இந்த வார ராசிபலன் 25/03/2024 முதல் 31/03/2024 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

mar 25 to 31
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் நலனில் இருந்து வந்த குறைபாடுகள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் அகன்று வெற்றிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பயணங்களை மேற்கொள்ளும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றியைத் தரும். புதிதாக முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு இருக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் அதை எளிதில் சமாளித்து விடுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமணம் தொடர்பான சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களிடம் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்வதை இந்த வாரம் தவிர்ப்பது நல்லது. இருக்கும் வேலையில் புதிய பொறுப்புகளும் சலுகைகளும் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக சில பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று கவனத்துடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் வீண்விரயங்கள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் ஒரு சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். குடும்ப விஷயங்களை மூன்றாவது நபரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். உடன் பணிபுரிபவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நன்மையை தரும். ஒரு சிலருக்கு சலுகைகள் கிடைப்பதற்கு உரிய வாய்ப்புகளும் உண்டாக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது சற்று கடினமாகவே இருக்கும். அதேசமயம் தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கம் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பாராத பண வரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் ஒரு சிலருக்கு ஏற்படும். அதே சமயம் செலவுகள் அதிகரிக்கவும் செய்யும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். அதை திறம்பட செய்து முடிப்பதன் மூலம் சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதேசமயம் தொழிலை விரிவுபடுத்துவதற்குரிய வாய்ப்புகளும் தேடி வரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு வெங்கடாசலபதியை வணங்க வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிந்தித்து செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். குடும்பம் தொடர்பாக எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும் உடன் இருப்பவர்களுடன் ஆலோசித்து எடுப்பது நன்மையைத் தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதங்கள் ஏற்படும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது என்றாலும் நஷ்டம் ஏற்படாது. தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வாரத்தில் முயற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புத்திசாலித்தனத்துடன் செயலாற்றும் வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பண வரவிற்கு வாய்ப்புகள் உள்ளது. அதனால் கடன்களை அடைப்பதற்குரிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமணம் முயற்சிகள் வெற்றி பெறும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்து இருந்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும் என்றாலும் தொழில் ரீதியாக எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்காமல் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து ஆலோசனை கேட்டு செய்வது நன்மையை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். விலகிச் சென்ற உறவுகள் விரும்பி வந்து சேர்வார்கள்.

வேலையை பொருத்தவரை நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பதவி உயர்வு இடமாற்றம் போன்றவை நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றியைத் தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு மகாலட்சுமியை வழிபட வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று எச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் திருமணம் முயற்சிகள் சாதகமாக அமையும். எந்த சூழ்நிலையிலும் அவசரப்படாமல் நிதானத்துடன் செயலாற்றுவது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக திகழும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். ஒரு சிலர் தொழிலை விரிவுபடுத்தும் எண்ணத்தில் வாடகை இடத்திலிருந்து சொந்த இடத்திற்கு மாறுவதற்குரிய வாய்ப்புகள் ஏற்படும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நன்மையைத் தரும். மூன்றாவது நபரால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். வேலையில் கவனம் செலுத்தி செயலாற்றினால் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். தொழிலைப் பொருத்தவரை கடின உழைப்பிற்கு ஏற்ற லாபமே கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களுடன் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகள் உண்டாக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பண வரவிற்கு வாய்ப்புகள் உள்ளது. உடல் நலத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வயதில் மூத்தவர்களிடம் பேசும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் பேசுவது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கும், பதவி உயர்வு, சம்பள உயர்விற்காக காத்திருப்பவர்களுக்கும் நல்ல செய்தி வந்து சேரும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட லாபம் அதிகமாகவே கிடைக்கும். இதுவரை இருந்து வந்த மறைமுக எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திருப்திகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவ செலவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். முடிந்த அளவிற்கு கடன் வாங்காமல் தவிர்க்க வேண்டும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை கூடுதலாகவே இருக்கும். வேலையில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொள்ள முடியும். உடன் பணி புரிபவர்களுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். இருப்பினும் கடன் வாங்கி முதலீடு செய்வதையோ அல்லது கடன் வாங்கி தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியிலோ ஈடுபடாமல் இருப்பது நல்லது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மைகள் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் அலைச்சல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது, கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். சுப செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாக இருக்கும். யாரையும் நம்பி எந்த பொறுப்பையும் தராமல் தாமே செய்து முடிப்பதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்க கடினமாக உழைக்க வேண்டும். தொழிலை விரிவுபடுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு கிருஷ்ணரை வழிபட வேண்டும்.

- Advertisement -