இந்த வார ராசிபலன் 14/3/2022 முதல் 20/3/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு.

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரும் வாரமாக இருக்கப்போகின்றது. மன உறுதியோடு புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். எதிலும் பயம் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சாதகமாக நிறைய விஷயங்கள் ஒவ்வொன்றாக நடக்கத் தொடங்கும். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் ஏதாவது முக்கியமான விஷயங்களை நடத்துவதாக இருந்தால் மட்டும் அதில் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். பண விஷயங்களில் பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். உஷாராக இருக்க வேண்டும். ஆரோக்கியம் சீராக இருக்கும். தினம்தோறும் சிவபெருமான் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிறைய வருமானம் வரப் போகின்றது. புதிய சொத்து சேர்க்கை இருக்கப்போகின்றது. நிறைய நல்ல விஷயங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடக்கத் தொடங்கும். வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். வேலை செய்யும் இடத்திலிருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆனால் உங்களுடைய உடல் நலத்திலும் உங்கள் வீட்டில் இருப்பவர்களுடைய உடல் நலத்திலும் அக்கறை காட்டவேண்டும். மருத்துவ செலவு ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தினம் தோறும் அனுமன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். யாரிமும் கை நீட்டி கடன் வாங்காதீர்கள்‌. யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். அலுவலகத்தில் உங்களுடைய பணியை மட்டும் உஷாராக செய்து கொள்ளுங்கள். உங்களுடைய பொறுப்பை வேறு யாரிடமும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். முக்கியமான ஆவணங்களை நீங்களே பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். குடும்ப பெண்களுக்கு இது சந்தோஷம் தரக்கூடிய வாரமாக இருக்கும். தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பேச்சாற்றல் வெளிப்படும். எல்லா விஷயத்திலும் உங்களுடைய பேச்சுக்கு மரியாதை இருக்கும். பேசி பேசி நிறைய விஷயங்களை சாதிக்க போறீங்க. சொந்த தொழிலில் கொஞ்சம் கவனம் இருக்கவேண்டும். நிறைய முதலீடு செய்ய வேண்டாம். வேலையில் கண்ணும் கருத்துமாக இருங்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் சுபச் செலவுகள் இருக்கும். புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் அலைச்சல் நிறைந்த வாரமாக இருக்கப்போகின்றது. வேலை காரணமாக வெளியூர் செல்ல வேண்டியதாக இருக்கும். அல்லது உங்களுடைய சொந்த காரியங்களுக்காக வெளியில் செல்வீர்கள். சுற்றுலா பயணம் செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. எந்த இடத்திற்கு சென்றாலும் உங்களுடைய பேச்சில் மட்டும் கொஞ்சம் கவனம் இருக்க வேண்டும் அனாவசியமாக யாரிடமும் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம். வாய் தகராறு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து தான் பேசவேண்டும். சண்டைபோட்டு வேலையை விடவேண்டும் என்று நினைக்காதீங்க. எந்த முடிவையும் நிதானத்தோடு எடுங்கள். பலமுறை யோசிக்க. ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்து வாருங்கள்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாக தான் இருக்கப்போகிறது. உறவுகளுக்கிடையே சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். கணவன்-மனைவிக்கிடையே பிரச்சனைகள் வரலாம். வேலை செய்யும் இடத்தில் கருத்துவேறுபாடு வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. எல்லாம் இந்த வார இறுதிக்குள் சரியாகிவிடும். கோபப்படாமல் எல்லா விஷயத்தையும் அனுசரித்துச் சென்றால் பிரச்சினையில்லை. வீட்டில் இருக்கும் பெண்கள் நேரத்திற்கு சத்தான உணவை சாப்பிட்டு உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி கொள்ளுங்கள். பெண்களுக்கு உடல் சோர்வு மனச்சோர்வு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தினம்தோறும் அம்பாள் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் பொறுமை தேவை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. கடன் பிரச்சனை படிப்படியாகக் குறையும். வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய குழந்தைகளுடைய ஆரோக்கியத்தை கொஞ்சம் கவனியுங்கள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். புதியதாக வண்டி வாகனம் சொத்து வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தினம்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிகாரர்களுக்கு இது யோகமான வாரமாக இருக்கப்போகின்றது. வாராக் கடன் வசூலாகும். வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் நடக்கும். மனதிற்குள் இனம் புரியாத சந்தோஷம் இருக்கும். வார தொடக்கத்தில் இருந்து வந்த சஞ்சலங்கள் வார இறுதிக்குள் சரியாகிவிடும். உங்களுடைய பேச்சில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். எந்த விஷயத்தையும் சொல்லிக்கிட்டே இருக்காதீங்க. அதாவது வாய் சவடால் விடக்கூடாது. செயலில் காண்பிக்கவேண்டும். தினம்தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் தரக்கூடிய வாரமாக தான் இருக்கப் போகின்றது. பொதுஇடங்களில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரும். சொன்ன வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் எல்லாம் சரியாகிவிடும். இந்த வார தொடக்கத்தில் மார்ச் 14, 15 ஆகிய தேதியில் கொஞ்சம் உஷாராக இருந்து கொள்ளுங்கள். சந்திராஷ்டமம் உள்ளது. தினம்தோறும் நவகிரக வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிம்மதியான வாரமாக இருக்கப் போகின்றது. நிறைய பிரச்சனைகளை சுமந்து உங்களுடைய மனதில் பாரமாக இருந்த எல்லா பாரத்தையும் இறக்கி வைத்துவிட்டு நிம்மதியாக தூங்க போறீங்க. கொஞ்சம் முன்கோபம் இருக்கும். கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. காலையில் எழுந்ததும் 10 நிமிடம் ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை சொல்லி தியானம் செய்துவிட்டு அந்த நாளை தொடங்குங்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முன்கோபத்தால் சில வாய்ப்புகளை நழுவ விட வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். செலவை குறைத்துக் கொள்ளுங்கள். மார்ச் 16, 17, 18 ஆகிய தேதிகளில் கொஞ்சம் கவனம் தேவை சந்திராஷ்டமம் உள்ளது.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை மட்டும் கட்டாயம் தேவை. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வந்தாலும் அனுசரணையாக பேசுங்கள். யாரையும் எடுத்தெறிந்து கோபத்தோடு பேசாதீங்க. வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலைப்பளு கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். அலைச்சலும் குறையும். அவ்வப்போது சில சிக்கல்கள் வந்தாலும் அதில் பெரிய பாதிப்புகள் இருக்காது. முடிந்தால் ஒரு முறை குடும்பத்தோடு குல தெய்வ தரிசனம் செய்வது நன்மை தரும். தினம் தோறும் வீட்டில் குலதெய்வத்தை நினைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்வது நல்ல பலனை கொடுக்கும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வரப்போகிறது. அதை பயன்படுத்திக் கொள்வதும் பயன்படுத்தாமல் விடுவதும் உங்கள் கையில்தான் உள்ளது. சோம்பேறித்தனத்தை விடுத்து சுறுசுறுப்பாக செயல்பட்டால் வெற்றி உங்கள் பக்கம். உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கும். ஆரோக்கியத்தோடு இருக்க குளிர்ச்சியான உணவுப்பொருட்களை நேர நேரத்திற்கு சாப்பிட்டு வாருங்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்க கூடிய வாரமாக இருக்கப்போகின்றது. தினந்தோறும் அம்பாள் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -