இந்த வார ராசிபலன் – மார்ச் 16 முதல் மார்ச் 22 வரை

Indha vara rasi palan

மேஷம்:

Aries zodiac sign

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றத்தை தரக்கூடிய வாரமாக தான் அமையப் போகின்றது. இத்தனை நாட்களாக இருந்து வந்த உடல் உபாதைகள் அனைத்தும் இந்த வாரம் சரியாகிவிடும். முக்கிய முடிவுகளை எடுப்பதாக இருந்தால் மட்டும் சற்று சிந்தித்து நிதானத்தோடு எடுப்பது நன்மை தரும். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து சென்றால் சண்டை வராமல் தடுக்கலாம். அலுவலகப் பணியில் சற்று வேலைப்பளு அதிகமாக இருக்கும். சமாளித்து தான் ஆக வேண்டும். வியாபாரமும் சற்று மந்தமாக செல்லும். பிரச்சனை எதுவும் வராது. மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வத்தோடு படிப்பது வெற்றியைத் தரும். தினம்தோறும் அம்மன் வழிபாடு பிரச்சினைகளை தீர்க்கும்.

ரிஷபம்:

Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணவரவு திருப்தியாக அமையும். நீங்கள் எதிர்பாராத பணவரவு கூட உங்கள் கைக்கு வந்து சேரும். வீட்டில் உறவினர்களின் வருகையால் சுபச் செலவுகள் ஏற்படலாம். சந்தோஷமான செலவுதான். வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் முக்கிய முடிவுகளை மட்டும் இந்த வாரம் எடுக்க வேண்டாம். வேலைக்கு சென்று கொண்டிருப்பவர்களுக்கு அலுவலக பணியில் ஆர்வம் அதிகரிக்கும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. தினம் தோறும் மகாலட்சுமியை மனதார நினைத்து தீபமேற்றி வழிபடுவது நல்ல பலனை தரும்.

- Advertisement -

மிதுனம்:

Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுபிட்சமான வாரமாக அமையப்போகிறது. வீட்டில் இருந்த சின்ன சின்ன பிரச்சனைகள் கூட ஒரு முடிவுக்கு வந்துவிடும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். வேலை சம்பந்தமாக வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சற்று அலைச்சல் உண்டாகும். அலுவலக பணியில் எந்த பிரச்சனையும் இருக்காது. வியாபாரம் நல்லபடியாக செல்லும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. உங்கள் செலவுகளை ஈடு செய்யும் அளவிற்கு எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:

zodiac sign

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அற்புதமான வாரமாக அமையப்போகிறது. பண வரவு சீராக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. வீட்டில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். அலுவலகத்தில் பணிகள் சீராக நடக்கும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனம் செலுத்தி படிப்பது நல்லது. அநாவசிய பேச்சை குறைத்துக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்தினால் எந்த ஒரு பிரச்சனையும் வராது. சிவன் வழிபாடு நல்ல பலனைத் தரும்.

சிம்மம்:

Leo zodiac sign

சிம்மராசிக்காரர்களுக்கு நல்ல வாரமாக தான் இந்த வாரம் அமையப் போகிறது. எதிர்பாராத பணம் உங்கள் கைக்கு வந்து சேரும். ஆனால் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது. அலட்சியமாக இருந்துவிட்டால் மருத்துவ செலவு அதிகரித்து விடும். கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் சற்று ஒத்துழைப்பு கொடுங்கள். வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே லாபத்தை பெற முடியும். மாணவர்கள் கல்வியில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். தினந்தோறும் ஆஞ்சநேயர் வழிபாடு நல்ல பலனைத் தரும்.

கன்னி:

Virgo zodiac sign

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமான வாரமாக அமையப்போகிறது. கோபத்தைக் குறைத்துக் கொண்டு சற்று அனுசரித்து சென்றால் எல்லாம் சுகமே. சிக்கனமாக செலவு செய்ய வேண்டும். அதேசமயம் உங்களது பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். உறவினர்களிடம் வீண் விவாதம் வேண்டாம். அலுவலகத்தில் உங்கள் பணி மிகவும் சிறப்பாக செல்லும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் மேம்படும். தினந்தோறும் முருகர் வழிபாடு நல்ல பலனைத் தரும்.

துலாம்:

Libra zodiac sign

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல வாரமாக அமையப்போகிறது. பண வரவு சீராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலை காரணமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் நல்ல பெயரை எடுப்பீர்கள். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரத்தில் உங்கள் பங்குதாரர்கள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பார்கள். நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும் போது சற்று கவனமாக இருப்பது நல்லது. விநாயகர் வழிபாடு பிரச்சனையை போக்கும்.

விருச்சிகம்:

Scorpius zodiac sign

இந்த வாரம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடிய வாரமாக தான் அமையப்போகிறது. குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சினை தீரும். கணவரின் முயற்சிகளுக்கு, மனைவி உறுதுணையாக இருக்கப் போகிறார்கள். அலுவலகத்தில் மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது. உடன் பணிபுரிபவர்களே உங்களை காட்டிக் கொடுக்கும் நிலை வரலாம். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. மாணவர்கள் தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் படிப்பில் மட்டும் ஆர்வத்தைக் காட்ட வேண்டும். குரு வழிபாடு நன்மை தரும்.

தனுசு

Dhanusu Rasi

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியான வாரமாக அமையப்போகிறது. வருமானம் சீராக இருக்கும். புதிய முயற்சிகளை எடுக்க வேண்டாம். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அவசர முடிவு எடுப்பதாக இருந்தால் சற்று சிந்தித்து எடுப்பது நல்லது. வீட்டில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். அலுவலகப் பணியில் இருப்பவர்களுக்கு சந்தோஷமான சூழ்நிலை நிலவும். வியாபாரம் சற்று மந்தமாக தான் செல்லும். மாணவர்களுக்கு கல்வியில் அதிக ஆர்வம் ஏற்படும். அம்மன் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:

Capricornus zodiac sign

மகர ராசிக்காரர்களுக்கு சுகமான வாரமாக தான் இந்த வாரம் அமையப் போகிறது. எப்படிப்பட்ட செலவு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் தெம்பு உங்களிடம் வந்து விடும். பணவரவு சற்று குறைவாக காணப்படும். தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் நல்லபடியா நடக்கும். வீட்டில் சந்தோஷம் நிலவும். அலுவலகத்தில் வேலைச்சுமை சற்று அதிகமாகத்தான் இருக்கும். சமாளித்து விடுவீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீட்டை மட்டும் செலுத்த வேண்டாம். கவனத்தோடு இருந்தால் லாபம் நிச்சயம். மாணவர்களுக்கு கல்வியில் அதிக ஆர்வம் ஏற்படும். நவகிரக வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:

Aquarius zodiac sign

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷத்தை தரக்கூடிய வாரமாக தான் அமையப்போகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி தான். புதிய தொழில் தொடங்க வேண்டும் என்றாலும் இந்த வாரத்தில் தொடங்கலாம். நீங்கள் விரும்பிய கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. வழக்கம்போல் செல்லும். வியாபாரத்தில் புதிய முதலீட்டினை செலுத்தலாம். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம். உண்டு முருகன் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:

Pisces zodiac sign

மீன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான வாரமாகத்தான் இந்த வாரம் அமையப் போகிறது. சிலர் வேலை காரணமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. உறவினர்கள் பாராட்டும்படி உங்கள் குடும்ப சூழ்நிலை சிறப்பாக இருக்கும். அலுவலக பணியில் இடையூறுகள் வந்து போகும். இருந்தாலும் பிரச்சனை எதுவும் வர வாய்ப்பில்லை. வியாபாரத்தை விரிவு படுத்தலாம். புதிய முதலீடுகள் செய்யலாம். லாபம் அதிகம் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பெருமாள் வழிபாடு நல்ல பலனைத் தரும்.

இதையும் படிக்கலாமே
மாத பலன் வார பலன் என அனைத்து பலன்களையும் அறிய எங்களோடு இணைந்திருங்கள்.