இந்த வார ராசிபலன் 01-03-2021 முதல் 07-03-2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. அலுவலக பணியில் அவ்வப்போது சின்னச் சின்ன மாற்றங்கள் ஏற்படும். உயர் பதவி கிடைக்க, இடமாற்றம் ஏற்பட, சம்பள உயர்வு கிடைக்க, வாய்ப்பு உள்ளது. வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபச் செலவுகளும் ஏற்படும். சுபவிரயம் அதிகமாக இருப்பதால், கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். இருப்பினும் தேவைக்கு ஏற்ப கடன் தொகையும் நேரத்துக்கு கைக்கு வந்துவிடும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். தினமும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரும் வாரமாக தான் அமையப்போகின்றது. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முதலீடுகளை செய்து உங்களுடைய தொழிலை விரிவுபடுத்திக் கொள்ளலாம். அலுவலக பணியில் நல்ல பெயர் கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவைப் பெற்று நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். வீட்டில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இருப்பினும் வீட்டில் இருக்கக்கூடிய சண்டை பிரச்சனைகளை, மூன்றாவது மனிதரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் ஏதாவது இருந்தால் இந்த வாரம் அதை செய்து முடிக்கலாம். தினம்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. அதாவது நீங்கள் செய்யும் முயற்சியில் சில முறை தோல்வி அடைந்த பின்பு, பலமுறை முயற்சி செய்த பின்பு, வெற்றியை அடைய வேண்டிய சூழ்நிலை இருக்கும் அதிக உழைப்பை போட வேண்டியதாக இருக்கும். சோம்பேறித்தனத்தை தள்ளி வைத்துவிட்டு, விடாமுயற்சியை பின்பற்றி வந்தால் போதும். இந்த வாரத்தை ஜெயித்து விடலாம். அலுவலக பணியில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லவேண்டும். சொந்தத் தொழிலில் கடன் வாங்கி முதலீடு செய்ய வேண்டாம். மற்றபடி தினசரி வேலைகளை எப்போதும் போல செய்யுங்கள். தினம்தோறும் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டியது அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவு எடுத்து, அனாவசியமான வார்த்தைகளை பேசி விடாதீர்கள். இந்த வாரம் பொறுமை அவசியம் தேவை. குடும்பத்தில் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. யாராவது ஒருவர் விட்டு கொடுக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் அதிகப்படியான வேலை சுமை இருக்கும். அனுசரித்து செல்ல வேண்டும். சொந்தத் தொழிலில் லாபம் ஏற இறங்க தான் இருக்கும். சீராக எதையும் எதிர்பார்க்க முடியாது. வேலைப்பளு இருந்தாலும் மனதை உற்சாகப்படுத்தும் வித்தையைக் கற்றுக் கொண்டு வாழ்க்கையை நடத்திச் செல்லுங்கள். தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் கவனமாக இருக்க வேண்டிய வாரமாக இருக்கப்போகின்றது. நீங்கள் நல்லதே செய்தாலும் அது அடுத்தவர்களுடைய கண்ணுக்கு தவறாகத்தான் தெரியும். நல்லதே பேசினாலும் அது அடுத்தவர்களுடைய காதுக்கு கெட்டதாக தான் கேட்கும். ஆகவே முடிந்த வரை எல்லா விஷயத்திலும் மௌனமாக இருப்பது நல்லது. தேவைக்கு ஏற்ப பணவரவு இருக்கும். சொந்த பந்தங்களின் வருகை இருக்கும். சொந்த பந்தங்களிடம் விவாதம் செய்தால் கூட சில பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளது. தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுறுசுறுப்பான வாரமாக இருக்கப்போகின்றது. வேலை செய்யும் இடத்தில் எல்லா வேலையையும் முன்கூட்டியே செய்து விட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். சொந்தத் தொழில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக செல்லும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடலிலிருந்து தேவையற்ற பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, புதிதாக பிறந்தது போல ஒரு உணர்வு உங்களுக்குள் ஏற்படும். புத்துணர்ச்சியோடு செயல்பட்டு புதியதாக இந்த வாரத்தை தொடங்கப் போகிறீர்கள். தினந்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குழப்பங்கள் நீங்க கூடிய வரமாக இருக்கப்போகின்றது. தேவையற்ற பிரச்சனைகளில் சிக்கி தவிப்பவர்கள் மன குழப்பத்தில் இருந்து விடுபட்டு, தெளிவான மனநிலைக்கு வரப்போகிறார்கள். அதாவது நீண்ட நாள் பிரச்சனைக்கு கூட, ஒரு முடிவு எடுத்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது. மற்றபடி சொந்தத் தொழில் அலுவலக பணி எல்லாமே சுமுகமாக செல்லும். கடன் வாங்குவதை மட்டும் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். அனாவசிய செலவை குறைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் முன்னேற இவையிரண்டும் மிகவும் முக்கியம் என்பதை உணர வேண்டும். சனிக்கிழமை ஹனுமான் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் யோகமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதில் உங்களுக்கு வெற்றியே. உங்களை தரக்குறைவாக பேசியவர்களின் முன்பு, தலைநிமிர்ந்து வாழ போகும் நேரம் வந்துவிட்டது. உங்களுடைய திறமையானது முழுமையாக வெளிப்பட்டு எல்லா விஷயத்திலும் நல்ல லாபத்தை பெற போகிறீர்கள். நீங்கள் செய்யும் வேலையாக இருந்தாலும் சரி, தொழிலாக இருந்தாலும் சரி, அதில் நீங்கள் நம்பர் ஒன்னாக வருவதற்கு நல்ல நேரமிது. முறையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். மன நிம்மதி சந்தோஷத்திற்கு எந்த ஒரு குறையும் வராது. தினம்தோறும் பெருமாள் வழிபாடு நன்மையை தரும்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக அமையப்போகின்றது. சுப காரிய தடை நீங்கும். நீண்ட நாட்களாக கொடுக்க முடியாமல் இருந்து வந்த கடன் தொகையை திருப்பிக் கொடுத்து விடுவீர்கள். வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் வேலை செய்யும் இடத்திலும் மனநிறைவோடு இருப்பீர்கள். தேவையற்ற மனசஞ்சலங்கள் வருவதற்கு வாய்ப்பு இல்லை. தினமும் குல தெய்வத்தை வழிபட மறக்க வேண்டாம்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் தடுமாற்றமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. சொந்தத் தொழில் சுமூகமாக செல்லுமே தவிர, லாபம் என்ற ஒன்றை பெரியதாக பார்க்க முடியாது. அலுவலகத்தில் எவ்வளவுதான் வேலை செய்தாலும் அதற்கான ஊதியம் கிடைப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. இருப்பினும் விடாமுயற்சியை கையில் வைத்துக் கொண்டு, முயற்சி செய்து கொண்டே இருங்கள். நல்ல காலம் கூடிய விரைவில் வரும். தேவையற்ற வம்பு வாக்குவாதங்களில் தலையிட வேண்டாம். நல்லதே நினையுங்கள் நல்லதே நடக்கும். தினம்தோறும் ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அற்புதமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. நீங்கள் நினைத்தபடி வேலை செய்யும் இடத்தில் நல்ல ஊதியம் கிடைக்கும். உயர்பதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய உடல் நலத்தில் மட்டும் கொஞ்சம் அக்கறை கொள்ள வேண்டும். முடிந்த வரை வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் சுபகாரியப் பேச்சுகளை தாராளமாக தொடங்கலாம். எந்தவித சிக்கலும் ஏற்படாது. புதிதாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். கடன் வாங்குவதை குறைத்துக் கொள்ளுங்கள். வாங்கிய கடனை அடைக்க பாருங்கள். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தெளிவுபெறும் வாரமாக இருக்கப்போகின்றது. கடந்த வாரம் எதை செய்வது, எதை செய்யக்கூடாது என்று நீங்கள் இருந்த மன குழப்பத்தில் இருந்து, இந்த வாரம் வெளிவந்தது, தெளிவான முடிவினை எடுக்கப் போகிறீர்கள். எந்த சூழ்நிலையிலும் இருக்கும் வேலையை அவசரப்பட்டு விட வேண்டாம். மேலதிகாரிகளை அனுசரித்து தான் செல்ல வேண்டும். புதிய வேலை கிடைப்பது என்பது கொஞ்சம் சிரமமான விஷயம். மனதை அலைபாய விடாமல் கட்டுப்படுத்தி, செய்யும் வேலையை சிறப்பாக செய்வது எப்படி என்று சிந்தித்தாலே, உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் வந்து விடும். மன அமைதிக்காக தினம்தோறும் ‘ஸ்ரீராம ஜெயம்’ மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இந்த வாரம் ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.