இந்த வார ராசிபலன் – மார்ச் 2 முதல் மார்ச் 8 வரை

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
இந்த வாரம் பணவரவிற்கு எந்த குறைபாடும் இருக்காது. அதிகமாக வரும் செலவுகளைக் கூட எப்படியாவது சமாளித்து விடுவீர்கள். முக்கியமான விஷயங்களில் முடிவு எடுப்பதாக இருந்தால், வீட்டில் உள்ள பெரியோர்களின் ஆலோசனைப்படி முடிவெடுப்பது நன்மை தரும். அவசரம் வேண்டாம். இந்த வாரம் அலுவலகத்தில் சற்று வேலை அதிகமாக இருந்தாலும் அதை சமாளிக்கும் மன தைரியம் உங்களிடத்தில் வந்துவிடும். சொந்தத் தொழில் கடனுக்காக வியாபாரம் புதிய முயற்சிகள் செய்ய வேண்டாம். மாணவர்கள் உடல்நலனில் அக்கறை எடுத்து படிப்பது நல்ல முன்னேற்றத்தை தரும். சனிக்கிழமை அன்று பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி இலையால் அர்ச்சனை செய்வது நல்ல பலனைத் தரும்.

ரிஷபம்
இந்த வாரம் பணவரவு சீராக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. சுப விரய செலவு உண்டாகும். சிக்கனமாக செலவு செய்வது நல்லது. புதிய முயற்சிகள் வெற்றி அடையும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் வழக்கம்போல் சூழ்நிலை இருக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை காட்டுவார்கள். கடந்த வாரம் இருந்து வந்த கணவன் மனைவி கருத்து வேறுபாடு நீங்கும். ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
நீங்கள் எதிர்பாராத பணவரவு ஒன்று உங்கள் கைக்கு வந்து சேர அதிக வாய்ப்பு உள்ளது. புதிய முயற்சிகள் வெற்றியடையும். உறவினர்களும், நட்பும் சூழ சந்தோஷமாக இருக்கக்கூடிய வாரமாக இது அமையும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை சற்று கூடுதலாக தான் தெரியும். கவனமெடுத்து வேலை செய்வது நல்லது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி படிப்பது நன்மை தரும். செவ்வாய்க்கிழமை அன்று முருகன் கோவிலுக்கு சென்று வழிபடுவது நல்ல பலனை அளிக்கும்.

கடகம்:
பணவரவு எப்போதும்போல் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. அனாவசிய பேச்சைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் உங்கள் உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வியாபாரம் சற்று மந்தமாகத்தான் இருக்கும். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் தீபமேற்றி துர்கை அம்மனை வழிபடுவது நல்ல பலனைத் தரும்.

- Advertisement -

சிம்மம்:

வருமானத்திற்கு பற்றாக்குறை இருந்தாலும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பணத் தட்டுப்பாட்டை சமாளிக்கும் அளவிற்கு மனோதைரியம் வந்துவிடும். சிலருக்கு ஆன்மீக சுற்றுலா செல்ல வாய்ப்பு வரும். அலுவலகத்தில், பணியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்தத் தொழில் முன்னேற்றத்துடன் செல்லும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள். சுப காரியங்கள் தொடங்க பேச்சுக்கலை ஆரம்பிக்கலாம். திருமணத்தடை நீங்கும். தினமும் விநாயகரை வழிபட்டால் நன்மை நடக்கும்.

- Advertisement -

கன்னி:

பணவரவு சீராக இருக்கும். அனாவசிய செலவுகளை தவிர்த்துக் கொள்வது நல்லது. உறவினர்களின் மூலம் சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், வாக்குவாதங்களை தவிர்த்து கொள்ளலாம். நீண்ட தூரம் பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் ஏகப்பட்ட வேலை சுமை உங்களின் தலை மேல் விழும். செய்து முடித்தாலும் நல்ல பெயர் கிடைக்காது. அனுசரித்து போகவேண்டிய வாரம் தான் இது. வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். மாணவர்கள் அதிக ஆர்வத்தோடு படிப்பது முன்னேற்றத்தை தரும். அம்மன் வழிபாடு நல்ல பலனைத் தரும்.

துலாம்:

உங்களது தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணவரவு இருக்கும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சனை நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உங்களது நண்பர்கள் உங்களின் தேவையை அறிந்து உதவி செய்வார்கள். திருமண பேச்சுவார்த்தைகளை தொடங்கலாம். அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி மாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதனால் நன்மை தான் நடக்கும். பயம் ஏதும் இல்லை. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. சிவன் கோவிலுக்கு சென்று 10 நிமிடம் தியானம் செய்வது மன அமைதியைத் தரும்.

விருச்சிகம்:

பணவரவு சற்று குறைவாக இருந்தாலும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மனைவிவழி சொந்தங்களால் நல்ல செய்தி வந்து சேரும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். உங்களின் மதிப்பு உயரும். வியாபாரம் எப்பவும் போல் சுமுகமாக நடைபெறும். முடிந்தவரை புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறையும், என்பதால் அதிக கவனம் தேவை. வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்ல பலனைத் தரும்.

தனுசு

எதிர்பாராத பணவரவு மனதிற்கு நிறைவாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். உறவினர்களால் பிரச்சினைகள் வரக்கூடும் என்பதால் அநாவசிய பேச்சை தவிர்த்து கொள்ளவும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். கோபத்தை குறைத்துக் கொண்டு வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரம் வழக்கம்போல் செல்லும். மாணவர்கள் கடுமையாக உழைத்தால் தான் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும். தினம் தோறும் நவகிரக வழிபாடு நன்மை தரும்.

மகரம்:

போன வாரம் வரை மனநிம்மதி இல்லாமல் இருந்த பிரச்சனைகள் அனைத்தும், குடும்பத்தில் நல்லதொரு முடிவிற்கு வரும். மகிழ்ச்சியான வாரமாக இது அமையும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கும் நல்ல சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். விநாயகர் வழிபாடு நல்ல முன்னேற்றத்தை தரும்.

கும்பம்:

வருமானத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சினை ஒரு முடிவிற்கு வரும். ஆன்மீக சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் உங்களது மேலதிகாரிகளிடம் நல்ல பாராட்டைப் பெறுவீர்கள். சம்பளம் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவு செய்யலாம். நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. துர்க்கை வழிபாடு நல்ல பலனை கொடுக்கும்.

மீனம்:

எதிர்பாராத செலவுகள் வந்து சேரும் வாரமாக இது அமையப்போகிறது. எப்படியும் சமாளித்து விடலாம் என்ற மனப்பக்குவம் உங்களிடம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து பாடு நீங்கும். அலுவலகத்தில் எவ்வளவுதான் வேலையை சொடுக்கு போடும் நேரத்தில் செய்து முடித்தாலும், நல்ல பெயரை கிடைக்கவே கிடைக்காது. அனுசரித்து செல்லுங்கள். நல்ல காலம் வரும் வரை காத்திருக்கத்தான் வேண்டும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெருமாள் வழிபாடு நல்ல பலனைத் தரும்.

இதையும் படிக்கலாமே
மாத பலன் வார பலன் என அனைத்து பலன்களையும் அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -