இந்த வார ராசிபலன் 03-05-2021 முதல் 09-05-2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது. முக்கியமான முடிவுகளை அடுத்த வாரம் தள்ளிப் போடுவது நல்லது. வீட்டில் உள்ளவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் காட்ட வேண்டும். முடிந்தவரை வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள். வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் பெரிய முதலீடு செய்ய வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் உடன் வேலை செய்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். பொறுமை காத்தால், இந்தவாரம் வெற்றிபெற நிறையவே வாய்ப்பு உள்ளது. தினமும் பெருமாள் வழிபாடு நன்மையை கொடுக்கும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிறைவான வாரமாக தான் இருக்கப் போகின்றது. வீட்டில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் ஒரு முடிவுக்கு வரும். மன நிம்மதி அடைவீர்கள். பணப்பற்றாக்குறை நீங்கும். நீண்ட நாட்களாக வசூல் செய்ய முடியாத தொகையைக் கூட சுலபமாக வசூல் செய்து விடுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்துடன் ஆன்மீக ரீதியாக சுற்றுலா சென்றுவர வாய்ப்புகள் கிடைக்கும். சொந்தத் தொழில் அலுவலகப் பணி எப்போதும் போல பிரச்சனைகள் இல்லாமல் செல்லும். தினம்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரும் வாரமாக தான் அமையப்போகின்றது. நீங்கள் எதைத் தொட்டாலும் அது உங்களுக்கு பல மடங்கு லாபத்தை பெற்றுத் தரும். புதிய தொழில் தொடங்கலாம். செய்யும் தொழிலில் அதிகப்படியான முதலீட்டை போட்டு தொழிலை விரிவுப் படுத்தலாம். வங்கி கடன் வாங்கி கொள்வது நல்லது. வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தினமும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. பணவரவு எப்போதும் போல இருக்கும். இருப்பினும் வீட்டில் உறவினர்களிடையே சின்ன சின்ன பிரச்சனைகள் மனஸ்தாபங்கள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். அனாவசியமான வார்த்தைகளை பேச வேண்டாம். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடாதீர்கள். அதிகப்படியான முதலீடு செய்யாதீர்கள். யாரிடமும் கை நீட்டி கடன் வாங்க வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகள் வந்தால் கொஞ்சம் அனுசரித்து செல்வது நல்லது. குலதெய்வ வழிபாடு அவசியம்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வருமானம் அதிகமாக இருக்கும். இருப்பினும் செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். அடுத்தவர்களுடைய பணம் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் தலையிடாதீர்கள். யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. நீண்ட நாட்களாக இருந்துவந்த சொத்துப் பிரச்சனை தீரும்‌. வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். வியாபாரத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். தினம் தோறும் துர்க்கை வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பாராத பல நல்ல விஷயங்கள் நடக்க போகின்றது. எதிர்பாராத பணவரவு, எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து மனதை திருப்தி அடையச் செய்யும். உங்களுடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு நண்பர்கள் உறுதுணையாக நிற்பார்கள். குடும்பத்தில் பிரச்சனைகள் என்று வந்தால் மட்டும் அனுசரித்து செல்வது நல்லது. வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். உறவுகளுக்கிடையே விரிசல் வந்துவிடும். சொந்தத் தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் வேலைப்பளு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். சமாளித்து தான் ஆக வேண்டும். தினம்தோறும் ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்கள் இந்த வாரம் மன தைரியத்தோடு செயல்படப் போகிறீர்கள். எந்த ஒரு வேலையிலும் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். ஆர்வத்தோடு சுறுசுறுப்போடு இருக்கும் உங்களுக்கே இறுதியில் வெற்றி கிடைக்கும். வீடு வாகனம் நிலம் போன்ற சொத்துக்கள் வாங்குவதாக இருந்தால் தாராளமாக இந்த வாரம் வாங்கலாம். உங்களை சுற்றி இருப்பவர்களிடத்தில் உங்களுக்கான மரியாதை அதிகரிக்கும். வேலையில் உயர்பதவிகள் கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத லாபம் பண பெட்டியை நிரப்பும். ஆக மொத்தத்தில் இந்த வாரம் சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மையை தரும்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரும் வாரமாக அமையப்போகின்றது. நீண்ட நாட்களாக செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு காரியத்தை இந்த வாரம் செய்து முடிக்க நிறையவே வாய்ப்புகள் வரும். பணவரவிற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. பணம் சேமிப்பில் தங்கும்‌. வேலை சம்பந்தமாக அடிக்கடி வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தேவையற்ற அலைச்சல்கள் வந்து தொந்தரவு கொடுக்கும். ஓய்வு எடுக்கும் பட்சத்தில் உடல் அசதி நீங்கும். விடாமுயற்சி உங்களுக்கு வெற்றியை மட்டுமே தரும் காலையில் ஓம் நமச்சிவாய மந்திரத்தை உச்சரியுங்கள்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு நினைத்ததெல்லாம் இந்த வாரம் நிறைவேறப் போகின்றது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். எதிர்பாராத யோகம் அடிக்கும். சேமிப்பில் பணம் உயர்ந்து கொண்டே செல்லும். ஒரு வேலையை கையில் எடுத்தால் அதை வெற்றியாக முடிக்காமல் விடவே மாட்டீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களை புகழின் உச்சிக்கே கொண்டு செல்லப் போகிறார்கள். அந்த அளவிற்கு இந்த வாரம் உங்களுக்கு கிரக நிலைகள் சாதகமாக அமைந்துள்ளது. சம்பள உயர்வு பதவி உயர்வு இப்படி பல நன்மைகள் உங்களை வந்தடையும்‌. தினம்தோறும் நவகிரகங்களை நினைத்து மனதார வழிபாடு செய்யுங்கள்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமான வாரமாக இருக்கப்போகின்றது. பெயர் புகழ் வெற்றி உங்களை தேடி வரும். உங்களுடைய எதிரிகள் கூட நண்பர்களாக மாறிவிடுவார்கள். சொந்த பந்தங்களுக்கு இடையே இருந்த மனஸ்தாபம் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று மகிழ்ச்சியாக இருக்கப் போகிறீர்கள். வேலையில் அவ்வப்போது வேலைப்பளு அதிகமாக தான் இருக்கும். இருப்பினும் இருக்கின்ற வேலையை தக்க வைத்துக் கொள்வதே புத்திசாலித்தனம். தினந்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். தேவையற்ற சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மனக்குழப்பம் இருக்கும். பணப்பிரச்சனை வந்து கழுத்தை நெறிக்கும். உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். கொஞ்சம் சங்கடங்கள் பின்தொடர்ந்து வரும் நேரம் தான் இது. கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக அமையவில்லை. தினமும் குலதெய்வத்தை வழிபாடு செய்துவிட்டு அதன் பின்பு வெளியே செல்லுங்கள். மனம் தெளிவு பெறும்.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கப்போகின்றது. வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். தேவையற்ற அலைச்சல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வருமானம் அதிகரிக்கும். கடன் பிரச்சனை நீங்கும். மேலும் மேலும் கடனை வாங்காமல் பார்த்துக்கொள்வது எதிர்காலத்திற்கு நல்லது. ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சோம்பேறித்தனத்தை தள்ளிவைத்துவிட்டு, விடாமுயற்சியுடன் செயல்பட்டால், இந்த வாரம் வரக்கூடிய பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.