இந்த வார ராசிபலன் – மார்ச் 9 முதல் மார்ச் 15 வரை

Indha vara rasi palan

மேஷம்:

Aries zodiac sign

இந்த வாரம் நீங்கள் எதிர்பார்த்த பணவரவு உங்கள் கைகளுக்கு வந்து சேரும். சொந்தத் தொழிலில் கடின உழைப்பு இருந்தால் நல்ல முன்னேற்றத்தை அடையலாம். சற்று சோம்பல் இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவது எல்லாவகையிலும் வெற்றியை தேடித்தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்படலாம். போட்டிகள் ஏற்படலாம். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு சற்று சிரமமான வாரமாக தான் இது அமையும். அம்மன் வழிபாடு சிறப்பான பலனைத் தரும்.

ரிஷபம்:

Taurus zodiac sign

இந்த வாரம் உங்களுக்கு சந்தோஷமான வாரமாக தான் அமையப்போகிறது. பணவரவு சீராக இருக்கும். எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும் சுலபமாக வெற்றி அடையும் சூட்சமத்தை அறிந்திருப்பீர்கள். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் நண்பர்களின் வருகையால் சந்தோஷமான சூழல் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு சிறப்பான வாரமாக இந்த வாரம் அமையும். பிரச்சனைகள் வந்தால் அனுசரித்து செல்வது நல்லது. அனாவசிய பேச்சு தவிர்த்துக் கொள்ளவும். விநாயகர் வழிபாடு நல்ல பலனைத் தரும்.

- Advertisement -

மிதுனம்:

Gemini zodiac sign

இந்த வாரம் உங்களுக்கு வருமானம் சற்று மந்தமாகத்தான் இருக்கும். சொந்த தொழில் எப்பவும் போல் செல்லும். அரசு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், இந்த வாரம் ஒரு நல்ல முடிவுக்கு வரும். அலுவலகப் பணியில் சற்று மந்தமான சூழ்நிலை ஏற்படும். மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் எடுத்து படிப்பது வெற்றியை தரும். அனாவசிய செலவைத் தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். சுபச் செலவு உண்டாகும். வாக்குவாதத்தை தவிர்த்து கொள்வது நன்மை தரும். வாகனங்களில் செல்லும் போது சற்று கவனமாக இருப்பது நல்லது. இந்த வாரம் சிவன் வழிபாடு சிறப்பானது.

கடகம்:

zodiac sign

இந்த வாரம் உங்களின் வருமானம் சீராக இருக்கும். சொந்தத் தொழில் அதிகப்படியான லாபத்தை பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தேவைக்கு அதிகப்படியான பணம் வந்தால் சேமித்து வைப்பது நல்லது. அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு குடும்பத்தில் நல்ல பெயர் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது. குரு வழிபாடு சிறப்பான பலனைத் தரும்.

சிம்மம்:

Leo zodiac sign

இந்த வாரம் நீங்கள் எதிர்பார்த்ததை விட உங்களுக்கு பண வரவு அதிகமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். தொழில் முன்னேற்றத்திற்கு தேவையான கடன் வசதி கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மேலதிகாரிகளிடம் பணிவாக பேச வேண்டும். ஆரோக்கியத்தில் மட்டும் சற்று அதிக கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் சில தடங்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதிக கவனம் தேவை. பெண்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். இந்த வாரம் பெருமாள் வழிபாடு மிகவும் சிறப்பானது.

கன்னி:

Virgo zodiac sign

இந்த வாரம் நீங்கள் எதிர்பார்த்த பணவரவு உங்கள் கைகளுக்கு வந்து சேரும். கடன் சுமை குறையும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்தத் தொழிலில் எப்படியாவது முன்னேற்றம் அடைய வேண்டும் என்று கடினமாக உழைப்பீர்கள். அலுவலகத்தில் உங்களது பெயரை நிலைநிறுத்த, உங்களது கடின உழைப்பு உறுதுணையாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கும். இந்த வாரம் முருகர் வழிபாடு நல்ல பலனைத் தரும்.

துலாம்:

Libra zodiac sign

இந்த வாரம் உங்களது பொருளாதாரம் நல்ல நிலைமையில் இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்கள் கைகளுக்கு வந்து சேரும். சொந்தத் தொழில் முன்னேற்றத்துடன் செல்லும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கடன் பாக்கிகள் வசூலாகும். அலுவலகப் பணியில் மேலதிகாரிகளிடம் நல்ல பெயரை சுலபமாக வாங்கி விடுவீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக ஆர்வம் எடுத்து படிப்பது நல்ல முன்னேற்றத்தை தரும். பெண்களுக்கு குடும்பத்தில் மரியாதை கூடும். இந்த வாரம் நவக்கிரக வழிபாடு நல்ல பலனைத் தரும்.

விருச்சிகம்:

Scorpius zodiac sign

இந்த வாரம் பணவரவு சீராக இருக்கும். வீடு, நிலம், வாகனம் போன்ற்றை வாங்குவதாக இருந்தால் வாங்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். சொந்த தொழிலில் புதிய முயற்சியில் ஈடுபடுவது அதிக லாபத்தைத் தரும். முக்கியமான முடிவுகளை எடுப்பதாக இருந்தால் பெரியோர்களின் ஆலோசனைப்படி எடுப்பது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகமாக காணப்படும். சமாளித்து விடுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் கொஞ்சம் சோம்பல் ஏற்படும். சுறுசுறுப்பாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம். பெண்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் வாரமாக இது அமையும். தினமும் கண்களை மூடி 5 நிமிடம் தியானத்தில் இருப்பது நல்ல பலனை தரும்.

தனுசு

Dhanusu Rasi

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல வாரமாக அமையப்போகிறது. பண வரவு நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். அதற்கேற்ற சுப செலவும் வந்துவிடும். வீட்டில் விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும். இதனால் சில பிரச்சனைகள் வரவாய்ப்பு உள்ளது. அநாவசிய பேச்சை தவிர்த்தால் தப்பித்துக்கொள்ளலாம். வியாபாரத்தில் சற்று போட்டி நிறைந்த நிலைமை காணப்படும். அலுவலகத்தில் நல்ல பெயர் எடுக்க அதிக உழைப்பு தேவைப்படும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. பெண்கள் குடும்ப பணியில் சிறப்பாக ஈடுபடுவார்கள். துர்க்கை வழிபாடு நல்ல பலனைத் தரும்.

மகரம்:

Capricornus zodiac sign

இந்த வாரம் உங்களுக்கு பணவரவு சீராக இருக்கும். தொழிலில் இருந்த மந்தநிலை நீங்கி நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். முன்னேற்றத்தில் இருந்த எல்லா தடைகளும் விலகும். அலுவலகப் பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வந்துவிடும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடந்த வாரத்தை விட இந்த வாரம் எல்லா வகையிலும் முன்னேற்றம் அடையக்கூடிய வாரமாக தான் அமையப்போகிறது. பெண்களுக்கு மட்டும் குடும்பத்தில் சிக்கல்கள் வந்து போக வாய்ப்பு உள்ளது. விநாயகர் வழிபாடு வினைகளைத் தீர்க்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

கும்பம்:

Aquarius zodiac sign

கும்ப ராசிக்காரர்களுக்கு பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அனாவசிய செலவுகளை மட்டும் குறைத்துக் கொள்வது நல்லது. வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றால் அதிக சேமிப்பு அவசியம். தொழிலில் முன்னேற்றம் அடைய கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். அலுவலக பணியில் சற்று சுறுசுறுப்பாக ஆர்வத்தோடு செயல்படுவது வெற்றியை தரும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. பெண்கள் குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பெருமாள் வழிபாடு நல்ல பலனைத் தரும்.

மீனம்:

Pisces zodiac sign

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். வீட்டில் சந்தோஷம் நிலவும். புதிய பொருள் வாங்கும் அனுகூலம் உண்டு. சொந்தத் தொழிலில் இருந்த விரோதிகள் உங்களை விட்டு சென்றுவிடுவார்கள். அலுவலகத்தில் உங்கள் பேச்சுக்கு மரியாதை இருக்கும். அலைச்சல் மட்டும் சற்று அதிகமாக இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மாணவர்கள் கல்வியில் சற்று கவனத்தோடு செயல்படுவது முன்னேற்றத்தை தரும். பெண்களுக்கு குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். முருகன் வழிபாடு நல்ல பலனைத் தரும்.

இதையும் படிக்கலாமே
மாத பலன் வார பலன் என அனைத்து பலன்களையும் அறிய எங்களோடு இணைந்திருங்கள்.