இந்த வார ராசிபலன் – 29/11/2021 முதல் 5/12/2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் பரபரப்போடு இருக்க போகின்றது. ஒரு வேலையை முடித்தவுடன், அடுத்த முக்கியமான வேலை வரிசை கட்டி நிற்கும். எந்த வேலையை செய்வது எந்த வேலையை விடுவது என்பதை புரியாது. கவலை வேண்டாம். சுறுசுறுப்பாக ஒவ்வொரு வேலையாக திருத்தமாக நடத்தி முடிப்பீர்கள். அலைச்சல் கொஞ்சம் இருந்தாலும், இந்த வார இறுதியில் சந்தோசமான சில செய்திகள் செவிகளை எட்டும். பணவரவு அதிகரிக்கும். பாராட்டுக்கள் குவியும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் போராட்டங்கள் நிறைந்த வாரமாக இருக்கப்போகின்றது. நினைத்த ஒன்றை அடையவேண்டும் என்றால், பலமுறை அதற்காக கஷ்டப்பட வேண்டியிருக்கும். சுலபமாக வெற்றி கிட்டாது. கடின உழைப்பும் விடாமுயற்சியும் உங்களுடைய முதலீடாக இருக்க வேண்டும். வேலை செய்யுமிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். சொந்தத் தொழிலில் லாபம் படிப்படியாக உயரும். அதிக வட்டிக்கு கடன் வாங்கும் பழக்கத்தை விட்டுவிடுங்கள். இந்த வார இறுதியில் ஆன்மீக சுற்றுலா செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக இருக்கப்போகின்றது. வீட்டில் மகிழ்ச்சியான விசேஷங்கள் நடைபெறும். வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் நீங்கள் செல்வதற்கான வழியை அந்த ஆண்டவன் காட்டிக் கொடுக்கப் போகிறான். அனாவசியமாக நேரத்தை கழிக்காமல் உபயோகமான காரியங்களில் நேரத்தை செலவிடுங்கள். முன்னேற்றத்திற்கு வித்திடும் காலம் வந்துவிட்டது. அடுத்தவர்கள் சொல்வதை கேட்காமல் உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்தாலே வாழ்க்கையில் பல நன்மைகள் உங்களை தேடி வரும். தினம் தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றத்தை கொடுக்கக்கூடிய வாரமாக அமையப்போகின்றது. புதிய முயற்சிகள் வெற்றி தரும். வேலை செய்யும் இடத்தில் கடின உழைப்புடன் நீங்கள் செய்யும் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். அலட்சியமான எண்ணமும், செயலும் சில பிரச்சினைகளை கொண்டு வந்துவிடும். இந்த வாரம் எல்லா விஷயத்திலும் உஷாராக இருப்பது நல்லது. அவசியமான வார்த்தைகளை பேசாதீர்கள். உங்கள் வேலை என்னவோ, உங்கள் தேவைக்கு உண்டானதை செய்தால் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். குடும்ப உறவுகளுடன் இந்த வார இறுதியில் வெளியூர் பயணம் செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. தினம்தோறும் ஹனுமன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று கவலைகள் நிறைந்த வாரமாக தான் இருக்கப் போகின்றது. இருப்பினும் எதையும் போட்டு மனதை குழப்பிக் கொள்ள வேண்டாம். எந்த ஒரு விஷயத்தை செய்தாலும் அதில் உணர்ச்சிவசப்படாதீர். பொறுமை காக்க வேண்டும். பதறாத காரியம் சிதறாது என்பதை இந்த வாரம் முழுவதும் மனதில் ஆழப் பதிய வைத்துக்கொள்ளுங்கள். தன்னம்பிக்கையோடு செயல்படுங்கள். உங்களால் முடியும் என்று நம்புங்கள். நிச்சயமாக வெற்றி உங்கள் பக்கமே. காலையில் எழுந்து சிவபெருமானை நினைத்து தியானம் செய்துவிட்டு அதன் பின்பு உங்கள் வேலையை தொடங்கினால் பிரச்சினைகள் இல்லை.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கஷ்டமும் நஷ்டமும் சேர்ந்து இருக்கப்போகின்றது. வார தொடக்கத்தில் அமோகமாக செல்லும் உங்களுடைய வாழ்க்கை, வார இறுதியில் சற்று தடுமாற செய்யும். வார இறுதியில் செய்ய வேண்டிய நல்ல விஷயங்களை தொடக்கத்திலேயே செய்து முடித்து விடுங்கள். இந்த வாரம் முழுதும் வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரத்தான் செய்யும். சொந்தத் தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வந்து போகும். மனதை ஆறுதல் படுத்திக் கொள்ள தியானமும் இறைவழிபாடுமே உங்களுக்கு கை கொடுக்கும். உங்களுடைய பிள்ளைகளின் மூலம் சில நல்ல விஷயங்கள் நடக்கும். உங்களுடைய கஷ்டங்களை உங்களுடைய மனைவி புரிந்துகொண்டு, அனுசரித்து செல்வார்கள். இந்த இரண்டு ஆறுதலும் போதாதா என்ன.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் இலட்சியங்கள் நிறைவேற போகும் வாரமாக இருக்கப்போகின்றது. நீண்ட நாட்களாக நடத்த முடியாத சில காரியங்களை இந்த வாரம் வெற்றி பெறச் செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கூவிய போகின்றது. சொந்தத் தொழிலில் நல்ல லாபம் உண்டு. கணவன்-மனைவிக்கிடையே மட்டும் சின்ன சின்ன சண்டைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால், வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். குடும்ப உறவுகளுக்கு இடையே விட்டுக் கொடுத்து விடுங்கள். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். தினம் தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏனோ இந்த வாரத்தில் மனத்திருப்தி இல்லாத சூழ்நிலை ஏற்படும். நல்ல வருமானம் இருக்கும். சந்தோஷமாக இருப்பீர்கள். இருப்பினும் உள்ளுணர்வு ஏதோ ஒரு வருத்ததில் சோகத்தில் இருக்கும். ஆனால் பிரச்சினைகள் என்று பார்த்தால் எதுவுமே கிடையாது. நீங்களே உங்களுக்கு கஷ்டம் என்று நினைத்துக் கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி பெறலாம். சொந்தத் தொழிலை விரிவு படுத்தலாம். வேலை செய்யும் இடத்தில் உடன் வேலை செய்பவர்களின் ஆதரவு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களுடைய உழைப்பை புரிந்துகொண்டு நேர்மையை புரிந்துகொண்டு பாராட்டவும் செய்வார்கள். தினம்தோறும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் அவசரப்பட்டு ஏதாவது ஒரு செயலை செய்து விடுவீர்கள். யோசிக்காமல் தேவையில்லாத விஷயத்தை பேசி விடுவீர்கள். அதன் மூலம் ஏதாவது பிரச்சினை வரும். யாராவது ஒருவர் எதையாவது உங்கள் மனது நோகும் படி பேசி விடுவார்கள். பின்பு அதை நினைத்து வருத்தப்பட்டே பாதி நேரம் சென்றுவிடும். ஆக அனாவசியமாக அடுத்தவர்களின் பிரச்சினையில் தலையிடாமல் உங்கள் வேலையை மட்டும் நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தால் பிரச்சனை இருக்காது. முடிந்தவரை வாரம் முழுவதும் தேவையில்லாத கேள்விகளுக்கு மௌனத்தை மட்டுமே பதிலாக வைத்துக்கொள்ளுங்கள். மனதிற்குள் ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருங்கள்.

மகரம்:
மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் முழுவதும் தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். புத்திசாலித்தனத்துடன் நிறைய விஷயங்களை சாதித்துக் காட்டுவீர்கள். உங்களை பார்த்து பின்னால் புறம் பேசியவர்கள் வாயை அடைக்க போகிறீர்கள். பாராட்டு புகழ் உங்களை வந்து குவியும். புதிய வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும். எந்த வாய்ப்பை தேர்ந்தெடுப்பது என்பதில்தான் குழப்பமே. உங்களுடைய மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்தாலே வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடையலாம். முக்கிய விஷயங்களில் தயங்காமல் ஒரு முடிவு எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய எதிர்காலத்திற்கு அதுதான் நல்லது. தினம்தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு எந்த ஒரு குறையும் இருக்காது. சந்தோஷத்தின் உச்சிக்கே செல்லப் போகிறீர்கள். ஆனால் முக்கியமான சில விஷயங்களை செய்ய மறக்கக்கூடாது. சந்தோஷமான குடும்பம் ஒரு பக்கம் இருக்க, நம்முடைய கடமையும் அவசியம் தானே. மகிழ்ச்சியாக இருக்கின்றோம் என்று வேலைக்கு செய்யாமல் செய்யும் வேலையை திருந்த செய்யாமல் இருந்துவிட்டால் பின்பு நமக்கு தானே கஷ்டம் வரும். குடும்பம், சந்தோஷம், மனைவி குழந்தைகள் ஒரு பக்கம் இருந்தாலும் வேலையிலும் நீங்கள் கொஞ்சம் அக்கறையோடு கவனத்தோடு இருக்க வேண்டும். தினம்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தன்னம்பிக்கையோடு முயற்சிகளை செய்யக்கூடிய வாரமாக இருக்கப்போகின்றது. கடந்த சில நாட்களாக வேலையை சரியாக ஓடாமல் மன சஞ்சலத்தில் இருந்து இருப்பீர்கள். ஆனால் இந்த வாரம் எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு கிடைத்துவிடும். மனசஞ்சலங்கள் நீங்கும். அலுவலக வேலையை சுறுசுறுப்பாக செய்யப் போகிறீர்கள். வெற்றி வாகை சூடுவீர்கள். வெற்றி உங்கள் பக்கத்தில் தான் உள்ளது. ஆனால் உங்களுடைய சோம்பேறித்தனத்தால், நீங்கள் தான் வெற்றியின் பக்கத்தில் இருந்து விலகி விலகி செல்கிறீர்கள். கொஞ்சம் முயற்சி எடுங்கள். வாழ்க்கையில் அதி விரைவாக முன்னேறி விடுவார்கள். தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -