இந்த வார ராசிபலன் – 11/10/2021 முதல் 17/10/2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றிகரமான வாரமாக இருக்கப் போகின்றது. நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் பெரிய வெற்றியைக் கொண்டு வந்து சேர்க்கும். வேலை சம்பந்தமாக நீண்ட தூர பயணம் செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் நீங்கும். சொந்த தொழிலில் பெரிய அளவில் லாபம் இருக்காது. குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலையே நிலவும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் பொன் பொருள் ஆபரண அணிகலன்களை வாங்கி சேர்ப்பதற்கு யோகமான வாரம் இது. தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். எந்த வேலையை எடுத்தாலும் அது உடனே முடியாமல் இழுத்துக் கொண்டே செல்லும். முக்கியமான முடிவுகளை எடுப்பதாக இருந்தால் அடுத்தவாரம் எடுக்கலாம். வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு அலுவலகத்தில் சில பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது‌. கூடுதலான நேரம் எடுத்து வேலை செய்ய வேண்டிய நிலைமை உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். உறவினர்களின் வருகை திடீர் செலவை கொண்டுவரும். வெளியிடங்களுக்கு வாகனங்களில் செல்லும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கப்போகின்றது. இதுநாள் வரை இருந்து வந்த மனக் குழப்பங்களுக்கு ஒரு தெளிவு கிடைத்துவிடும். தேவையற்ற சந்தேகங்களை மனதில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு, நிம்மதியாக இருக்க போகிறீர்கள். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். அரசாங்க வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல பதில் காத்திருக்கின்றது. குடும்ப உறவுகளை மட்டும் கொஞ்சம் அனுசரித்து செல்ல வேண்டும். அனாவசியமாக வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். உறவுகளை மரியாதையுடன் நடத்துவது நன்மைதரும். எல்லாம் நல்லதே நடக்கும். ஆனால் அதில் கொஞ்சம் தாமதம் இருக்கும். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மனநிறைவான வாரமாக இருக்கப்போகின்றது. நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சுறுசுறுப்பாக உங்களுடைய வேலையை முடித்துவிட்டு, நல்ல பெயரையும் வாங்கி விடுவீர்கள். நடக்கும் எல்லாம் நல்லபடியாக நடந்தால் கூட, உங்களுடைய முன்கோபத்தால் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்கள் பக்கம் நியாயம் இருந்தாலும் கொஞ்சம் அனுசரணை என்பது தேவை. எல்லாரிடமும் கறாராக பேசி வம்பை வளர்த்துக் கொள்ள வேண்டாம். தினம்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரம் புத்திக்கூர்மை யோடு செயல்பட்டு சில வேலைகளை சுறுசுறுப்பாக திறமையாக முடிக்கப் போகிறீர்கள். பாராட்டு குவிய போகின்றது. வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகள் உங்களுடைய திறமையை புரிந்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது. இனி எல்லாம் உங்களுக்கு சாதகமாக நடக்கும். சொந்த தொழிலில் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். அதிகப்படியான முதலீட்டை எதிலும் போட வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் விழிப்புணர்வோடு செயல்பட்டால் நல்லது. தினம் தோறும் நவகிரக வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் இந்த வாரம் துணிச்சலாக செயல்படப் போகிறீர்கள். நடக்க முடியாத காரியத்தை கூட நடத்திக் காட்டும் அளவிற்கு உங்களுடைய மனதில் துணிச்சல் வரப்போகின்றது. வேலை செய்யும் இடத்தில் இருந்த எதிர்ப்புகள் படிப்படியாக குறையத் தொடங்கும். எதிரிகளின் சூழ்ச்சியிலிருந்து உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் துணிச்சலாக சில முடிவுகளை எடுத்து அந்த முடிவுகளுக்கான நல்ல பலனையும் பெறுவீர்கள். பெண்களுக்கு மன உறுதி அதிகரிக்க கூடிய வாரமாக இது இருக்கப்போகின்றது. தினந்தோறும் ஹனுமன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தேவை பொறுமை. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. கோபத்தோடு எந்த வார்த்தையும் பேசக்கூடாது. வீண் விவாதங்களை தவிர்த்து கொண்டாலே போதும். பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். அடுத்தவர்களால் பிரச்சினைகள் வரும். அடுத்தவர்கள் உங்களை வம்புக்கு இழுப்பார்கள். இருப்பினும் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். அவ்வளவு தான். மனதிற்குள் ஓம் நமசிவாய மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமான வாரமாக இருக்கப்போகின்றது. உங்களுடைய வாய் ஜாலத்தால் நீங்கள் நிறைய விஷயத்தை சாதிக்கப் போகிறீர்கள். பேசியே காரியத்தை சாதித்து விட்டு ஒன்றுமே தெரியாதது போல் இருப்பீர்கள். முடிந்தவரை அடுத்தவர்களுடைய பேச்சை கேட்டு நடப்பதை மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுடைய மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்தாலே உங்களுக்கு நிறைய நன்மைகள் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் தேவை. அனாவசியமாக யாரையும் நம்பி விடாதீர்கள். தினம்தோறும் பராசக்தி வழிபாடு நன்மை தரும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வருமானம் அதிகரிக்கும். வருமானத்துக்கு ஏற்ற செலவு இருக்கும். இருப்பினும் காசு இல்லை என்ற பிரச்சனை இருக்காது. வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் எடுத்து வேலை செய்வது நன்மை தரும். உங்களுடைய அலட்சியத்தால் சில தவறுகள் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பெண்கள் குடும்ப உறவுகளை அனுசரித்துச் செல்வது நன்மை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கோர்ட் கேஸ் வழக்குகள் உங்கள் பக்கம் சாதகமாக தீர்ப்பு வருவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. தினந்தோறும் மகான்கள் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. எந்த விஷயத்திலும் கூடுதல் கவனம் தேவை. யோசிக்காமல் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. யாரிடமும் அனாவசியமாக பேசி பிரச்சனையை வளர்த்துக் கொள்ளக் கூடாது. மற்றபடி உங்களுடைய வேலை, செய்யும் தொழில் எல்லாம் சுமூகமாக தான் செல்லும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. விட்டுக்கொடுங்கள் அனுசரித்து செல்லுங்கள். எல்லாம் நன்மையே நடக்கும். தினம் தோறும் சனிபகவான் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் இந்த வாரம் எல்லா வேலைகளையும் திறமையோடு செய்து முடிப்பீர்கள். இருப்பினும் உங்கள் மேல், உங்களை சுற்றி இருப்பவர்கள் குறை சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். அடுத்தவர்களது பேச்சை காதில் வாங்கிக் கொள்ளாமல், உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். அதேசமயம் கோபம் கூடாது. நிதானத்தோடு செயல்பட வேண்டும். வீட்டில் சுபகாரிய செலவுகள் அதிகரிக்கும். கொஞ்சம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். இருப்பினும் அவை எல்லாவற்றையும் சமாளிக்கும் தெம்பும், மன தைரியம் உங்களிடத்தில் உண்டு. தெளிவாக சிந்தித்து தெளிவாக செயல்பட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. தினந்தோறும் விநாயகர் வழிபாடு நல்லது.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இருந்த மனக்குழப்பம் இந்த வாரம் தெளிவு பெறும். கடந்த சில வாரங்களாக எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது, எந்த வேலைக்கு செல்லலாம் எந்த வேலைக்கு செய்யக்கூடாது என்ற மனக்குழப்பத்திற்கு சிலபேர் ஆளாகி இருப்பீர்கள். அத்தனை குழப்பத்திற்கும் இந்த வாரம் தீர்வு கிடைத்துவிடும். நிலையான வருமானத்திற்கு வழி பிறக்கும். எல்லாம் நன்மையாகவே நடந்தாலும் உங்களுடைய வேலையில் கடின உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் தான் உங்களால் வாழ்க்கையில் முன்னேற முடியும். பணம் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தினால் நல்லது. தினம்தோறும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -