இந்த வார ராசிபலன் 30/10/2023 முதல் 05/11/2023 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

oct 30 to nov 05
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் இயல்பான வரமாகவே இருக்க கூடும். பொருளாதாரத்தைப் பொருத்தவரை பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. அதே சமயம் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு முயற்சி செய்வீர்கள். அப்படி முயற்சி செய்யும்பொழுது அதற்கேற்றார் போல் பணவரவு இருக்கிறதா என்பதை கருத்தில் கொண்டு முயற்சி செய்ய வேண்டும். கணவன் மனைவிக்குள் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஒருவரை ஒருவர் அனுசரித்து விட்டு கொடுத்து செல்வதன் மூலம் அந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.

உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை சற்று உடல் நலக்குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது, தூக்கத்திலும் உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்தினால் அந்த பிரச்சினைகளை தவிர்த்து விடலாம். வீட்டிற்கு உறவினர்கள் வருவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் செலவுகளும் செய்ய நேரிடும். வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையை காணப்படுகிறது. சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை முதலீடு செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். லாபம் திருப்திகரமாக இருக்கும். உடன் இருப்பவர்களுடன் நல்ல ஒத்துழைப்பு ஏற்படும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கருத்தை வெளிப்படுத்தும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை திருப்திகரமான சூழ்நிலையே நிலவும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த சண்டை சச்சரவுகள் அனைத்தும் நீங்கும் அன்னியோன்யம் அதிகரிக்கும். கடன் வாங்குவது மற்றும் கொடுப்பது தொடர்பான செயல்களில் ஈடுபடும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். அமைதியாக இருந்து வாக்குவாதங்களை தவிர்த்தால் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.

வேலையை பொருத்தவரை திருப்திகரமான சூழ்நிலையே காணப்படுகிறது. வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. புதிதாக வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அடுத்த கட்ட முன்னேற்ற பாதையை நோக்கி செல்ல வேண்டும் என்று நினைப்பீர்கள். தொழிலை விரிவாக்குவதற்கான முயற்சிகள் சாதகமாக அமையும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பாராத பணவரவு கிடைக்கும் வாரமாக இருக்கிறது. வருமானத்தில் எந்தவித குறையும் இருக்காது. நினைத்ததை விட அதிகமாகவே கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. இதுவரை இருந்து வந்த உடல் உபாதைகள் அனைத்தும் நீங்கும். இருப்பினும் உடற்பயிற்சி மேற்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாத செலவுகள் அனைத்தும் கட்டுக்குள் வரும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி மன ஒற்றுமையுடன் சந்தோஷமாக வாழ்வீர்கள். பிறரிடம் பேசும் பொழுது மிகவும் கவனமாகவும் அதே சமயம் பொறுமையுடனும் பேச வேண்டும்.

வேலையை பொருத்தவரை உடன் பணிபுரிபவர்களிடம் சுமூகமான சூழ்நிலையை மேற்கொள்ள வேண்டும். பணியில் தங்கள் வேலையை செய்து முடிப்பதில் கவனமாகவும் இருக்க வேண்டும். தொழிலை பொருத்தவரை கடினமான உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். இக்கட்டான சூழ்நிலையிலும் உதவிக்கரம் நீட்டுவதற்கு பலரும் முன் வருவார்கள். இந்த வாரம் மிகவும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கவனமாக செயல்பட வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பணவரவு ஓரளவுக்கு சாதகமாக இருந்தாலும் செலவுகள் அதிகரிப்பதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. முடிந்த அளவுக்கு கடன் வாங்காமல் செலவுகளை கட்டுக்குள் வைக்க முயற்சி செய்ய வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். சில உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எதிரிகளால் இதுவரை ஏற்பட்டிருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். உடன் இருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். முடிந்த அளவிற்கு வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நன்மை தரும்.

வேலையை பொருத்தவரை சாதாரண சூழ்நிலையே நிலவும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படும். வேலையை நிறைவாக செய்வதன் மூலம் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். தொழிலைப் பொருத்தவரை நல்ல லாபம் இருக்கும். நீங்கள் தொழில் நடத்தும் விதத்தைப் பார்த்து மற்றவர்கள் உங்களிடம் வந்து ஆலோசனை கேட்கும் நிலை உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகிழ்வதற்கு பழனி ஆண்டவரை வழிபட வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமான வாரமாக திகழப் போகிறது. பணவரவு அதிகரிப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. செலவுகள் செய்யும் பொழுது தேவையான செலவுகள் எது என்பதில் கவனம் செலுத்தி செய்தால் சேமிக்க முடியும். கணவன் மனைவிக்கு இடையில் அன்பும் அக்கறையும் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை இந்த வாரம் சிறப்பான வாரம் ஆகவே திகழப்போகிறது.

வேலையை பொருத்தவரை பாராட்டுகளை பெறுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதனால் எதிர்ப்பாராத பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்ற சலுகைகள் நேரிடும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாகவே கிடைக்கும். எதிர்கால திட்டங்களை செயலாற்றுவதற்காக பல ஆலோசனைகளை மேற்கொள்வீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமையாக இருக்க வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பணவரவு அதிகரித்தாலும் அதைவிட அதிகமாக செலவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் சிலர் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகுவார்கள். செலவுகளை செய்யும் பொழுது கவனத்துடன் செய்தால் கடன் வாங்கும் சூழ்நிலையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். மன அழுத்தம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருப்பதால் எதையும் அதிகம் யோசிக்காமல் செயல்பட வேண்டும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கும். வார்த்தைகளில் கவனம் தேவை.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். உடன் பணிபுரிபவர்கள் உதவி செய்வார்கள் இருப்பினும் உங்கள் வேலையை சிறப்பாக செய்து முடிப்பதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் ஏற்படும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக கிடைக்கும் என்பதால் தொழிலை விரிவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட முற்படுவீர்கள். அந்த முயற்சி வெற்றி அடைவதற்குரிய வாய்ப்புகளும் பிரகாசமாக தெரிகிறது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை தாராளமாக இருக்கும். எந்தவித குறையும் இருக்காது. அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் நலத்தில் இருந்து வந்த சீர்கேடுகள் அனைத்தும் குணமாகும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். பேச்சில் கவனமாக செயல்பட்டால் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கலாம்.

வேலையை பொருத்தவரை புதிய வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் வேலையில் இருப்பவர்கள் எதிர்பார்த்து வந்த சலுகைகள் கிடைத்து மகிழ்ச்சியான சூழ்நிலைக்கு ஆளாவார்கள். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. போட்டியாளர்களை சமாளிக்க கடுமையாக உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தொழிலில் எந்த வித புதிய முயற்சிகளையும் முதலீடுகளையும் செய்வதை தவிர்க்க வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கவனத்துடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பணவரவிற்கு எந்தவித குறைவும் இருக்காது. செலவுகள் அதிகம் ஏற்பட்டாலும் அவை அனைத்தையும் சமாளித்து விடுவீர்கள். நெருங்கிய உற்றார் உறவினர்களிடம் பக்குவமாக நடந்து கொள்வதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. உடல் நலனை பொருத்தவரை கவனச் சிதறல் ஏற்பட்டு ஒருவித அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். உடன் வேலை செய்பவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் வருவதை தவிர்த்துக் கொள்ள முடியும். புதிதாக எந்த வேலைக்கும் முயற்சி செய்ய வேண்டாம். தொழிலை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது என்றாலும் சமாளிக்க முடியும் அளவிற்கு வருமானம் இருக்கும். தொழிலில் எந்தவித புதிய முதலீடுகளையும் செய்ய வேண்டாம். யாருடைய பேச்சை கேட்டு புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். நீண்ட நாட்களாக காத்திருந்த நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும் அதை சமாளிப்பதற்குரிய பண வரவு தாராளமாக இருக்கும். பேச்சில் கவனம் தேவை. திருமண முயற்சிகள் எதிர்பார்த்தபடி நடக்கும். கணவன் மனைவிக்குள் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே ஏற்படும். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. அதேபோல் பதவி உயர்வு சம்பள உயர்வு எதிர்பார்த்து இருப்பவர்களுக்கும் அந்த சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமான வாரமாக திகழப் போகிறது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷகரமான வாரமாக திகழப்போகிறது. பணவரவிற்கு எந்தவித குறைவும் இருக்காது. நீண்ட நாட்களாக வசூலாகாத பாக்கி தொகை வசூலாகும். எந்த வேலையை செய்வதாக இருந்தாலும் அதில் பொறுமையாக செயல்பட வேண்டும். யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது. பொது இடங்களுக்கு செல்லும் பொழுது சற்று கவனத்துடன் செல்ல வேண்டும். உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை நீர் குறைபாட்டால் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்பதால் அதிக தண்ணீர் அருந்தும் பழக்கத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். யாரிடமும் உங்கள் வேலையை ஒப்படைக்காமல் நீங்களே அதை செய்யும்பொழுது அதற்குரிய பலனை அடைவீர்கள். உயர் அதிகாரிகளிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வியாபாரத்தை பொருத்தவரை நல்ல லாபம் கிடைப்பதற்கு உரிய வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலை விரிவுபடுத்தவும் முயற்சி செய்வீர்கள். புதிய தொழிலை ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கு சிறந்த வாரமாக இந்த வாரம் திகழும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு வெங்கடேச பெருமாளை வழிபட வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முதலீடுகளை தவிர்க்க வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பண வரவு திருப்திகரமாக இருக்கும் சிலருக்கு எதிர்பாராத பண வரவு ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. இருப்பினும் வண்டி வாகனங்கள் வாங்கும் பொழுது கவனமாக வாங்க வேண்டும். முடிந்த அளவிற்கு இந்த வாரம் சொத்துக்கள் வாங்குவதை தவிர்ப்பது நன்மை தரும். சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவிக்குள் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அவை சுமுகமாகவே முடியும். உடல் நலம் சீராக இருக்கும்.

வேலையை பொருத்தவரை புதிதாக எந்த வேலைக்கும் முயற்சிக்க வேண்டாம். வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். இருப்பினும் அதில் கவனம் செலுத்தினால்தான் பிரச்சினைகள் வருவதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும். தொழிலைப் பொருத்தவரை லாபம் திருப்திகரமாக இருக்கும். தொழிலில் புதிய முயற்சிகள் செய்வதை தவிர்க்க வேண்டும். விரிவுபடுத்தும் முயற்சிகள் வெற்றிகரமாக நடைபெறும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பாளை வழிபட வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திருப்திகரமான வாரமாக திகழப்போகிறது. பணவரவை பொருத்தவரை எதிர் பார்த்த பண வரவு கிடைக்கும். வீட்டில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அவை உடனே சரியாகிவிடும். எதிர்பார்த்த தகவல் வீடு தேடி வருவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இதுவரை நடக்கவே நடக்காது என்று நினைத்த காரியங்களும் வெகு சிறப்பாக நடந்தேறும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் அதிக விழிப்புணர்ச்சிடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். முடிந்த அளவிற்கு பணத்தை சேமித்து வைக்கும் எண்ணத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்குள் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.

வேலையை பொருத்தவரை உற்சாகமான சூழ்நிலையை காணப்படும். வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் விரும்பிய வேலை கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது, ஒரு சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. தொழிலில் ஏதாவது முடிவுகள் எடுப்பதாக இருந்தால் அதை தற்சமயம் தள்ளி வைப்பது நன்மை தரும். முக்கியமான முடிவுகள் என்னும் பட்சத்தில் தகுந்தவர்களிடம் ஒரு முறைக்கு பலமுறை ஆலோசனை பெற்று முடிவு எடுக்க வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

- Advertisement -