்வது நன்மை தரும்.