இந்த வார ராசிபலன் 24-05-2021 முதல் 30-05-2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் சுறுசுறுப்பாக செயல்பட்டு, எல்லா வேலையிலும் வெற்றி காண்பார்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். எதையும் சாதிக்க வேண்டும் என்ற மன உறுதி உங்களிடத்தில் இருக்கும். வியாபாரம் கொஞ்சம் மந்த நிலையில் தான் செல்லும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள். அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று மந்தமான வாரமாக தான் இருக்கும். இருப்பினும் வரக்கூடிய பிரச்சினைகளை சுலபமாக சமாளிக்கக் கூடிய மன தைரியம் உங்களிடத்தில் இருக்கும். சாதுரியமாக சில விஷயங்களை கையாண்டு வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்கும். உங்களை சுற்றி இருப்பவர்கள் மதிக்கத்தக்க வகையில் சில சில நல்ல முன்னேற்றங்கள் உங்கள் வாசல் கதவை தட்டும். இந்த வாரம் சில சங்கடங்களுடன், நிறைய சந்தோஷமும் நிறைந்திருக்கும். தினம்தோறும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிகப்படியான வருமானம் தரக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. வராது என்று நினைத்த கடன்தொகை வசூலாகும். சொந்த தொழிலில் லாபம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத பணவரவு பையை நிரப்பிக் கொண்டே இருக்கும். சேமிப்புக்கும் கொஞ்சம் எடுத்து வைப்பது நல்லது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தன்னம்பிக்கையோடு செயல்பட்டு சில காரியங்களை செய்து அதில் வெற்றியும் காண்பார்கள். தினம்தோறும் ஹனுமன் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் எல்லா விஷயங்களிலும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப விஷயங்களை மூன்றாவது மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது. வேலை செய்யும் இடத்தில் எல்லா விஷயங்களையும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். உங்களுடன் இருப்பவர்களே, உங்கள் பின்னால் குழி தோண்டுவதற்கு தயாராக உள்ளார்கள். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அவசரப்பட்டு வார்த்தையை விட்டு விடாதீர்கள். கொஞ்சம் கோபத்தை குறைத்துக் கொண்டால் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். தினம் தோறும் குலதெய்வ வழிபாடு செய்வது குடும்பத்திற்கு நன்மை தரும்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திருப்தி தரும் வாரமாக தான் அமையப்போகின்றது. வேலை செய்யும் இடத்தில் நல்ல பாராட்டு கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களை பாராட்டும் அளவிற்கு உங்களுடைய வேலைகளை மிக மிக சிறப்பாக கச்சிதமாக செய்து முடிக்கப் போகிறீர்கள். தேவையற்ற மன குழப்பத்திலிருந்து வெளிவந்து, தெளிவான சிந்தனையோடு செயல்படக்கூடிய வாரம் இது. நிறைய நல்ல விஷயங்கள் உங்களுக்கு காத்துக் கொண்டிருக்கின்றது. காலையில் ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை உச்சரித்து தியானம் செய்துவிட்டு உங்களது பணியை தொடங்குவது நல்லது.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகுந்த மகிழ்ச்சி நிறைந்த வாரமாக இருக்கப்போகிறது. வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் நடைபெறும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். குழந்தை வரம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். சுப காரிய செலவுகளுக்காக பணத்தை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லவேண்டும். செய்யும் தொழிலில் செய்யக்கூடிய முதலீட்டினை கவனமாக செய்யுங்கள். அதிகப்படியாக கடன் வாங்கி தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். சிவன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் பொறுமையாக இருப்பது நல்லது. எந்த விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்க வேண்டாம். ஒன்றுக்கு பலமுறை ஆலோசனை செய்து இறுதி முடிவை எடுக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய தந்திரமான பேசினால் நீங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு, கொஞ்சம் வேலை சுமை அதிகரிக்கும். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு பல நாட்களாக இருந்து வந்த பல பிரச்சினைகள் இந்த வாரம் ஒரு முடிவுக்கு வந்துவிடும். நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருக்கும் கோர்ட் கேஸ் விவகாரங்களும் உங்களுக்கு சாதகமாக அமையக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் கவனமாக இருந்து கொள்ளுங்கள். முதலீட்டை அதிகமாக செய்யாதீர்கள். வேலை செய்யும் இடத்தில் அவ்வப்போது அலைச்சல்கள் இருக்கத்தான் செய்யும். வெளியூர் பயணங்கள் செய்யவேண்டிய சூழ்நிலை சிலருக்கு வரும். வெளியில் செல்லும் போது அதிக கவனம் தேவை. மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு கைநிறைய வருமானம் வரும். அதனை சந்தோஷமாக செலவு செய்வீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிக் மகிழ்ச்சி அடைவீர்கள். சுபகாரிய செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் தற்சமயம் வேலை இல்லை என்றாலும், நிறைய சலுகைகள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. ஆக மொத்தத்தில் உற்சாகத்தோடு சந்தோஷத்தோடு இந்த வரத்தை கழிக்கலாம். தினம்தோறும் குலதெய்வத்திற்கு நன்றி செல்ல மறவாதீர்கள்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் அளிக்கக்கூடிய வாரமாக தான் இருக்கப் போகின்றது. எதிர்பாராமல் சொத்து சுகங்கள் வாங்கக்கூடிய யோகமும் உங்களை தேடி வரலாம். உங்களுடைய குழந்தைகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். நல்ல எதிர்காலம் அமையும். முன்னேற்றத்திற்கு தேவையான நிறைய நல்ல விஷயங்கள் இந்த வாரம் உங்களைத் தேடி வரப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் தொழில் செய்யும் இடத்தில் நல்ல லாபம் என்று முன்னேற்றத்தை அடைய போகிறீர்கள். தினம்தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மையை தரும்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் அலைச்சலானா வாரமாக தான் இருக்கப் போகின்றது. தேவையற்ற மன கசப்புகள் மனக்கஷ்டங்கள் உங்களை வாட்டி வதைத்தான் செய்யும். உங்களுடைய வீட்டில் இருக்கும் உறவுகளுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஒருபக்கம் வேலையில் கஷ்டம், ஒருபக்கம் குடும்பத்தில் உள்ளவர்களுடைய கஷ்டம் என்று சில மனரீதியான கஷ்டங்களை இந்த வாரம் அனுபவித்து தான் ஆகவேண்டும். தினம்தோறும் குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்யுங்கள். வரக்கூடிய கஷ்டங்கள் படிப்படியாக குறையத் தொடங்கும்.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அனுகூலம் நிறைந்த வாரமாக தான் இருக்கப்போகின்றது. வேலை செய்யும் இடத்தில் அவ்வப்போது சின்னச் சின்ன சிக்கல்கள் வந்தாலும், இந்த வார இறுதியில் எல்லாம் சரியாகிவிடும். தொழில் செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முடிந்த வரை குடும்ப உறுப்பினர்களிடம் சண்டை போடாமல் இருப்பது நல்லது. அனாவசியமான வார்த்தைகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். எதிலும் நிதானம் தேவை. தினந்தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.