இந்த வார ராசிபலன் – 1/11/2021 முதல் 7/11/2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த வாரமாக இருக்கப்போகின்றது. வரப்போகின்ற தீபாவளி பண்டிகையை கொண்டாட தேவையான பணம் பையை நிரப்பும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். ஆடை ஆபரணப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மட்டும் கொஞ்சம் வேலைப்பளு அதிகமாக இருப்பதால் தேவையற்ற டென்ஷன் வந்து போகும். உடல் சோர்வடையும். வார இறுதியில் எல்லாம் சரியாகிவிடும். தினம்தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு நிறைய நல்ல செய்தி வந்து சந்தோஷத்தை கொடுக்க போகின்றது. நீண்டநாட்களாக நடக்காமல் இருக்கும் சில நல்ல விஷயங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக நடக்கத் தொடங்கும். உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். நமக்கு கூட இவ்வளவு அதிர்ஷ்டம் உள்ளதா. அப்படின்னு, பண்டிகையை சந்தோஷமாக கொண்டாடி மகிழ்வார்கள். பட்டாசு வெடிக்கும் போது மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். குழந்தைகளையும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று கூடி சந்தோஷமாக இருக்க கூடிய வாரம் இது. தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் கவனத்தோடு நடந்துகொள்ள வேண்டும். பண்டிகை நாட்கள் வரப்போகின்றது. அளவோடு சாப்பிடுங்கள். சாப்பிடும் விஷயத்தில் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். தேவையற்ற சில உடல் உபாதைகள் வந்து தொல்லை கொடுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் போனஸ் வந்து மனதை சந்தோஷப்படுத்தும். சந்தோஷம் நிறைந்த இந்த வாரத்தில் உங்களையும் உங்கள் வீட்டில் இருப்பவர்கள் உடைய ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். தினம் தோறும் அனுமன் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷத்திற்கு எந்த குறையும் இருக்காது. நீங்கள் நினைத்தபடி உங்கள் வீட்டில், உங்கள் குடும்பத்தாருடன் பண்டிகையை கொண்டாடி மகிழ்வீர்கள். வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கத் தொடங்கும். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் எதிர்பார்க்காத நல்லது ஒன்று உங்களுக்கு நடக்கப்போகின்றது. சந்தோஷத்தின் உச்சகட்டத்தில் இருக்க போகிறீர்கள். குலதெய்வத்தை மறக்க வேண்டாம். குலதெய்வத்திற்கு நன்றி சொல்லுங்கள். பாதுகாப்பாக இந்த தீபாவளியை கொண்டாடி மகிழுங்கள்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் செலவுகள் நிறைந்த வாரமாக தான் இருக்கப்போகின்றது. கையில் சேமிப்பு கரையை தான் செய்யும். எல்லாம் சுபச்செலவுகள் தான். பயம் வேண்டாம். சந்தோஷத்திற்கு எந்த குறையும் இருக்காது. ஆனால் இந்த வாரம் முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம். கூடுமானவரை முக்கியமான விஷயங்களில் முடிவு எடுப்பதை அடுத்த வாரம் தள்ளிப் போடுங்கள். வெளியே செல்லும்போது கவனமாக இருங்கள். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டாதீர்கள். வேலை செய்யும் இடத்தில் எதிர்பார்த்தபடி சம்பளம் கைக்கு வந்து சேரும். பதவி உயர்வுக்கு வாய்ப்புகள் உள்ளது. தினம்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிறைவான வாரமாக இருக்கப்போகின்றது. சந்தோஷமாக வீட்டிற்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்குவீர்கள். சந்தோஷமாக பண்டிகையை கொண்டாடுவதற்கு தேவையான வேலைகளை தொடங்குவீர்கள். ஆனால் குடும்பத்தில் மட்டும் சின்ன சின்ன சண்டைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மனைவியை விட்டுக் கொடுத்து அனுசரித்து சென்றால் எந்த பிரச்சனையும் இல்லை. கணவரை, மனைவிமார்கள் விட்டுக்கொடுத்துச் என்றால் பிரச்சினை இல்லை. அலுவலகத்தில் வேலை எப்போதும் போல தான் செல்லும். சொந்தத் தொழிலில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். தினம்தோறும் ஸ்ரீராமஜெயம் மந்திரம் சொல்வது மனதிற்கு அமைதியை தரும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை அவசியமாக தேவைப்படும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாதீர்கள். நிதானத்தோடு பிரச்சனைகளை கையாண்டால் உங்களுக்கு நிறைய நன்மைகள் நடக்கும். கோர்ட் கேஸ் வழக்குகள் கொஞ்சம் சீக்கிரமே முடிவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வழக்குகள் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகளை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் அந்தஸ்து உயரும். வருமானம் உயரும். சொந்தத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். தினம் தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுடைய வீட்டில் இந்த வாரம் பண மழைதான். நீங்கள் எதிர்பாராத பண வரவு உங்களை சந்தோஷப்படுத்தும். நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு வரப்போற பண்டிகையை கொண்டாடி மகிழ்வார்கள். வீட்டில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் மனநிறைவோடு இருப்பார்கள். ஆனால் யாரை நம்பியும் உங்கள் காசை கடனாக கொடுக்காதீர்கள். அந்த காசு திரும்பி வருவதில் சிக்கல் ஏற்பட்டுவிடும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் வேலைப்பளு அதிகமாக தான் இருக்கும். பைரவர் வழிபாடு நன்மை தரும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகமான வாரமாக தான் இருக்கப்போகின்றது. சுறுசுறுப்பாக பண்டிகைக்கு முன்பாக உங்களுடைய வேலையை முடித்துவிட்டு வீட்டில் சந்தோஷமாக இருக்க தயாராகி விடுவீர்கள். இருப்பினும் இந்த வார இறுதியில் சில உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வரும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். அளவோடு தீபாவளி பலகாரங்களை சாப்பிட வேண்டும். வியாபாரத்தில் சுறுசுறுப்பான முன்னேற்றம் ஏற்படும். தினம்தோறும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
மகர ராசிக்காரர்கள் ஏனோ தெரியவில்லை தேவையில்லாத பிரச்சனையை மனதில் நினைத்துக் கொண்டு குழப்பிக்கொண்டே இருப்பீர்கள். ஆனால் பிரச்சினை என்று பார்க்கப்போனால் எதுவுமே கிடையாது. உங்களுடைய மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். தியானத்தில் மனதை ஈடுபடுத்துங்கள். சந்தோஷம் உங்களை தேடி தானாக வரும். வருமானத்திற்கு பிரச்சினை இருக்காது. செய்யும் தொழிலில் பிரச்சினை இல்லை. செய்யும் வேலையில் பிரச்சனை இல்லை. உங்களுடைய மனசுதான் காரணம். சந்தோஷமாயிருங்க தீபாவளியை கொண்டாடுங்கள். மனதை தெளிவாக வைத்துக் கொள்ள ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருங்கள்.

கும்பம்:
கும்ப ராசி காரர்களுக்கு முதல் எதிரி கோபம். அதிகமாக வார்த்தைகளை விட்டு விட்டு பின்பு யோசிப்பதில் பிரயோஜனம் கிடையாது. கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டாலே உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. முடிந்தவரை சொந்த தொழிலில் இந்தவாரம் புதிய முதலீடு செய்ய வேண்டாம். உங்களிடம் வேலை செய்பவர்கள் சில பிரச்சினைகளை உண்டாக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கவனமாக இருந்து கொள்ளுங்கள். மனதை அமைதிப்படுத்த தினமும் அதிகாலையில் 10 நிமிஷம் தியானம் செய்யுங்கள். உங்களுக்கு அது தான் மருந்து.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு முதலில் தேவையான ஒரு விஷயம் சுறுசுறுப்பு. நிறைய வேலை இருக்கும். ஆனால் நீங்கள் மந்தமாக தான் இருப்பீர்கள். வேலையை சுறுசுறுப்பாக செய்து முடிக்க வேண்டும் என்று நினைக்க மாட்டீர்கள். உடம்பில் இருக்கும் சோம்பேறித்தனத்தை தூக்கி தூர எறியுங்கள். வெற்றி உங்களுக்கே நல்ல எதிர் காலம் காத்துக் கொண்டிருக்கின்றது. பண்டிகையை கொண்டாட தேவையான பணம் கையை வந்துசேரும். சந்தோசமாக பட்டாசுகள் வெடித்து ஜாக்கிரதையாக தீபாவளியை கொண்டாடுங்கள். தினந்தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -