இந்த வார ராசி பலன் – மார்ச் 11 முதல் 17 வரை

Indha vara rasi palan

மேஷம்

Mesham Rasi

தேவையான அளவுக்கு பணவரவு இருந்தாலும், சேமிக்க முடியாதபடி செலவுகளும் ஏற்படும். சிலருக்கு சிறிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கி டையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மற்றவர்கள் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசினாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்துகொள்வது அவசியம். உங்கள் வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டாம்.

ரிஷபம்

Rishabam Rasi

பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிரச்னைகள் மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும். கடன்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். உழைப்புக்கேற்ற லாபம் கிடைப்பதால் உற்சாகம் உண்டாகும்.

- Advertisement -

மிதுனம்

midhunam

திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். தேவையற்ற செலவுகளால் கடன் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வழக்குகளில் இருந்து வந்த பிற்போக்கான நிலை மாறி, சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உயர்ந்த பதவி தேடி வரும். சம்பள உயர்வும் கிடைக்கும். ஆனால், சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இல்லை. மாணவ மாணவியர்க்கு பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.

கடகம்

Kadagam Rasi

பணவரவுக்குக் குறைவில்லை. உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். விலகிச் சென்ற நண்பர்கள் வலிய வந்து பேசுவார்கள். சிலருக்கு வெளிநாட்டி லிருந்து எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்க முடியாது. சிலருக்கு இட மாறுதல் கிடைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது. வியாபாரம் அபிவிருத்தி அடைய கூடுதலான முயற்சியும் உழைப்பும் தேவை

சிம்மம்

simmam

தேவையற்ற செலவுகள் இருக்காது. நல்ல வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உடனே சரியாகிவிடும், தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமண வயதில் உள்ளவர்கள் வரன் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். பணி நெருக்கடி இப்போது சற்று குறையும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி

Kanni Rasi

கணவன் – மனைவிக்கி டையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருப்பதுடன் தேவையற்ற செலவுகளும் ஏற்படாது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே இருக்கும். ஆரோக்கியம் சிறிதளவு பாதித்து மீண்டும் சரியாகிவிடும். சிலருக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அதற்கேற்ற ஆதாயமும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.

துலாம்

Thulam Rasi

எதிர்பார்த்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வருமானம் திருப்திகரமாக இருக்கும். தேவையற்ற செலவுகள் இருக்காது. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காகக் கொஞ்சம் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனை இருந்தாலும்கூட அதற்கேற்ற லாபம் கிடைக்காது. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு போதிய அளவு பண வசதி கிடைப்பதால் மனநிறைவு உண்டாகும்.

விருச்சிகம்

Virichigam Rasi

செலவுகள் அதிகரிப்பதால் சிலர் கடன் வாங்கவும் நேரிடும். பொருளாதார வசதி சுமாராகத்தான் இருக்கும். உறவினர்களுடன் வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரும். சிலருக்கு விரும்பிய இடத்துக்கு மாறுதல் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை நல்லபடியாக இருப்பதுடன், எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாகக் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும். சக நண்பர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை.

தனுசு

Dhanusu Rasi

குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். ஆனால், எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்தால், சாதகமாக முடியும். அலுவலகத்தில் உங்களுக்கு மறுக்கப்பட்டு வந்த சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும்கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பண வரவுக்கு குறைவிருக்காது. வியாபாரத்தில் விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கும். சக வியாபாரிகளுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். வருமானமும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

மகரம்

Magaram rasi

வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பார்த்ததை விடவும் பணவரவு அதிகமாக இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. வராது என்று நினைத்த கடன் வந்து சேரும். உடல் நலன் சிறிய அளவில் பாதிக்கப்படும். திருமண முயற்சிகள் சற்று இழுபறிக்குப் பின்னர் சாதகமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் திருப்தியாக இருக்கும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதுக்கு உற்சாகம் தரும் சம்பவங்கள் நடைபெறும்.

கும்பம்

Kumbam Rasi

உடன்பிறந்தவர்களின் வருகை மனதுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும். சிலருக்கு புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் கடுமையாக உழைத்தால் மட்டுமே விற்பனையை அதிகரிக்க முடியும்.

மீனம்

Meenam Rasi

திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். பணவரவு ஓரளவு திருப்தி தரும். விலகிச் சென்ற உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு உறவு கொண்டாடுவார்கள். வழக்குகளில் சாதகமான திருப்பம் ஏற்படும். தந்தையுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி, தந்தையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பற்று வரவில் பிரச்னை எதுவும் இருக்காது. தொலைதூர பயணங்கள் செல்ல நேரிடும்.

வார பலன், மாத பலன் என அனைத்தையும் படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.