இந்த வார ராசிபலன் 02/05/2022 முதல் 08/05/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு.

varapalan5
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் யோகமான வாரமாக இருக்கப் போகின்றது. சபையில் உங்களுடைய குரல் ஓங்கி நிற்கும். எந்த ஒரு வேலையை செய்ய தொடங்கினாலும் அதில் உங்களுக்கே வெற்றி. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு உயர்ந்த சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். பூர்வீக சொத்து பலமடங்கு லாபத்தோடு உங்கள் கை வந்து சேரும். புதிய வீடு கட்டுவதற்கு யோகம் இருக்கிறது. இந்த வாரம் எல்லாம் உங்களுக்கு நல்லதாகவே நடந்தாலும், உங்களுடைய வாயின் மூலம் சில பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆகவே வார்த்தைகளில் கவனம் தேவை. தினம்தோறும் ஹனுமன் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் சிரமப்பட வேண்டியதாக இருக்கும். எந்த ஒரு வேலையைத் தொட்டாலும் அதை மீண்டும் மீண்டும் முயற்சி செய்யும்போது தான் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் குறைவாகத்தான் இருக்கும். இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். வீண் விரயச் செலவுகள் அதிகரிக்கும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் தேவையற்ற அலைச்சல்கள் இருக்கும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திறமைகள் வெளிபடக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. எதிலும் உங்களுடைய ஆளுமைதான். உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் சொல்பேச்சு கேட்டு நடப்பார்கள். சொந்தத் தொழிலில் நல்ல லாபம் இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். வாராக் கடன் வசூலாகும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். தினம்தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
உங்களுக்கு இந்த வாரம் முழுவதும் வெற்றிதான். பாராட்டும் புகழும் தேடி வரப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் மட்டும் கொஞ்சம் உஷாராக இருந்து கொள்ளுங்கள். உங்களுடைய பொறுப்புகளை முன்கூட்டியே கொஞ்சம் கவனமாக செய்து கொள்ள வேண்டும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். இந்த வார இறுதியில் மருத்துவச் செலவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உடல் சோர்வு இருக்கும் சமயத்தில் உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் உணவை சாப்பிடுங்கள். தினம் தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு அவ்வப்போது உறவினர்களுக்குள்ளே பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்தவர்களிடம் சுமூகமான பேச்சுவார்த்தை நடத்துங்கள். கோவப்பட்டு அவசரமாக வார்த்தையே விடாதீர்கள். வேலை செய்யும் இடத்தில் வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தேவையற்ற சிக்கல்கள் அவ்வப்போது வந்து மன நிம்மதியை கெடுக்கும். உங்களுடைய மனதிற்குள் ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருங்கள். மற்றபடி சொந்த தொழிலில் நல்ல லாபம் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். அலைச்சலை குறைத்துக் கொள்ளுங்கள். பொறுமையாக இருந்தால் வெற்றி நிரந்தரமாக உங்களை வந்து சேரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் இந்த வாரம் திறமையாக செயல்பட்டு எல்லா விஷயத்தையும் ரொம்ப ரொம்ப சுலபமாக முடிக்கப் போகிறீர்கள். பெரிய பெரிய கஷ்டம் என்று பஞ்சாயத்துக்கு வருபவர்களுக்கு எல்லாம் அறிவுரைகளை வாரி வழங்குவீர். உங்களுடைய அறிவுரையை கேட்டு, அதன்மூலம் வெற்றி அடைந்து, எதிரிகள் கூட உங்களை பாராட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைக்கும்படி எந்த ஒரு சிந்தனையையும் வைத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு நன்மைகள் மட்டும்தான் நடக்கும். தினம்தோறும் நவகிரக வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
இந்த வாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறையவே இருக்கும். வார தொடக்கத்தில் நிறைய நன்மைகள் நடந்தாலும், வார இறுதியில் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். இருப்பினும் எதையும் எதிர்கொள்ளக்கூடிய மன தைரியம் உங்களுக்கு வரவேண்டும். சோர்வடைய கூடாது. பிரச்சினைகளை திரும்பிப் பார்த்தால் அது நம்மை விட்டு தூரப் போய்விடும் என்று நம்புங்கள். பாராட்டை நம்பி யாரிடமும் ஏமாந்து போகாதீர்கள். உங்கள் பின்னால் நின்று குழி தோண்ட நிறைய பேர் காத்திருக்கிறார்கள். தினம்தோறும் வாராகி அம்மன் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன தைரியம் அதிகமாக இருக்கின்றது. எந்த ஒரு செயலையும் நடத்திப் பார்த்து விடலாம் என்று துணிச்சலோடு இருப்பீர்கள். ஆனால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். ஆழம் பார்த்து காலை வைப்பது நம்முடைய எதிர்காலத்திற்கு நல்லது. சொந்த தொழிலில் எதிர்பார்த்ததை விட பல மடங்கு லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெற்றோருக்கு பெருமை சேர்ப்பார்கள். குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். ஏப்ரல் மே 5-ஆம் தேதி உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் அலைச்சலான வாரமாக தான் இருக்கப்போகின்றது. வேலை செய்யும் இடத்தில் நீங்கள் எவ்வளவு உழைத்தாலும் பாராட்டை இன்னொருவர் பெற்று செல்வார்கள். ஆனால் நீங்கள் செய்யாத தவறுக்கு, யாரோ ஒருத்தர் செய்த தவறுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டிய நிலைமை ஏற்படும். கொஞ்சம் அனுசரணையாக செல்லுங்கள். எல்லாம் இந்த வார இறுதியில் சரியாகிவிடும். புதிய முயற்சிகளை அடுத்த வாரம் மேற்கொள்ளலாம். வீட்டில் பொன் பொருள் சேர்க்கை உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சொந்தத் தொழிலில் லாபம் குறைவாக இருந்தாலும் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு இல்லை. தினம் தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஜாக்பாட் அடிக்க போகின்றது. எதிர்பாராத பணவரவு சந்தோஷத்தில் உங்களை திக்குமுக்காட வைக்கும். அதற்குப்பின்னால் செலவுகளும் வரும். அதை நீங்கள் தான் சமாளிக்க வேண்டும். சேமிப்பு மிக மிக அவசியம் என்பதை புரிந்து நடக்க வேண்டும். விலைமதிப்புள்ள பொருட்களை கொஞ்சம் ஜாக்கிரதையாக வைத்துக்கொள்ளுங்கள். திருடு போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பெண்கள் வீட்டில் சமைக்கும் போது கொஞ்சம் உஷாராக சமைக்க வேண்டும். கத்தியை பயன்படுத்துவது போது ஜாக்கிரதையாக இருங்கள். நண்பர்கள் கூட சில பேர் விரோதிகளாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சக ஊழியர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக பேச வேண்டும். தினம்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
கும்ப ராசி காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் இருக்கப்போகிறது. சொத்து சுகம் வண்டி வாகனம் வாங்க கூடிய வாய்ப்புகள் இருக்கும். கடன் வாங்குவது, வாங்கிய கடனை திருப்பி கொடுப்பது போன்ற பண சம்பந்தப்பட்ட பரிமாற்றங்கள் இருந்து கொண்டே இருக்கும். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. வேலை செய்யும் இடத்தில் கூடுதல் அலைச்சல் இருக்கும். கணவன்-மனைவிக்கிடையே சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தடைப்பட்டு வந்த சுப காரியம் வீட்டில் மீண்டும் நடக்கத் தொடங்கும். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை என்றால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
மீன ராசிக்காரர்கள் இந்த வாரம் முட்டிமோதி உழைத்தால்தான் கொஞ்சம் வெற்றியை பார்க்கமுடியும். சுலபமாக எந்த நல்லதும் நடக்காது. ஆனால் நீங்கள் கஷ்டப்படுவதற்க்கு இரட்டிப்பு மடங்காக அந்த ஆண்டவன் உங்களுக்கு பலனைக் கொடுப்பார். தேவையற்ற விஷயங்களை போட்டு நினைத்து மனதை குழப்பிக் கொள்ள வேண்டாம். வருமானத்தில் சிக்கல் ஏற்படும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதிக வட்டிக்கு எக்காரணத்தைக் கொண்டும் கடன் வாங்க வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வு பதவி உயர்வு வந்து உங்களுடைய மனதை திருப்தி அடையச் செய்யும். தினம்தோறும் அரசமரத்தடி விநாயகரின் பாதங்களை பற்றிக் கொள்ளுங்கள். எல்லா நன்மைகளும் நடக்கும்.

- Advertisement -