இந்த வார ராசிபலன் 30-11-2020 முதல் 06-12-2020 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். வெளியிடங்களுக்கு செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். உங்களது ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவேண்டும். அலுவலகங்களில் வேலை செய்பவர்கள், சக ஊழியர்களிடம் எல்லா விஷயங்களையும் வெளிப்படையாக சொல்லிவிடக்கூடாது. உங்கள் உடன் இருப்பவர்களே, உங்கள் பின்னால் குழி தோண்ட வாய்ப்பு உள்ளது. அதேசமயம் அவசரப்பட்டு யாரிடமும் கோபமாகப் பேசி வேலையை விடும் சூழ்நிலை வந்தால் கூட, வேலையை விட்டு விடக் கூடாது. உஷாராக இருக்க வேண்டும். இருக்கும் வேலையை காப்பாற்றிக் கொள்ளும் திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். மற்றபடி நிதி நிலைமை சீராக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. சொந்த தொழில் சீராக செல்லும். கொஞ்சம் கவனமாக இருந்தால் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். தினம்தோறும் ஹனுமன் வழிபாடு மனதைரியத்தை அதிகப்படுத்தும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கப்போகின்றது. இதுநாள் வரை இருந்து வந்த சிக்கல்களுக்கு விடிவு காலம் பிறக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த செய்தி ஒன்று உங்களுடைய செவிகளுக்கு வந்து சேரும். அது தொலைபேசி வாயிலாகவும் வரலாம், அல்லது உங்களது நண்பர்களின் மூலமாகவும் வரலாம். தொழிலில் முதலீட்டை அதிகபடுத்தி விரிவுபடுத்தலாம். அலுவலக பணியில் நல்ல பெயர் வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. விடாமுயற்சியும், கடின உழைப்பும், சிரித்த முகமும் உங்களை என்றுமே கைவிடாது. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. உற்சாகத்தோடு செயல்பட்டு நல்ல பெயரை வாங்க போகிறீர்கள். தினம் தோறும் முருகர் வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் நிதானத்தோடு செயல்பட வேண்டும். எந்த ஒரு வேலையையும் அவசர அவசரமாக தொடங்கி, அவசர அவசரமாக முடிவு எடுக்கும் பட்சத்தில், அதன் மூலம் பின் விளைவுகள் அதிகமாக இருக்கும். அந்தப் பின் விளைவுகள் உங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். இருப்பினும் புதியதாக முதலீடு செய்ய வேண்டாம். பாட்னரை நம்பி மொத்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். கணக்கு வழக்குகளை அடிக்கடி நீங்களும் பார்க்க வேண்டும். அலுவலக பணியில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் செய்த வேலைக்கான பாராட்டை மற்றவர்கள் தட்டிச் செல்வார்கள். நிச்சயம் உங்களுக்கு கோவமே வரக்கூடாது. கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. அந்த இடத்திலும் அனாவசியமாக பேசவேண்டாம். பொறுமையோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். தினம்தோறும் ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருங்க!

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய வாரம்தான் இது. நீங்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு, உங்களுக்கு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வரும் வாய்ப்பை நீங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் வாய்ப்பை நழுவ விட்டுவிடாதீர்கள். வீட்டில் சந்தோஷம் நிலைத்து இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத நன்மை ஒன்று உங்களை தேடி வரப் போகின்றது. அது மனதிற்கு சந்தோஷம் தரும் செய்தியாகவும் இருக்கலாம். அல்லது மனதை நினைவுபடுத்தும் பொன் பொருள் ஆடை அணிகலன்களாகவும் இருக்கலாம். வீட்டில் சுபகாரியப் பேச்சுகளை சந்தோஷமாக தொடங்கலாம். இதுநாள் வரை இருந்து வந்த மனக் குழப்பங்கள் அனைத்தும் தீர்ந்து, வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு பல நல்ல வழி உங்களை தேடி வரப்போகின்றது. குலதெய்வ வழிபாட்டை மறக்காதீர்கள்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சந்தோஷம் தரும் வாரமாக தான் அமையப்போகின்றது. புதிதாக சொத்து வாங்குவதாக இருந்தால், இந்த வாரம் அரசாங்க வேலைகளை தொடங்கலாம். பணப் பரிமாற்றத்தின் போது மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். அலுவலகப் பணியில் நல்ல முன்னேற்றம் உண்டு. துணிச்சலுடன் செயல்பட்டு சொந்த தொழிலை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வீர்கள். பயம் வேண்டாம். நிச்சயம் வெற்றிதான். உங்களுடைய புதிய முதலீட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. வங்கிகளில் கடன் தொகை வாங்க முயற்சி செய்யலாம். நிச்சயம் கிடைக்கும். அதிக வட்டிக்கு பணத்தை கடனாக வாங்காதீர்கள். வீட்டில் தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரியங்கள் பேச்சுக்களை மீண்டும் தொடங்கலாம். விசேஷங்கள் நல்லபடியாக நடந்து முடியும். அவ்வபோது உடல் சோர்வு ஏற்படும். வேலையில் அலைச்சல் என்பதால் அந்த சோர்வு இருக்கும். இருப்பினும் சுறுசுறுப்போடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். தினந்தோறும் சூரிய நமஸ்காரம் செய்வது நன்மை தரும்.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் பணக்கஷ்டம் வரப்போகின்றது. கையில் இருக்கும் பணம் சுப காரியத்திற்காக செலவாகும். பரவாயில்லை! அதற்கேற்ற வருமானமும் இந்த வார இறுதியில் உங்கள் கைக்கு வந்துவிடும். குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. குடும்பத்தோடு குல தெய்வ கோவிலுக்கு ஒரு முறை சென்று வந்தால் மிகவும் நல்லது. அலுவலக பணியில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளவேண்டும். யாரையும் நம்பி உங்களது வேலைகளையும், உங்களது பொறுப்புகளையும் ஒப்படைக்காதீர்கள். நீங்களே முன்னின்று முக்கியமான வேலைகளை முடித்து விடுங்கள். உங்களுடைய பொருட்கள் திருடு போவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். முக கவசம் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும். முடிந்த வரை வெளியிடங்களில் சாப்பிட வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எல்லா விஷயத்திலும் கொஞ்சம் உஷாராக இருங்கள். தினம் தோறும் விநாயகர் வழிபாடு தடைகளை தகர்த்தெறியும்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அற்புதமான வாரமாக இருக்கப் போகின்றது. நீங்கள் தொட்டதெல்லாம் நிச்சயம் வெற்றி அடையும். ஆனால் அந்த வெற்றியை தொடுவதற்கு பல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க வேண்டியதாக இருக்கும். பிரச்சினைகளை கண்டு சோர்ந்து அமராமல், துணிவோடு எதிர்கொண்டு, உங்களது வேலைகளிலிருந்து நீங்கள் பின்வாங்காமல் இருந்தால் உங்களை வெல்ல யாராலும் முடியாது. குழப்பமாக உள்ளதா? துணிச்சலோடு செயல்பட வேண்டும். நேர்மையோடு இருக்க வேண்டும். பிரச்சனையைக் கண்டு முன்வைத்த காலை பின்னால் எடுத்து வைத்து விடக்கூடாது. அவ்வளவுதான். அமோகமான வெற்றி உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றது. அலுவலக வேலை சொந்த தொழில் எல்லாமே நீங்கள் நினைத்தது போல நடக்கும். தினம்தோறும் சிவபெருமானை வழிபாடு செய்துவிட்டு உங்களது வேலையை தொடங்குங்கள்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சக ராசி காரர்களுக்கு இந்த வாரம் மன தைரியம் அதிகரிக்க போகின்றது. எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், அதை எதிர் கொண்டு சண்டை போட்டு, முட்டி மோதியாவது உங்களுக்கு சாதகமாக தீர்ப்பை வர வைத்து விடுவீர்கள். வரவு ஒரு பக்கம் வந்து கொண்டே இருக்கும், செலவு ஒரு பக்கம் சென்று கொண்டே இருக்கும். சேமிக்கும் திறமை உங்களிடம் தான் உள்ளது. சேமிப்பு இல்லாமல் போனால், மாத கடைசியில் பின்பு  திண்டாட்டம்தான். அனாவசிய செலவை குறைக்க முயற்சி செய்யுங்கள். இதுநாள் வரை அலுவலகத்தில் இருந்து வந்த மேலதிகாரி பிரச்சனை இனி இருக்காது. வேறு வேலை மாறுவதாக இருந்தாலும், நல்லவேளையாக கிடைத்தால் முறையாக பணிமாற்றம் செய்து கொள்ளுங்கள். கடன் கொடுக்காதீர்கள் கடன் வாங்காதீர்கள். தினம்தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் எல்லா விஷயங்களிலும் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். வீட்டில் உறவினர்களின் வருகை இருக்கும். அவர்களிடம் கோபமாகப் பேசக்கூடாது. குடும்பத்தில் பிரச்சினை வந்தால் வாக்குவாதம் வேண்டாம். அலுவலகத்தில் மேல் அதிகாரிகள் சொல்வதைக் கேட்டுத்தான் ஆக வேண்டும். வேறு வழியே இல்லை. எதிர்த்துப் பேசினால் பிரச்சினை உங்களுக்குத்தான். வீட்டில் இருக்கும் பெண்கள் கணவனிடத்தில் அனாவசியமாக வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். அது குடும்பத்தில் பெரிய விரிசலை ஏற்படுத்திவிடும். இப்படியாக அமைதியோடு, அனுசரணையோடு இந்த வாரத்தை கஷ்டப்பட்டு ஓட்டி விடுங்கள். அடுத்த வாரம் எல்லாம் சரியாகிவிடும். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மையை தரும்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. நீங்கள் எதிர்பார்த்ததைவிட, உங்கள் கைக்கு அதிகப்படியான வருமானம் வந்து சேரும். சேமிக்க மறந்துவிடாதீர்கள். அனாவசிய செலவை குறைத்துக் கொள்ளுங்கள். சொந்தத் தொழிலில் எதிர்பாராத லாபத்தில் திகைத்துப் போகப் போகிறீர்கள். அலுவலக வேலையில் சுறுசுறுப்பாக வேலையை செய்து, உங்களது திறமையை வெளிப்படுத்தி, நல்ல பெயரை நிலைநாட்ட போகிறீர்கள். குலதெய்வ கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தோடு குல தெய்வத்தை தரிசனம் செய்து வாருங்கள். வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வந்தால், அதை உதாசீனப்படுத்தாமல் அந்த வாய்ப்புகளை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது, உங்களுடைய திறமையில் உள்ளது. தினம்தோறும் மகாலட்சுமி வழிபாடு பல நன்மையைத் தேடித் தரும்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் லாபமான வாரமாக அமையப்போகின்றது. நீங்கள் எதைத் தொட்டாலும் அதில் மூலம் உங்களுக்கு நிறைய வருமானம் வரும்‌ முடிந்தவரை நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். அதேபோல் எவ்வளவுதான் வருமானம் உங்கள் கைக்கு வந்தாலும், அதன் மூலம் வரக்கூடிய நன்மைகளை உங்களால் அனுபவிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். ஒன்று கைக்கு வந்த பணம் வீண்விரயம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இரண்டாவது வட்டி அல்லது கடன் தொகையை கட்டி விடுவீர்கள். ஏதாவது ஒரு வகையில் அந்தப் பணத்திற்கு செலவு முன் வந்து நிற்கும். பரவாயில்லை! வரும் காலங்களில் இந்த பிரச்சினைகள் அனைத்தும் சரியாகிவிடும். முடிந்த வரை உங்களுக்கு வரக்கூடிய வருமானத்தில், உடல்நலம் சரியில்லாதவர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் ஒரு தொகையை உதவித் தொகையாக கொடுத்து வாருங்கள். தினம் தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்கள் இந்த வாரம் கவனத்தோடு இருக்க வேண்டும். யாரை நம்பியும் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்து போடாதீர்கள். யாரை நம்பியும் கடன் கொடுக்காதீர்கள். யாரை நம்பியும் கடன் வாங்காதீர்கள். உங்களது பொருட்களை நீங்கள் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். கஷ்டம் என்று வரும்போது, உறவினர்கள் ஓடிவந்து நிச்சயம் உதவி செய்வார்கள். சுற்றத்தின் அருமை பெருமைகளை நீங்கள் உணர்வதற்கு ஒரு தருணம் வரப்போகின்றது. யாரையும், எந்த பொருளையும் அலட்சியமாக நினைக்க வேண்டாம். அடுத்தவர்கள் புத்திமதி சொல்வதை கேட்டு உஷாராக பிழைத்துக் கொண்டால் வாழ்க்கையில் உங்களுடைய எதிர்காலம் நன்றாக இருக்கும். யார் சொல்வதையும் நான் கேட்க மாட்டேன்! என்று விதண்டா வாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு தேவையற்ற கஷ்டங்களை  சந்திக்கும் சூழ்நிலை நிலை ஏற்படும். தினம்தோறும் முருகன் வழிபாடு மன மாற்றத்தை உண்டு பண்ணும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இந்த வாரம் ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்