இந்த வார ராசிபலன் 09/05/2022 முதல் 15/05/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு.

varapalan6
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் இருக்கக் கூடிய பிரச்சனைகள் எல்லாம் படிப்படியாக குறையத் தொடங்கும். சொத்துசுகம் வாங்குவதாக இருந்தால் இந்த வாரம் முயற்சிக்கலாம். பணபரிமாற்றம் சிறப்பாக இருக்கும். சொந்தத் தொழிலில் புதிய ஐடியாக்கள் வந்து நல்ல லாபத்தை கொடுக்கும். கோர்ட் கேஸ் வழக்குகள் கொஞ்சம் இழுபறியாக தான் இருக்கும். வீட்டில் அவ்வப்போது சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்துபோகும். கணவன்-மனைவி யாராவது ஒருவர் விட்டுக் கொடுப்பது நல்லது. உடல் உழைப்பால் வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் எதிர்பாராத லாபம் கிடைக்கும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஜாக்பாட் அடிக்கப் போகிறது என்று சொல்லலாம். நீண்ட நாட்களாக முயற்சி செய்த ஒரு விஷயத்தை இந்த வாரம் செய்து முடிப்பீர்கள். அதாவது உங்களுடைய நீண்ட நாள் கனவு இந்த வாரம் நிறைவேற நிறையவே வாய்ப்புகள் உள்ளது. இத்தனை நாள் பட்ட கஷ்டத்திற்கு ஒரு பலன் நிச்சயம் உங்களுடைய வீடு தேடி வரும். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய வேலைக்கு நல்ல பாராட்டு கிடைக்கும். புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு, பெரிய பிரச்சனையை கூடிய சுலபமாக தீர்த்து விடுவீர்கள். இரும்புத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டு. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன நிம்மதியான வாரமாக இருக்கப்போகிறது. உங்கள் வேலையை சரியாக செய்து விடுவீர்கள். அதற்கான பலன் கிடைத்துவிடும். நிம்மதியான தூக்கம் கிடைக்கும். நிம்மதியான சாப்பாடு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் குழந்தைகளுடன் சந்தோஷமாக நேரத்தை கழிக்க போகிறீர்கள். ஆனால் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கொஞ்சம் உஷாராக இருக்கவேண்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ஜாமீன் கையெழுத்து யாரை நம்பியும் போட வேண்டாம். வியாபாரத்தில் பாட்னரிடம் கொஞ்சம் உஷாராக இருந்து கொள்ளுங்கள். ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தினம்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
கடகராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. ஆனால் உங்களுடைய வாய் வார்த்தையில் கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் செய்யும் பழக்கத்தை விட்டுவிடுங்கள். யாராவது ஏதாவது சொன்னால் சரி என்ற ஒரு வார்த்தையோடு நிறுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். செய்யாத தவறுக்கு கூட உங்கள் மேல் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வருமானத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. வாகனங்களில் செல்லும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். தினம்தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. நீங்கள் செய்யும் வேலையை அப்படியே செய்து வாருங்கள். புதிய முயற்சிகளை எடுக்க வேண்டாம். குறிப்பாக சொந்த தொழிலில் யாரை நம்மையும், எதை நம்பி பெரிய அளவில் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். எந்த ஒரு விஷயத்திலும் முட்டி மோதி எழுந்த பின்புதான் வெற்றி உங்களை வந்து சேரும். உங்களைப் பற்றி பின்னால் புறம் பேசுபவர்களை கண்டு நீங்கள் எந்த மனவருத்தமும் அடைய வேண்டாம். சிலபேருக்கு குடும்பத்தை விட்டு தொலை தூரம் பயணம் செல்ல வேண்டிய சூழ்நிலை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நவகிரக வழிபாட்டை தினமும் மேற்கொண்டு வருவது நன்மை பயக்கும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் பணத்தட்டுப்பாடு இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீட்டில் விசேஷங்கள் நடக்கும். சந்தோஷம் இருக்கும். இருந்தாலும் சுப செலவு செய்யக் கூட கையில் காசு இருக்காது. உங்களுடைய குழந்தைகளின் மூலம் மன நிறைவு ஏற்படும். சொந்தத் தொழிலில் ஒரு சில சிக்கல்கள் வரும். ஆனால் பெரியதாக பிரச்சினை இருக்காது. திருமணம் தள்ளிக் கொண்டே இருப்பவர்களுக்கு சீக்கிரமே நல்ல வரன் அமைய போகின்றது. கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த சண்டை சச்சரவுகள் குறையும். கூடுமானவரை யாரையும் நம்பாதீங்க. எல்லாரிடத்திலும் உஷாராக இருங்க. தினம்தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் இருக்கப்போகின்றது. இருப்பினும் யாரிடத்திலும் அவசரப்பட்டு வாக்கு கொடுத்து விடாதீர்கள். கொடுத்த வாக்கை சிலசமயம் நிறைவேற்றாமல் போகும் போது நம்முடைய பெயர் கெட்டுப் போகும். வேலை செய்யும் இடத்தில் அவ்வப்போது சின்னச் சின்ன அலைச்சல்கள் இருக்கத்தான் செய்யும். வேலை பளு அதிகரிக்கும். ஆனால் வருமானத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். குடும்பத்தோடு குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளின் மூலம் பெற்றவர்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். உயர் கல்விக்காக வெளியூர் செல்வதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கட்டுமான தொழிலில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். தங்க நகை வாங்க கூடிய யோகம் உள்ளது. உங்களுடைய குடும்ப உறுப்பினரின் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். தினம்தோறும் ஹனுமன் வழிபாடு நன்மை தரும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன கஷ்டங்கள் வந்தாலும் சந்தோஷமாக தான் இருப்பீர்கள். அதாவது இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரம் தான் உங்களுக்கு. அடடா சந்தோஷமாக இருக்கிறது என்று நினைப்பீர்கள். அடுத்தது ஏதாவது குட்டி கஷ்டம் வரும். குட்டி கஷ்டத்தை சமாளிப்பதற்குள், பெரிய சந்தோஷம் வந்து நிற்கும். பயப்பட எந்த பிரச்சனையும் இருக்காது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். எதிரிகளின் தொல்லை குறையும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உழைப்புக்கு மேல் ஊதியம் கிடைக்கும். தினந்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாக தான் இருக்கப்போகின்றது. தேவையற்ற பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் பிரச்சனை இல்லை. யாரிடமும் அனாவசியமாக பேசாதீங்க. முன்பின் தெரியாத மூன்றாவது மனிதர்களின் சகவாசமே வேண்டாம். முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் அடுத்த வாரம் எடுத்துக் கொள்ளலாம். பணவிஷயத்தில் சற்று தடுமாற்றம் இருக்கும். வியாழக்கிழமை குருபகவானை தரிசனம் செய்யுங்கள். மே மாதம் 9, 10 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் உஷார்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சி நிறைந்த வாரமாக தான் இருக்கப் போகின்றது. நிறைய சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்கும். சொந்தத் தொழில் முதலீட்டை பெருகி விரிவுபடுத்துவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. இந்த வாரம் அதாவது, மே மாதம் 11, 12 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. நீங்கள் இந்த வாரம் முழுவதும் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு விளம்பரத்தை பார்த்து ஆசைப்பட்டால் கூட, அதில் உங்களுக்கு ஏமாற்றம் கிடைத்துவிடும். ஆசை வார்த்தை காட்டி பேசுபவர்கள் பின்னால் போகவே போகாதீர்கள். மனைவியிடம் வீண் விவாதம் செய்யாதீர்கள். உதார் பேச்சை விட்டுவிடுங்கள். எந்த காரியத்தையும் சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள். முடிந்தால் செய்து முடிங்க. இல்லையா பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். செலவு அதிகரிக்கும். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். சிவன் கோவிலுக்கு சென்று தியானம் செய்வது மிக மிக நல்லது. சுற்றியிருப்பவர்கள் பேச்சைக் கேட்கவே கேட்காதீர்கள். உங்களுக்கு நன்மை நடக்க இதுதான் ஒரே வழி.

- Advertisement -