- Advertisement -
Homeஜோதிடம்வார பலன் | Vara rasi palangalஇந்த வார ராசிபலன் 06/10/2025 முதல் 11/10/2025 வரை - 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

இந்த வார ராசிபலன் 06/10/2025 முதல் 11/10/2025 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த வாரம் பேச்சாற்றல் வெளிப்படும் வாரமாக இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் மனதில் வைத்துக் கொள்ள மாட்டீர்கள். வெளிப்படையாக பேசுவீர்கள். எதிரிகளை போட்டி போட்டு ஜெயிப்பதில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உங்கள் கை ஓங்கி இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். நீண்ட நாள் துன்பங்கள் விலகும். மன நிம்மதி கிடைக்கும். தினமும் வாராகியை மனதில் நினைத்து கும்பிடுங்கள். எதிரி தொல்லையில் இருந்து விடுபடலாம்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இந்த வாரம் சின்ன சின்ன பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்ப்புகள் இருக்கும். மேலதிகாரிகளை அனுசரணையாக நடத்த வேண்டும். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் பொறுமை தேவை. வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளக்கூடாது. பாட்னரோடு சண்டை போடக்கூடாது. கணக்கு வழக்குகளில் மட்டும் கவனம் தேவை. யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. கடன் கொடுக்காதீங்க. மற்றபடி இந்த வாரம் ஆரோக்கியம், குடும்பம், வீடு எல்லாம் சந்தோஷமாக அமையும் தினமும் முருகரை கும்பிடுங்கள்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். எதிலும் தனித்துவமாக தெரிவீர்கள். உங்களுடைய திறமை வெளிப்படும். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுக்கான முன்னுரிமை கொடுக்கப்படும். கைநிறைய லாபம் கிடைக்கும். அடுத்தவர்களுடைய பிரச்சனைகளை சரி செய்து வைப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். அடுத்தவர்களுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். மன நிம்மதி பெறுவீர்கள். பொது பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். வியாபாரத்தில் முதலீடு செய்யும்போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். விநாயகர் வழிபாடு நன்மையை தரும்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் பெரிய பெரிய தொந்தரவிலிருந்து விடுபடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனத்தை செலுத்துவீர்கள். மேலதிகாரிகளுடைய நம்பிக்கைக்கு ஆளாவீர்கள். உங்களுக்கான பொறுப்பும் கொஞ்சம் அதிகரிக்க தான் செய்யும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. குடும்ப உறவுகளோடு கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதம் செய்யாதீங்க. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடக்கவும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் நல்லது. கூடுமானவரை செலவுகளை குறைக்கவும். தினமும் பெருமாள் வழிபாடு உங்கள் பண பிரச்சனையை தீர்த்து வைக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரம் வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வது தவிர்ப்பது நல்லது. யாரிடமும் கடன் வாங்காதீங்க. கடன் கொடுக்காதீங்க. ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்தோடு செயல்படுங்கள். மூன்றாவது மனிதரின் பேச்சை முழுசாக நம்ப வேண்டாம். தெரியாத வேலையில் கால் வைக்க வேண்டாம். இறை வழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை கொடுக்கும். நீண்ட தூர பயணத்தின் போது உடைமைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்‌. தினம் தினம் பேருந்தில் செல்லும் போதும் பைக்கில் செல்லும் போதும் கவனம் தேவை. நரசிம்மர் வழிபாடு செய்யுங்கள். இந்த வாரம் வரும் துன்பத்திலிருந்து தப்பிக்கலாம்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திடீர் அதிர்ஷ்டம் உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. ஏதாவது ஒரு வகையில் பணம் வந்து கொண்டே இருக்கும். நீண்ட நாள் கோர்ட் கேஸ் வழக்குகள் நிறைவு பெறும். எதிர்பாராத சொத்து சேர்க்கையும் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு சீக்கிரம் திருமணம் நிச்சயிக்கப்படும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்தி உண்டு. வேலை இல்லாமல் தின்டாடி வந்தவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை கிடைக்கும். வெளியூர் வேலை, படிப்பு இதுபோல ஆசைகள் நிறைவேறவும் வாய்ப்புகள் உள்ளது. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். தினமும் குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இந்த வாரம் காரியக்காரர்களாக இருக்கப் போகிறீர்கள். உங்களுக்கான நல்லதை நீங்கள் தேடி தேடி செய்து கொள்வீர்கள். சுயநலத்துடன் நடந்து கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சில பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். எவ்வளவு பிரச்சனை வந்தாலும் சரி, உங்களுக்கு காரியத்தில் இருந்து மட்டும் பின்வாங்க மாட்டீர்கள். உங்கள் காரியத்தில் குறியாக இருப்பீர்கள். சின்ன சின்ன எதிரிகள் உருவாக வாய்ப்பு உள்ளது. நல்ல நண்பர்களை இழப்பதற்கு வாய்ப்பும் உள்ளது. கவனமாக நடந்து கொள்ளுங்கள். முடிந்தவரை பசு மாட்டிற்கு உங்கள் கையால் வாழைப்பழம் வாங்கி தானம் கொடுங்கள் நல்லது நடக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படும் நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பீர்கள். எதிரிகள் முன்பு உங்கள் கை ஓங்கி நிற்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். நீண்ட தூர பயணத்தின் போது மட்டும் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். இந்த வாரம் துர்க்கை அம்மன் வழிபாடு நல்ல பலனைத் தரும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த வாரம் பிரச்சனைகளில் இருந்து விடுபடக்கூடிய வாரமாக இருக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத சுவாரசியமான விஷயங்கள் நடக்கும். நீண்ட தூர பயணங்கள் உண்டாகும். சுபச் செலவுகள் ஏற்படும். வேலையை பொருத்தவரை அனுசரனையாக நடக்க வேண்டும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை அமையும். வேலை இல்லாதவர்களுக்கு கூட நல்ல வேலை காத்துக் கொண்டிருக்கிறது. சனிக்கிழமை நவகிரக கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள் சங்கடங்கள் விலகும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று துணிச்சல் அதிகமாக இருக்கும். தைரியம் வெளிப்படக்கூடிய நாள். மனதில் பட்டதை பட்டென்று வெளியில் பேசுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் இதனால் நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டீர்கள். நேர்வழியோடு நடப்பீர்கள். திறமைசாலிகளாக வளம் வருவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். இந்த வாரம் எதிரிகள் உருவாகக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. இருந்தாலும் உங்களுக்கு கடவுளின் ஆசிர்வாதத்தால் கெடுதல் நடக்காது. இந்த வாரம் அங்காள பரமேஸ்வரி வழிபாடு நன்மை செய்யும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இந்த வாரம் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். எந்த இடத்திலும் முன் கோபப்படக்கூடாது. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. ஆடம்பர வாழ்க்கை வேண்டாம். அடுத்தவர்களிடம் உங்களுடைய பெருமைகளை சொல்லி தம்பட்டம் அடிக்க வேண்டாம். நிதானமாக நடந்து கொள்ளுங்கள். எல்லா நல்லதும் ரகசியமாகவே இருக்கட்டும். தேவையில்லாத கண் திருஷ்டி விழ வாய்ப்புள்ளது. ஞாயிற்றுக்கிழமையில் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதுவும் அவ்வளவு எளிதில் சுலபமாக கிடைக்காது. அயராது உழைத்தால் மட்டுமே உங்களுக்கு வெற்றி கிடைக்கும். முடியாது என்று சோர்ந்து உட்கார கூடாது. சுறுசுறுப்போடு செயல்பட வேண்டும். இந்த வார துவக்கத்தில் மேற்கொள்ளும் சின்ன முயற்சி கூட, இந்த வார இறுதியில் உங்களுக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். உணவு கட்டுப்பாடு தேவை. மருத்துவர் ஆலோசனை இல்லாமல் நீங்களாகவே எந்த மருந்தும் எடுத்துக்காதீங்க. குழந்தைகளுடைய ஆரோக்கியத்திலும் கொஞ்சம் அக்கரை காட்டுங்கள். இந்த வாரம் மகாலட்சுமி வழிபாடு நன்மையை தரும்.

சற்று முன்