இந்த வார ராசிபலன் 28-06-2021 முதல் 04-07-2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் இருக்கப்போகின்றது. புதிய முயற்சிகள் வெற்றி தரும். வருமானம் அதிகரிக்கும். கூடவே சுபச் செலவுகளும் அதிகரிக்கப் போகின்றது. வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்களை தொடங்க ஆரம்பிப்பீர்கள். உறவினர்களின் வருகை இருக்கும். வேலை செய்யும் இடத்தில் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சக ஊழியர்களிடமும் அனுசரித்து செல்ல வேண்டும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திறமைகள் வெளிப்பட போகும் வாரமாக இருக்கப்போகின்றது. சாதுரியமாக சில விஷயங்களை பேசியே சாதிக்க போகிறீர்கள். அந்த அளவிற்கு உங்களுடைய பேச்சு திறன் அதிகரிக்கும். உங்களுடைய பேச்சில் மயங்கி உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக பேசப் போகிறார்கள். வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம், என்று சந்தோஷத்திற்கு இந்த வாரம் குறைவில்லை. குலதெய்வ வழிபாட்டை மறக்க வேண்டாம்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. எல்லா விஷயத்திலும் உஷாராக இருக்க வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். மேலதிகாரிகளை வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் அனுசரித்து செல்லுங்கள். அறியாமல் தவறு செய்தால் கூட, அதை ஒப்புக் கொள்ளுங்கள். பொய் சொல்லி தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்காதீர்கள். அது உங்களுக்கே ஆபத்தாக முடிந்துவிடும். காலை எழுந்தவுடன் மனதை அமைதிப்படுத்திக் கொள்ள ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லி தியானம் செய்ய வேண்டும்.

கடகம்:
கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் பொறுமையாக இருப்பது நல்லது. செய்யும் வேலையை அப்படியே செய்து வாருங்கள். புதியதாக முயற்சி செய்யவும் வேண்டாம். செய்யும் வேலையை தள்ளிப்போடவும் வேண்டாம். முடிந்தவரை நாளை செய்ய வேண்டிய வேலையை, இன்றே செய்து முடிப்பது நன்மையை தரும். குடும்பத்தில் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் புதிய முதலீடு செய்ய வேண்டாம். தொழிலை விரிவுபடுத்த வேண்டாம். அது அப்படியே இருக்கட்டும். உங்கள் கடமைகளை மட்டும் சரிவர செய்ய வேண்டும். தினம்தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரும் வாரமாக அமையப்போகின்றது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். குழந்தைகள் பெற்றவர்களுக்கு பெருமை சேர்க்க போகிறார்கள். வீட்டில் சுப காரியங்கள் நடக்க தொடங்கும். வீட்டில் உறவினர்களின் வருகை இருக்கும். இருப்பினும் உறவினர்களிடம் பேசும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தேவையற்ற சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முடிந்தவரை உங்களுடைய குடும்ப விஷயங்களை நெருங்கிய உறவினர்களிடம் நெருங்கிய நண்பர்களிடமோ பகிர்ந்துகொள்ள வேண்டாம். தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். தேவையற்ற மூன்றாவது நபரின் விஷயங்களில் சுத்தமாக தலையிடக்கூடாது. யாரை நம்பியும் கடன் கொடுக்க வேண்டாம். யாரை நம்பியும் கடன் வாங்க வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சில பிரச்சனைகள் வரும். முடிந்தவரை வெளியூர் பயணத்தை தவிர்த்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ள வேண்டும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு தடைகளை தகர்க்கும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக இருக்க போகின்றது. நீண்ட நாட்களாக நீங்கள் முயற்சி செய்து வந்த ஒரு காரியம் வெற்றி அடையும். அதன் மூலம் மனம் சந்தோஷம் அடையும். இருப்பினும் ஏதோ ஒரு பிரச்சினையில் சிக்கிக் கொண்டிருப்பது போலவே ஆழ்மனது சொல்லிக் கொண்டிருக்கும். அதை நினைத்து குழம்பாதீர்கள். எல்லாம் பிரமை தான். உங்களுடைய குறிக்கோளை நோக்கி உங்களுடைய முயற்சியை மேற்கொண்டு செல்ல எந்த தடைகளும் வராது. நிச்சயமாக வெற்றி உண்டு. குடும்ப பிரச்சனைகளை மட்டும் கொஞ்சம் பார்த்து கையாளவேண்டும். சண்டைகளை பெரிசு படுத்த வேண்டாம். தினம் தோறும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பாராத நன்மைகள் நடக்கப்போகின்றது. உங்களுடைய வாழ்க்கையில் எதிர்பாராத திருப்புமுனை ஏற்பட்டு, நல்ல முன்னேற்றத்தை அடைய நிறைய வாய்ப்புகள் வரும். அதை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது உங்களுடைய கையில்தான் உள்ளது. என்னால் முடியாது, என் தகுதிக்கு இந்த வேலை சரியானது அல்ல, அப்படி என்று ஒதுங்கி விடாதீர்கள். நிச்சயம் உங்களுக்கு வரக்கூடிய வாய்ப்புகள் உங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும். முடிந்த வரை தேவையற்ற மூன்றாவது மனிதர்களின் சகவாசத்தை நிறுத்திக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு மன குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது. தினம்தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களே இந்த வாரம் நன்மையும் தீமையும் கலந்து இருக்க போகின்றது. ஒரு இடத்தில் மரியாதை உயரும். ஒரு இடத்தில் மரியாதை அதலபாதாளத்திற்கு சென்று விடும். என்ன செய்வது. நேரமும் காலமும் சரியில்லை என்றால் நம்மை நாம்தான் சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டும். கவலையை விட்டு விடுங்கள் அடுத்த வாரத்திற்குள் எல்லாம் சரியாகிவிடும். உங்களுடைய வேலையை நீங்கள் செய்தால் அதற்குரிய பலன் கிடைக்கும். முயற்சிகளை கைவிட வேண்டாம். நண்பர்களுக்காக, நண்பர்கள் என்று நம்பி, முழுமையாக எந்த ஒரு வேலையும் செய்யாதீர்கள். ஏமாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் திறமையோடு செயல்படப் போகிறீர்கள். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று சொல்லுவார்கள் அல்லவா, ஒரே வேளையில் பல சம்பாத்தியம் கிடைக்கப் போகின்றது. மனம் சந்தோஷத்தில் திக்கு முக்கு ஆட போகின்றது. முடிந்தவரை உங்களை சுற்றியிருப்பவர்களிடத்தில் ஒரு எச்சரிக்கையான கண்ணோட்டம் இருக்க வேண்டும். முன்னேற்றத்தை பிடிக்காதவர்கள் சதி செய்து விடக்கூடாது அல்லவா. நீங்களும் யாரையும் இழிவாக பேசக்கூடாது. தினம்தோறும் ஹனுமன் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இது ஒரு சோதனையான வாரமாக தான் இருக்கும் போகின்றது. நீங்கள் நேர்வழியில் செல்ல வேண்டுமென்று நினைப்பீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களை குறுக்கு வழியில் இழுத்துச் செல்ல பார்ப்பார்கள். நல்லது கெட்டது, நியாயம் தர்மம், பாவ புண்ணிய கணக்குகளை பார்க்கும் உங்களால், கண்களை மூடிக்கொண்டு எந்த ஒரு தவறான காரியத்தையும் செய்ய முடியாது. ஆனால் வேறு வழியே இல்லை குறுக்குப் பாதையில் சென்றே ஆக வேண்டிய சூழ்நிலை வரும் பட்சத்தில் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும். உலகத்தோடு ஒத்து போய் வாழ கற்றுக்கொள்ளுங்கள். அதுதான் உங்களுடைய வாழ்க்கைக்கு நல்லது. முன் கோபம் வேண்டாம். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும். புதிய வேலையை தொடங்கலாமா, புதிய வேலைக்கு முயற்சி செய்யலாமா, நம்முடைய வாழ்க்கைக்கு இது நல்லதா கெட்டதா, என்ற தடுமாற்றம் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். இருப்பினும் உங்களுடைய புத்திசாலித்தனத்தால் உங்களுக்கு எது நல்லது, உங்கள் வாழ்க்கைக்கு எது நல்லது என்று தேர்ந்தெடுத்து சரியான பாதையில் தான் செல்லப் போகிறீர்கள். மனக் குழப்பம் வேண்டாம். தெளிவோடு முடிவுகளை எடுங்கள். உங்களுக்கு இந்த வாரம் நன்மை மட்டுமே நடக்கும். தினம் தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -