இந்த வார ராசிபலன் – 25/10/2021 முதல் 31/10/2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிறைய நன்மைகள் நடக்க போகின்றது. வருமானம் பல வழிகளில் வந்து பையை நிரப்பும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யுமிடத்தில் அவ்வப்போது சின்ன சின்ன குழப்பங்கள் வந்து போகத்தான் செய்யும். அதை நினைத்து மனதை குழப்பிக் கொள்ள வேண்டாம். இந்த வார இறுதியில் எல்லா பிரச்சனைக்கும் ஒரு முடிவு கிடைத்துவிடும். வீட்டில் இருக்கும் பெண்கள் எல்லா விஷயத்திலும் பொறுமை காப்பது அவசியம். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு விஷயத்திலும் நிதானம் தேவை. பொறுமை இந்த வாரம் உங்களுக்கு அவசியம் தேவை. வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து தான் செல்ல வேண்டும். முன்கோபம் கூடாது. வாக்குவாதம் செய்யக் கூடாது. பிரச்சனையில் சிக்கிக் கொண்டாலும் நீங்கள் அமைதியாக செல்வதுதான் நல்லது. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. விட்டுக்கொடுத்து செல்லுங்கள். கூடுமானவரை பேச்சை குறைத்துக் கொண்டு கவனமாக இருந்து கொண்டால் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். தினம்தோறும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வம்பு வாய்ப்புகள் தேடி வருவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. நிறைய பஞ்சாயத்துக்கு தலைமை தாங்கி அந்த பஞ்சாயத்துக்கு ஒரு தீர்ப்பு சொல்லும் அளவிற்கு விவகாரங்கள் உங்களை தேடி வரும். பிரச்சினைகள் எதுவும் இல்லை. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். கடன் தொகை வசூலாகும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆடை ஆபரணப் பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். தினம் தோறும். முருகன் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பாராட்டும் புகழும் குவிய போகின்றது. கையில் எடுத்த வேலையை சுலபமாக முடித்து அதற்கான நல்ல பெயரையும் வாங்கி விடுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் கூடும். குடும்பத்தில் மட்டும் சின்ன சின்ன சண்டைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி அனுசரித்து சென்றால் பிரச்சனை இல்லை. புதியதாக சொத்துக்கள் வாங்குவதாக இருந்தால் இந்த வாரம் வாங்கலாம். நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் முடிக்கக்கூடிய எல்லாவகையான அனுகூலமும் இந்த வாரம் உங்களுக்கு உண்டு. தினம் தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரக்கூடிய வாரமாக இருக்கப்போகின்றது. உங்களுடைய வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் காலடி எடுத்து வைக்க சில வாய்ப்புகள் உங்கள் வீட்டு கதவை தட்டும். அதை நீங்கள் தான் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். பிறகு செய்து கொள்ளலாம் என்று எந்த வேலையையும் சோம்பேறித்தனப்பட்டு தள்ளிப்போட வேண்டாம். அன்றைக்கு உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை அன்றைக்கே முடித்து விடுங்கள். அது உங்களுடைய வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் சுமை குறையும். சிக்கலான சில பிரச்சனைகளுக்கு இந்த வார இறுதியில் நல்ல தீர்வு கிடைக்கும். தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இது முன்னேற்றம் தரும் வாரமாக இருக்கும். இருப்பினும் சில மன குழப்பங்கள் உங்களுக்கு சங்கடத்தைக் கொடுக்கும். எந்த வேலையை செய்வது, எந்த வேலையை செய்யக் கூடாது, புதிய வேலைக்கு செல்லலாமா, வேண்டாமா, என்று இப்படிப்பட்ட சில குழப்பமான தருணங்களை இந்த வாரம் நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். உங்களுடைய மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்தாலே உங்களுக்கு நன்மை கிடைக்கும். அடுத்தவர்கள் சொல்வதை கேட்டு அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீர்கள். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும்‌. வேலை பளு அதிகரிக்கும். வீட்டில் சுபச் செலவுகள் உண்டாகும். தினம்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களே இந்த வாரம் கொஞ்சம் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். யாரிடம் எப்படி பேச வேண்டும், யாரிடம் எப்படி பேச கூடாது என்பதை கொஞ்சம் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். வார்த்தைகளை விட்டு விட்டால் அதன் பின்பு அதை அல்ல முடியாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கோபம் அறவே தவிர்க்கப்பட வேண்டிய ஒரு விஷயம். வியாபாரத்தில் கொஞ்சம் மந்தமான சூழ்நிலை நிலவும். கடன் பிரச்சனை கொஞ்சம் சிக்கலை கொடுக்கும். வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். இருப்பினும் கூடுதல் முயற்சி எடுக்கும் பட்சத்தில் பண பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வந்தால் அனுசரித்து செல்ல வேண்டும். பெண்கள் வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த வாரம் சுறுசுறுப்பாக எல்லா வேலையையும் முடித்து விடுவீர்கள். நீங்கள் எடுத்த புதிய முயற்சிகள் வெற்றி தரும். ஆனால் எல்லா விஷயத்திலும் ஒரு நிதானம் தேவை என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக சிந்திக்காமல் எந்த ஒரு முக்கியமான முடிவையும் எடுக்கக் கூடாது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சின்னச் சின்ன சங்கடங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உடன் வேலை செய்பவர்களுடன் தேவையில்லாத மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பண்டிகைக்கு தயாராக புதிய துணி, நகைகளை வாங்கி மகிழ்வீர்கள். யாருக்குமே உதவி செய்யப் போய் மாட்டிக் கொள்ளாதீர்கள். உஷாராக இருந்து கொள்ளுங்கள். தினம் தோறும் அனுமன் வழிபாடு நன்மை தரும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் குழப்பமான வாரமாக இருக்கப்போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்காது. நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை அமையும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். அதில் எந்த பிரச்சினையும் கிடையாது. இருப்பினும் அக்கம் பக்கம் இருப்பவர்கள், உறவினர்களிடையே சண்டைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தடைகள் வருவது போல இருந்தாலும் உங்களுடைய விடாமுயற்சி, உங்களுக்கு நிறைய வெற்றிகளை கொண்டு வந்து சேர்க்கும். விடா முயற்சியை கைவிடாதீர்கள். தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிறைய வெற்றிகள் வரக்கூடிய வாரமாக இருக்கப்போகின்றது. சொந்த தொழிலில் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். புதிய முதலீட்டை போடலாம். வேலை செய்யும் இடத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைப்பதற்கு கூட நிறையவே வாய்ப்புகள் உள்ளது. வருமானம் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகரிக்கிறதோ அதே அளவுக்கு உங்கள் வீட்டில் செலவுகளும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். செலவுகளை முடிந்தவரை கட்டுப்படுத்த பாருங்கள். சேமிப்பு மிக மிக முக்கியம். அரசு சம்பந்தப்பட்ட எந்த வேலையை நீங்கள் தொட்டாலும் அது இந்த வார இறுதிக்குள் நல்ல முடிவுக்கு வந்துவிடும். ஐயப்பன் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் இலாபகரமான வாரமாக இருக்கப் போகின்றது. நீங்கள் ஆசையாக நினைத்துக் கொண்டிருந்த ஒரு விஷயம் இந்த வார இறுதிக்குள் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் மேலிடத்திலிருந்து நல்ல சப்போர்ட் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் வீடு திரும்புவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. பெண்கள் தைரியத்தோடு சில முடிவுகளை எடுப்பீர்கள். அந்த முடிவு உங்களுக்கு நன்மை தரக்கூடிய முடிவாகவும் இருக்கும். தினம் தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தேவையற்ற குழப்பங்கள் மனசஞ்சலங்கள் வரக்கூடிய வாரமாக இருக்கும். இருப்பினும் உங்களுடைய விடாமுயற்சியால் போராட்டத்தால் சில விஷயங்களை சாதுரியமாக சாதித்து விடுவீர்கள். வார இறுதியில் பணத்தட்டுப்பாடு ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து வருமானம் கைக்கு வந்து சேராது. வேலை செய்யும் இடத்தில் நிறைய உழைப்பை போட்டால்தான் கொஞ்சமாக நல்ல பெயர் கிடைக்கும். தலையில் பாறாங்கல்லை தூக்கி வைத்தது போல வேலைப்பளு அதிகமாக தான் இருக்கும். கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும். இந்த வார இறுதியில் எல்லாவற்றிற்கும் ஒரு நல்ல தீர்வு கிடைத்துவிடும். அவசரப்பட்டு வேலையை விட்டுவிட வேண்டாம். தினம்தோறும் ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை மனதிற்குள் உச்சரியுங்கள்.

- Advertisement -