இந்த வார ராசிபலன் 21/3/2022 முதல் 27/3/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு.

vara-palan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. எல்லா வேலைகளையும் முன்கூட்டியே சுறுசுறுப்பாக செய்து முடிக்கப் போகிறீர்கள். சோம்பேறித்தனம் என்ற பேச்சுக்கே இந்த வாரம் இடம் இல்லை. வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீடு வண்டி நிலம் ஆபரண பொருட்கள் வாங்கலாம். சொந்தத் தொழில் புதியதாக முதலீட்டை போடலாம். தொழிலை விரிவு படுத்தலாம். மார்ச் மாதம் 22 ஆம் தேதியிலிருந்து 24ஆம் தேதி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அன்று மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். வம்பு சண்டைக்கு யாரிடமும் போகக்கூடாது. பயணத்தின் போது கவனம் தேவை. தினம் தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புத்திசாலித்தனம் வெளிப்பட போகின்றது. எந்த சிக்கலான பிரச்சனையையும் ஒரே நிமிடத்தில் தீர்த்து வைக்கும் அளவிற்கு சமயோஜித புத்தியுடன் செயல்படப் போகிறீர்கள். பாராட்டு மழைதான் போங்க. நீங்கள் கேட்காமலேயே உங்களுடைய பதவி உயர போகின்றது. சம்பளம் உயரப் போகின்றது. காரணம் உங்களுடைய கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான். வெளிநாடு செல்ல வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்த வார இறுதியில் சில மன குழப்பங்கள் வந்து தொல்லை கொடுக்கும். மனதார ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லி வாருங்கள். பிரச்சனைகள் இல்லை.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிறைய நன்மைகள் நடக்கப்போகின்றது. குடும்பத்தில் சந்தோஷத்திற்கு எந்த குறைவும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். ஆனால் உங்களுடைய பொருட்களை மட்டும் கொஞ்சம் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். முக்கியமான பொருட்கள் தொலைந்து போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வருமானம் அதிகமாக இருக்கும். இருப்பினும் பின்னாலேயே தொடர்ந்து செலவுகள் வரும். சுப செலவுகளாக இருந்தாலும் செலவு செலவு தானே. சிக்கனத்தை மேற்கொள்வது நல்லது. தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வருமானம் அதிகரிக்கப் போகின்றது. எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத பணவரவு வந்து உங்களை சந்தோஷத்தில் திக்கு முக்காட வைக்கும். ஆனால் சொந்த பந்தங்கள் இடையே கொஞ்சம் உஷாராக இருந்து கொள்ளுங்கள். உங்களுடைய பணவரவு, உங்களுடைய சொந்தங்களுக்குள் பிரச்சனையை ஏற்படுத்தும். வருமானத்தைப் பற்றி நெருங்கிய சொந்தக்காரர்களிடம் கூட பகிர்ந்து கொள்ளக் கூடாது. நம்மிடம் பணம் இருக்கிறது என்று தெரிந்தால் கட்டாயமாக சொந்த பந்தங்கள் கடன் கேட்கும். இல்லை என்று சொன்னால் தேவையில்லாத பிரச்சனை தான். பணம் கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. தினம் தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் அனாவசியமாக யாரிடமும் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளாதீர்கள். உங்களுடைய சொந்த விஷயங்களை யாரிடமும் அனாவசியமாக பகிர்ந்து கொள்ளாதீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். உங்களுடைய முன்கோபத்தை மட்டும் கொஞ்சம் குறைத்துக் கொண்டால், வாழ்க்கையில் விரைவாக முன்னேற்றம் அடையலாம். தினம்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் இந்த வாரம் உற்சாகத்தோடு எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்ய போகிறீர்கள். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் சப்போர்ட் உங்களுக்கு கிடைக்கும். விவசாயம் செய்பவர்களுக்கு இந்த வாரம் நன்மை தரக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் மீண்டும் தொடக்கும். புதியதாக சொத்து சுகங்கள் சேர வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் இருப்பவர்களுடைய ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். தினந்தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் யோகம் தரும் வாரமாக இருக்கப் போகின்றது. யாராலும் புரிந்துகொள்ள முடியாத சில பிரச்சனைகளை நீங்கள் சரியாக புரிந்து புரிந்து கொள்வீர்கள். பின்னால் வரக்கூடிய பிரச்சனையை முன்கூட்டியே யூகித்து, அந்த பிரச்சனை வராமல் தடுக்க நிறைய யோசனைகளையும் சொல்வீர்கள். அந்த அளவிற்கு உங்களுடைய திறமை வெளிப்படப் போகிறது. கடன் பிரச்சனை படிப்படியாக குறையத் தொடங்கும். வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உங்களுடைய ஆரோக்கியத்தையும் உங்கள் வீட்டில் இருப்பவர்களுடைய ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். தினம் தோறும் நவகிரக வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உயர்வு தரும் வாரமாக இருக்கப்போகின்றது. நீங்கள் எதை தொட்டாலும் அதில் உங்களுக்கு வெற்றி தான். சொந்தத் தொழிலில் புதிய முயற்சியில் ஈடுபடலாம். புதிய வேலை வாய்ப்புகளை தேடலாம். முன்னேற்றம் நிறைந்த இந்த வாரத்தில் உங்களுடைய முன்னேற்றத்திற்கு உங்கள் உடன் பிறந்தவர்களும் நண்பர்களும் உதவிக் கரங்களை நீட்டி கைதூக்கிவிட உதவியாக நிற்பார்கள். ஆனால் இந்த வார இறுதியில் கொஞ்சம் உடல் சோர்வு ஏற்படும். ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியமான உணவினை சாப்பிட்டு வருவது நன்மை தரும். தினம்தோறும் ஹனுமன் வழிபாடு சிறந்தது.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை தேவை. எந்த விஷயத்திலும் நின்று நிதானமாக ஒரு முடிவு எடுங்கள். அவசரப்பட்டு எந்த விஷயத்திலும் முடிவை எடுத்து விடாதீர்கள். பின் விளைவுகள் அதிகமாக இருக்கும். வார்த்தைகளில் அதிக கவனம் தேவை. நிதி நிலைமை உயரும். சேமிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி சேர்ப்பதற்கான யோகம் உண்டு. இந்த வார இறுதியில் குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் மனஸ்தாபங்கள் வர வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இதன் மூலம் பெரியதாக பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. தினம் தோறும் வீட்டில் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வது நன்மை தரும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். மனதில் லேசாக குழப்பம் இருக்கும். எந்த முடிவை எடுப்பது என்று சில தடுமாற்றங்கள் வரும். மனதை அமைதிப் படுத்திக் கொள்ளுங்கள். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீர்கள். பெரியவர்களின் ஆலோசனைப் படி கேட்டு நடந்தால் எல்லாம் நன்மையாகவே நடக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் காத்துக் கொண்டிருக்கின்றது. நீங்கள் மன தைரியத்தோடு இருந்தாலும் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அலட்சியமாக இருந்தால் சில பண இழப்புகள் ஏற்படும். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இனிமேல் படிப்படியான முன்னேற்றம் வரக்கூடிய யோகமான நேரம் தான். ஆனால் உங்களுடைய முன்னேற்றத்தை தாமதப்படுத்த முன் கோபம் முட்டுக்கட்டை போடும். யார் என்ன விஷயத்திற்கு கேள்வி எழுப்பினாலும் அதற்கு எதிர்மறையான பதிலை சொல்லும் பழக்கத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வார்த்தையில் நிதானம் இருந்தால், உங்களுடைய முன்னேற்றம் எங்கேயோ சென்று விடும். வாகனங்கள் ஓட்டும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இந்த வார இறுதியில் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தேவையான ஒரு நல்லது நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. தினம்தோறும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமான வாரமாக இருக்கப்போகின்றது. நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு உங்களைத் தேடி வரும். சம்பள உயர்வு உங்களைத் தேடி வரும். சொந்த தொழிலில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். யாரையும் நம்பி கையில் இருக்கும் பணத்தை முதலீடாக போட வேண்டாம். சுபச்செலவுகள் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். வருமானத்தில் ஒரு தொகையை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். யோசனை இல்லாமல் எதிலும் கால் வைக்க வேண்டாம். தேவையற்ற மனக் குழப்பங்கள் இருக்கும். சமயத்தில் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று மனதை அமைதிப்படுத்தி தியானத்தில் ஈடுபடுங்கள். நன்மையே நடக்கும்.

- Advertisement -