இந்த வார ராசிபலன் 29/05/2023 முதல் 04/06/2023 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

varapalan5
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். சுறுசுறுப்பாக செயல்பட உங்களுடைய உடல் ஆரோக்கியம் ஒத்துழைக்கும். இரவு நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள். வேலை செய்த அந்த திருப்தி உங்களுக்கு அழகான ஒரு மனநிறைவை கொடுக்கப் போகின்றது. சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

சிக்கலான சில வேலைகளை கூட சாதுரியமான ஐடியாக்களை கொடுத்து முடித்து விடுவீர்கள். சுப காரிய நிகழ்ச்சிகளை மட்டும் அடுத்த வாரம் தள்ளிப் போடுங்கள். ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஒன்றுக்கு நான்கு முறை படிப்பது நல்லது. தினமும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த வாரமாக இருக்கும். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை செலவழிப்பீர்கள். மாணவர்களுக்கு பிடித்த கல்லூரியில், சீட்டு கிடைக்கும். விரும்பிய படிப்பை தேர்வு செய்ய நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீண்ட தூர பயணத்தை இந்த வாரம் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். காதல் கைகூடும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். அலட்சியமாக வேலையை செய்யாதீர்கள். தினம் தோறும் துர்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரக்கூடிய வாரமாகவே இருக்கும். ஆனால், எல்லா விஷயத்திலும் கூடுதல் கவனம் எடுத்து கொள்ளவும். அலட்சியமாக எந்த வேலையையும் செய்யக்கூடாது. நல்லது நடக்க வேண்டும். சீக்கிரம் பணக்காரராக வேண்டும் என்று குறுக்கு வழியில் போகாதீங்க. நேர்மையோடு நடந்து கொண்டால் பிரச்சனை இல்லை. உண்மையை சொல்லி செய்த தப்பை ஒத்துக் கொள்ளுங்கள். பொய் சொல்லி அதிலிருந்து தப்பிக்க பாக்காதீங்க. வெளியூர் பயணங்கள் நன்மையை கொடுக்கும். வேலை வேலை என்று இல்லாமல் குடும்பத்தையும் ஒரு பக்கம் பாருங்கள். தினம் தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தருவார்.

கடகம்:
கடக ராசி காரர்களுக்கு இந்த வாரம் நல்ல முன்னேற்றம் தரக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. புதிய முயற்சிகள் வெற்றி தரும். தொழிலில் புதிய முதலீட்டை செலுத்தலாம். வேலை செய்யும் இடத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம்.

- Advertisement -

சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைப்பதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. உறவுகளுக்கு இடையே சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எவ்வளவு சண்டை வந்தாலும் வார்த்தைகளை விடாதீங்க. வாக்குவாதம் செய்யாதீங்க. மௌனம் காப்பது நல்லது. குடும்பப் பிரச்சனையை வெளியே கொண்டு செல்ல வேண்டாம். வெளியில் இருக்கும் பிரச்சனையை குடும்பத்திற்கு உள்ளே கொண்டு வர வேண்டாம். தினம்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பெயரும் புகழும் அதிகரிக்கும். நீங்கள் சின்னதாக ஒரு வேலையை செய்தால் கூட அதில் உங்களுக்கு பெருமை சேர்க்கும் அளவிற்கு நிறைய நன்மை நடக்கும். உங்களுடைய வார்த்தைக்கும் மதிப்பு கூடும். நீங்கள் சொல்வதை நாலு பேர் கேட்கும் இடத்தில் நீங்கள் அமர போகிறீர்கள்.

கமிஷன் வியாபாரம் நல்ல லாபத்தை கொடுக்கும். கலைஞர்களுக்கு இந்த வாரம் நல்ல முன்னேற்றம் தரும் வாரமாக இருக்க போகின்றது. திருமணம் காதுகுத்து போன்ற சுப நிகழ்ச்சிகளை அடுத்த வாரம் தள்ளிப் போடுவது நல்லது. தினமும் நவகிரகங்களை வலம் வந்து வழிபாடு செய்யுங்கள்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை கொஞ்சம் தேவை. எந்த விஷயத்திலும் அவசரம் வேண்டாம். உங்களை விட வயதில் மூத்தவர்கள் சொன்னால் அதை காது கொடுத்து கேளுங்கள். பெரியவர்களை மரியாதை இல்லாமல் பேசாதீர்கள். உங்களுடைய அலட்சியம் பெரிய ஆபத்தை உண்டாக்கிவிடும்.

குழந்தைகளுடைய போக்கில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். எதையும் கவனிக்காமல் இருப்பது எதிர்காலத்தில் பெரிய பிரச்சனையை கொண்டு வந்து சேர்க்கும். யாருக்கும் அனாவசியமாக வாக்கு கொடுத்து சிக்கிக் கொள்ள வேண்டாம். மூன்றாவது நபர்களின் பஞ்சாயத்தில் தலையிட வேண்டாம். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள ஸ்ரீராமஜெயம் மந்திரம் சொல்லுங்கள்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முயற்சிகள் வெற்றி தரும். தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளை செய்யலாம். தொழிலை விரிவு படுத்தலாம். நல்ல லாபத்தை பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உடன் வேலை செய்பவர்களாக இருந்தாலும், அவர்களை நம்பி எல்லா விஷயத்தையும் பகிர்ந்து கொள்ளாதீங்க.

உங்களுடைய வேலையை நீங்கள் செய்யுங்கள். பொறுப்புகளை அடுத்தவர்கள் கையில் ஒப்படைக்க வேண்டாம். தாய்மாமன் உறவு வலுபெறும். புதிய நண்பர்களின் சேர்க்கை ஆபத்தை உண்டு பண்ணிவிடும். முன்பின் தெரியாதவர்களிடம் நட்புறவு வைத்துக் கொள்ளாதீர்கள். தினமும் வீட்டின் அருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது ‌

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாக தான் இருக்கும். சில நன்மைகளும் இருக்கும். சில தீமைகளும் இருக்கும். தீமைகள் நமக்கு அனுபவமாக மாறும். நன்மைகள் நமக்கு லாபத்தை கொடுக்கும். அவ்வளவுதான். சுபகாரியத் தடை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

ஒன்றுக்கு பலமுறை யோசித்து சில முடிவுகளை எடுக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். வெளியூருக்கு சுற்றுலா செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. தினமும் அஷ்டலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிறைய அனுபவங்கள் கிடைக்கப் போகின்றது. நல்ல அனுபவமாக இருந்தாலும் சரி, கெட்ட அனுபவமாக இருந்தாலும் சரி, அதை மன நிறைவோடு ஏற்றுக் கொள்ளுங்கள். முன்பின் தெரியாத விஷயங்களில் காலை வைக்காதீர்கள். அடுத்தவர்கள் சொல்லுகிறார்களே என்று நம்பி எந்த வேலையும் செய்யாதீங்க.

உங்கள் மனதிற்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்தால் தப்பித்தீர்கள். தினமும் செய்ய வேண்டிய வேலையை தவறாமல் செய்யலாம். புதுசாக எந்த ஒரு வேலையையும் இந்த வாரம் தொடங்க வேண்டாம். நெருங்கிய உறவுகளுக்கு இடையே சின்ன சின்ன சிக்கல்கள் வரக்கூடும். உறவுகளில் பிளவு ஏற்படும். தினம் தோறும் சிவன் பார்வதி வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிறைய வரவு இருக்கப் போகின்றது. சேமிப்பு இரட்டிப்பாக உயரும். உழைப்பை முதலீடாக போட்டு பெரிசாக சாதனை செய்யப் போகிறீர்கள்‌. குறிப்பாக விவசாயிகள். உங்களைப் பார்த்து இந்த உலகமே வியக்கும் அளவுக்கு முன்னேறி காட்டுவீர்கள்.

கைநீட்டி பேசியவர்கள் எல்லாம், மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவுக்கு புகழின் உச்சிக்கே செல்ல போகிறீர்கள். இந்த சந்தோஷமான தருணத்தில் குலதெய்வத்திற்கு நன்றி சொல்ல மறக்காதீங்க. மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகள் இழுபறியாகும். கடன் வசூல் ஆகும். இந்த வாரம் 29ஆம் தேதி உங்களுக்கு சந்திராஷ்டமம்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு கூர்மையான அறிவு இருந்தாலும், அந்த அறிவை, ஆத்திரத்தில் இழந்துவிடுவீர்கள். முன்கோபத்தை நீங்கள் குறைக்க வேண்டும். யார் கூடவும் சண்டை போடாதீங்க. விட்டுக் கொடுத்து செல்லுங்கள். நீங்கள் நினைத்த நல்ல காரியங்கள் நிச்சயம் ஒவ்வொன்றாக நடக்கும்.

மனைவி குழந்தைகளை விட்டு வெளியூரில் வேலை செய்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. நிரந்தரமாக வருமானம் தரக்கூடிய சொந்த தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மனதில் நினைத்ததை சாதித்த திருப்தி கிடைக்கும். சொத்து சுகம் வாங்குவதற்கும் நல்ல காலம் இது. வாகனத்தில் செல்லும்போது கொஞ்சம் கவனம் தேவை. ஹெல்மெட் போட்டுக்கோங்க. தினமும் பெருமாள் வழிபாடு நன்மை தரும். இந்த வாரம் 30, 31 உங்களுக்கு சந்திராஷ்டமம்.

மீனம்:
மீன ராசிக்காரர்கள் எப்போதும் கனவிலேயே மிதக்கக்கூடிய அளவுக்கு சோர்வு இருக்கும். வேண்டும் என்று ஒரு பொருளை நினைத்து விட்டால், அதை அடைந்தே தீர்வீர்கள். வேண்டாம் என்று நினைத்து விட்டால் அதை தூக்கி குப்பையில் போட்டு விடுவீர்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். பிடிவாதம் வேண்டாம். அடுத்தவர்கள் சொல்வதற்கெல்லாம் மண்டையை ஆட்டிக் கொண்டு, அவர்கள் சொல்வதை எல்லாம் செய்தால் நிச்சயமாக நல்லது நடக்காது.

நல்லது எது, கெட்டது எது, என்பதை ஆராய கூடிய தெளிவு உங்களுக்கு தான் இருக்க வேண்டும். வாழ்க்கை துணை சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும். அரசாங்க வேலை கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. சின்ன சின்ன சஞ்சலங்கள் மனதை கஷ்டப்படுத்திக் கொண்டே இருக்கும். இரவு நல்ல தூக்கம் இருக்காது. தினமும் சிவபெருமானை நினைத்து தியானம் செய்வது நன்மை தரும். இந்த வாரம் 31, ஜூன் 1ஆம் தேதி உங்களுக்கு சந்திராஷ்டமம் ஜாக்கிரதை.

- Advertisement -