இந்த வார ராசி பலன் : நவம்பர் 20 முதல் 26 வரை

suriyan-peyarchi

மேஷம்:
meshamமேஷராசி அன்பர்களே! பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடத்தில் இணக்கமாக நடந்துகொள்ளவும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் அமையும். வழக்குகளில் இருந்த பிற்போக்கான நிலைமை மாறி சாதகமான தீர்ப்பு வரும்.

அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். ஆனால், அதற்கேற்ற சலுகைகள் காணப்படுவதால், உற்சாகமாக வேலைகளைச் செய்வீர்கள்.

வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். புதிய திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்வடிவம் பெறும்.

கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும். சிலருக்குத் தொழில் ரீதியாக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்.

மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை உடனுக்குடன் கிரகித்துக் கொள்வீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சிரமங்கள் ஏற்படக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் வேலைகளில் கவனமாக இருக்கவும்.

- Advertisement -

ரிஷபம்:
rishabamரிஷபராசி அன்பர்களே! பொருளாதார நிலை திருப்திகரமாக உள்ளது. வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களிடையே இருந்த மனக் கசப்பு நீங்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு வரன் தேடும் முயற்சிகள் சாதகமாகும். பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலையே காணப்படுகிறது. எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு தள்ளிப் போகும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும், புதிய திட்டங்களைத் தீட்டவும் உகந்த வாரம்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைக்கும். ஆனாலும், அதற்கேற்ற வருமானம் கிடைக்காது. மூத்த கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.

மாணவர்களுக்கு தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லும் விருப்பம் நிறைவேறும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு தேவையான பணவரவு கிடைக்கும். அலுவலகத் துக்கு செல்லும் பெண்மணிகளுக்கு உற்சாகமான சூழ்நிலை இருக்கும்.

மிதுனம்:
midhunamமிதுனராசி அன்பர்களே! செலவுகள் ஏற்பட்டாலும் சமாளிக்கும் அளவுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். திருமண முயற்சிகள் சாதகமாகும். சகோதரர்களுடன் இணக்கமான உறவு ஏற்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். ஒரு சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கபடக்கூடும் என்றாலும் உரிய சிகிச்சையின் மூலம் உடனுக்குடன் சரியாகிவிடும்.

அலுவலகத்தில் பதவி உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பணம் கொடுக்கல் – வாங்கல் பிரச்னை இல்லாமல் இருக்கும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் எதுவும் இருக்காது. வருமானமும் திருப்திகரமாக இருக்கும்.

மாணவர்களுக்கு அடுத்த வருடத்துக்கான பாடங்களை இப்போதே படிப்பதில் ஆர்வம் உண்டாகும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகமாக இருக்கும்.

கடகம்:
kadagamகடகராசி அன்பர்களே! பணவரவு எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். உடல் நலனில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு, உரிய மருத்துவ சிகிச்சையினால் உடனே சரியாகும். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள். மகன் அல்லது மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும்.

அலுவலகத்தில் இது வரை எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப் பெறலாம். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருக்கும். பங்குதாரர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் சில தடைகள் ஏற்படும். சக கலைஞர்களுடன் அனுசரித்துச் செல்லவும்.
மாணவர்கள் படிப்பில் ஈடுபாட்டுடன் இருப்பீர்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, விரும்பிய மேற்படிப்பில் சேருவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சில சலுகைகள் கிடைக்கக்கூடும்.

சிம்மம்:
simmamசிம்மராசி அன்பர்களே! தேவையான அளவுக்கு பணவரவு இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவி இடையில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது பிற்காலத்துக்கு நல்லது.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், அதற்கேற்ற சலுகைகளும், ஊதிய உயர்வும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.

வியாபாரிகளுக்கு பல வகைகளிலும் நன்மை தரக்கூடிய வாரமாக இருக்கும். இதுவரை தடைப்பட்டு வந்த முயற்சிகள் நல்லபடியாக கிருஷ்ணதுளசிமுடியும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னைகள் எதுவும் இருக்காது. ஆனால், கிடைக்கும் வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக் கொள்வது அவசியம்.

மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவார்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சிரமமான வாரமாக இருக்கும். பொறுமை மிகவும் அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும்.

கன்னி:
kanniகன்னிராசி அன்பர்களே! பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆனால், அநாவசியமான செலவுகளும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். திருமணம் தடைப்பட்டு வந்தவர்களுக்கு திருமணம் கூடி வரும். வழக்குகளில் இருந்த பிற்போக்கான நிலைமை மாறி, சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

அலுவலகத்தில் தங்கள் பொறுப்புகளை சிறப்பாகச் செய்து மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும்.

வியாபாரத்தில் வழக்கமான நிலையே நீடிக்கும். பண விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். முக்கிய வேலைகளை நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்ததை விடவும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
மாணவர்களுக்கு அனுகூலமான வாரம் இது. தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, விரும்பிய மேற்படிப்பில் சேருவார்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு செலவுகள் அதிகரிப்பதால் கடன் வாங்க நேரிடும். எதிர்பாராத விருந்தாளிகள் வரக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் பணிகளில் கவனமாக இருக்கவேண்டும்.

துலாம்:
thulamதுலாம்ராசி அன்பர்களே! பணவரவு திருப்தியாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சகோதரர்களின் அறிவுரையும் உதவியும் ஆறுதல் தருவதாக இருக்கும். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள்.வேலையின் காரணமாக குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரியவேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். பொறுப்புகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது.

வியாபாரத்தில் வங்கிக் கடன் கிடைத்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். சக வியாபாரிகளிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும்.

கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். மூத்த கலைஞர்களின் அறிவுரைகள் உங்களைப் பண்படுத்துவதாக இருக்கும்.

மாணவர்களுக்கு படிப்பில் கவனம் செல்லாது. மனதில் பல்வேறு எண்ணங்கள் தோன்றி சஞ்சலத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, மனதை அலைபாயவிடாமல் பார்த்துக்கொள்ளவும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மிகவும் சந்தோஷம் தரும் வாரமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.

விருச்சிகம்:
virichigamவிருச்சிகராசி அன்பர்களே! பணவரவு சுமாராகத்தான் இருக்கும். செலவுகள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று நேர்த்திக் கடன்களை செலுத்துவீர்கள். மூத்த சகோதரர்களிடம் அவசரப்பட்டு கோபப்பட வேண்டாம். அவருடைய ஆலோசனை உங்களுக்கு நன்மை தருவதாகவே இருக்கும்.

அலுவலகத்தில் உங்கள் பொறுப்புகளை மிகவும் சிரத்தையுடன் செய்து நிர்வாகத்தினரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சில சலுகைகளும் கிடைக்கும்.

வியாபாரத்தில் சக வியாபாரிகளால் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்ததை விடவும் நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.மூத்த கலைஞர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பது எதிர்காலத்துக்கு நல்லது.

மாணவர்களுக்கு படிப்பை விடவும் விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். சக மாணவர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகள் பொறுமையுடன் இருக்கவேண்டிய வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகள் தங்கள் பணிகளில் கவனமாக இருக்கவேண்டும்.

தனுசு:
dhanusuதனுசுராசி அன்பர்களே! பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் காணப்படும். சகோதரர்களால் உதவியும் உற்சாகமும் ஏற்படும். அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். திருமண முயற்சிகள் அனுகூலமாக முடியும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த சலுகைகள் இப்போது கிடைக்கும்.

வியாபாரம் நன்றாக நடக்கும். முக்கியஸ்தர்கள் வாடிக்கையாளர்களாக அறிமுகம் ஆவார்கள். சக வியாபாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் சிறு சிறு பிரச்னைகள் உண்டாகும். கிடைக்கும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலை ஏற்படும்.

மாணவர்களுக்கு தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். விரும்பும் பிரிவில் படிப்பதற்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு உற்சாகமான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

மகரம்:
magaramமகரராசி அன்பர்களே! பணவரவு சுமாராகத்தான் இருக்கும். தேவையற்ற செலவுகளால் மனச் சஞ்சலம் உண்டாகும்.. உறவினர்களாலும் நண்பர்களாலும் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும் என்பதால் பொறுமையுடன் இருப்பது அவசியம். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.

அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். உங்கள் வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டாம். அதிகாரிகளிடம் பக்குவமாகப் பேசவும்.

வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். லாபமும் எதிர்பார்த்ததை விடக் குறைவாகத்தான் கிடைக்கும். சக வியாபாரிகளுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் எதுவும் இருக்காது. வருமானமும் திருப்திகரமாக இருக்கும்.

மாணவர்கள் அடுத்த வருட படிப்பிற்கு இப்போதே ஆர்வத்துடன் தயார் செய்துகொள்வதில் ஆர்வத்துடன் இருப்பார்கள்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சிறு சிறு பிரச்னைகள் தோன்றக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அனுகூலமான வாரம்.

கும்பம்:
kumbamகும்பராசி அன்பர்களே! தாராளமான பணப்புழக்கம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். திருமண முயற்சிகள் அனுகூலமாக முடியும். பொருள்கள் களவு போகக்கூடும் என்பதால், பயணத்தின்போதும் வீட்டிலும் எச்சரிக்கையாக இருக்கவும்.

அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும்.

வியாபாரத்தில் இருக்கும் நிலையே நீடிக்கும். பழைய பாக்கிகளைப் போராடித்தான் வசூலிக்கவேண்டி இருக்கும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் ஏற்படக்கூடும். சக கலைஞர்கள் உதவி செய்வார்கள்.
மாணவர்களுக்கு வெளிநாடு சென்று படிப்பதில் விருப்பம் இருந்தால் அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபட்டால் வெற்றிகரமாக முடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் பிரச்னைகள் ஏற்படக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் செல்வாக்கு கூடும்.

மீனம்:
meenamமீனராசி அன்பர்களே! பொருளாதார நிலை சுமாராகத்தான் இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் குழப்பம் உண்டாகும். தேவையற்ற சில பிரச்னைகளால் மனதில் அடிக்கடி சஞ்சலம் உண்டாகும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு கண்களில் சிறு சிறு பிரச்னைகள் தோன்றக்கூடும்.

அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். அதிகாரிகளிடமும், சக பணியாளர்களிடமும் மதிப்பும் மரியாதையும் கூடும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாகக் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தத் தேவையான பண உதவி கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் தடை இல்லாமல் கிடைக்கும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும்.
மாணவர்கள் விடுமுறைக் காலத்தை வீணாக்காமல், தொழில் சார்ந்த பயிற்சிக் கூடங்களில் சேர்ந்து படிக்க வாய்ப்பு உண்டாகும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான வாரம். உறவினர்கள் வருகை உற்சாகம் தரும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.