இந்த வார ராசிபலன் 3/10/2022 முதல் 9/10/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

varapalan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது‌. எந்த ஒரு தோல்வியாக இருந்தாலும் சரி, அதை எதிர்த்துப் போராடி வெற்றி வாகையை சூடி விடுவீர்கள். அதற்கான மன தைரியம் உங்களிடத்தில் இருக்கும். சொந்த தொழிலிலிருந்து, செய்யும் வேலை வரை உங்கள் கால் தடத்தை பதிய வைப்பீர்கள். கமிஷன் பிசினஸ் செய்பவர்களுக்கு எதிர்பாராத நல்லது நடக்கும். கட்டுமான தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும். சில நேரங்களில் சில எதிர்பாராத சிக்கல்களில் சிக்கி கொள்வீர்கள். ஆனால் பெரியதாக பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு கிடையாது. வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். வீண்விரயம் ஏற்படும். இந்த வாரம் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிறைவான வருமானம் இருக்கும். நீண்ட நாட்களாக பிரச்சனை தந்து கொண்டிருக்கும் எல்லா விஷயங்களையும், ஒரு முடிவுக்கு கொண்டு வந்து விடுவீர்கள். சொந்த தொழிலில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு பெரிய முதலீட்டை செலுத்தி விடக்கூடாது. யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. முன்பின் தெரியாதவர்களுக்கு கடன் கொடுக்கக் கூடாது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்கள் வார்த்தைக்கு கூடுதல் மரியாதை கிடைக்கும். திருமணம் கைகூடி வரும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் தேவை. வீட்டில் இருப்பவர்களுடைய ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுங்கள். வெளிநாட்டு உத்தியோக கனவு நினைவாவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தினம்தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சி தரக்கூடிய வாரமாக தான் இருக்கப் போகின்றது. குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறைய தொடங்கும். கணவன் மனைவிக்குள் சந்தோஷம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களின் அறிவாற்றல் வெளிப்படும். திறமையாக செயல்பட்டு பாராட்டை பெறுவீர்கள். எக்காரணத்தைக் கொண்டும் அடுத்தவர்களுடைய பிரச்சனையில் தலையிடாதீங்க. அது உங்களுக்கு தலைவலியாக முடிந்து விடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூர் பயணங்கள் வெற்றிகரமாக முடியும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டு, நிதானமாக இருந்தால் எல்லாம் பிரச்சனைகளும் சீக்கிரத்தில் சரியாகிவிடும். பணம் சம்பந்தப்பட்ட பரிமாற்றத்திலும் கொஞ்சம் கவனம் தேவை. இந்த வாரம் 4, 5 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. ஜாக்கிரதை. தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
கடக ராசி காரர்களுக்கு இந்த வாரம் போராட்டமான வாழ்க்கையாக இருக்கப் போகிறது. தலைக்கு மேல் வேலை பளு அதிகமாக இருக்கும். எந்த வேலையை முதலில் செய்வது, எந்த வேலையை பிறகு செய்வது என்று கொஞ்சம் தடுமாறுவீர்கள். இருப்பினும் விடாமுயற்சி உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். எப்படியும் இந்த வாரம் சமாளித்து வெளிவந்து விடுவீர்கள். பயப்படாதீர்கள், கடவுள் உங்கள் பக்கம் இருக்கின்றான். உறவினர்களுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம். அநாவசிய வார்த்தைகளை பேச வேண்டாம். பக்குவமாக பேசுங்கள். சூதாட்டத்தில் ஈடுபட வேண்டாம். யாரை நம்பியும் புதிய முதலீட்டை செய்ய வேண்டாம். பணம் காசு விஷயத்தில் கவனம் தேவை. திருமண, சுப காரிய நிகழ்ச்சிகளை கொஞ்சம் தள்ளி போடுங்கள். இந்த வாரம் ஆறாம் தேதி உங்களுக்கு சந்திராஷ்டமம். பிள்ளையார் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாகத் தான் இருக்கப் போகின்றது. எவ்வளவுதான் கையில் காசு இருந்தாலும், செலவு அதிகமாகிக் கொண்டே இருக்கும். பணம் பத்தாது. வெளியூர் பயணங்கள் அலைச்சலை கொடுக்கும். செய்யும் தொழிலில் நல்ல லாபம் உண்டு. சின்ன சின்ன போட்டி பொறாமைகள் வந்தாலும் வெற்றி உங்களுக்கே. கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல வருமானம் இருக்கும். அரசாங்க வழியில் தடைபட்டிருந்த காரியங்கள் கைகூடிவரும். சொத்து சுகம் வாங்கக்கூடிய யோகம் உண்டு. சொந்த பந்தங்களுக்கு இடையே சின்ன சின்ன மனஸ்தாபம் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தினம்தோறும் முருகர் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தெளிவான வாரமாக இருக்கப் போகின்றது. வாழ்க்கையில் எது நல்லது எது கெட்டது என்ற அனுபவப் பூர்வமாக சில விஷயங்களை நீங்கள் எதிர்கொள்வீர்கள். அனுபவம் தான் சிறந்த பாடம் என்பதை புரிந்து கொண்டு, இனி வரக்கூடிய வாழ்க்கையை வழிநடத்திச் செல்வீர்கள். எல்லா விஷயத்திலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்களை சுற்றி இருப்பவர்களை நம்பவே கூடாது. குறிப்பாக உங்கள் முன்னால், உங்களை புகழ்ந்து பேசுபவர்களை நம்பாதீர்கள். வரக்கூடிய எல்லா பிரச்சனைகளையும் சரி செய்யும் அளவிற்கு உங்களுக்கு பக்குவம் திறமை இருக்கும்‌. பயப்படாதீங்க தினமும் குலதெய்வ வழிபாடு செய்யுங்க நன்மையே நடக்கும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. இந்த வாரம் முழுவதும் கொஞ்சம் உஷாராக இருந்துக்கோங்க. உங்களுடைய பொருட்கள் திருட்டுப் போகும். நல்ல பெயர் கெட்டுப் போகும். நீங்கள் நல்லதே செய்தாலும் அதனால் உங்களுக்கு பாராட்டு கிடைக்காது. அதைவிட நீங்கள் செய்யாத குற்றத்துக்கு உண்டான பழியை சுமக்க வேண்டிய சூழ்நிலை கூட உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ரொம்ப ரொம்ப கவனம் தேவை. வீட்டில் சமைக்கும் பெண்களில் இருந்து, வண்டி ஓட்டி செல்லும் ஆண்கள் பெண்கள் வரை எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும். சின்ன சின்ன விபத்து ஏற்படுவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் சில சிக்கல்கள் உண்டாகும். புதிய வேலை கிடைப்பதில் தாமதம் இருக்கும். மனதிற்குள் ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருங்கள் எல்லாம் சரியாகிவிடும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. வருமானம் அதிகரிக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். சம்பள உயர்வு மனதிருப்தியை கொடுக்கும். பண்டிகைகளை கொண்டாடும் அளவிற்கு கையில் தேவையான பணம் காசு இருக்கும். சுபகாரிய நிகழ்ச்சிகளை இரண்டு வாரம் தள்ளிப் போடுவது நல்லது. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீங்க. பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு சுப காரிய தேதியை முடிவு செய்யுங்கள். நல்ல ஜோசியரை பார்ப்பது பிரச்சனைகள் வராமல் இருக்கும். குழந்தைகள் பெற்றவர்களுக்கு பெருமையை சேர்ப்பார்கள். எதிரி தொல்லை குறையும். துணிச்சல் அதிகரிக்கும். தினம்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் இந்த வாரம் வெற்றி தான். பாராட்டும் புகழும் குவிய போகின்றது. சந்தோஷத்தில் மனம் நிறைந்திருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குதூகலம் அதிகரிக்கும். குடும்பத்தோடு வெளியூர் பயணங்கள் செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். எதிர்பாராத ஒரு தொகையை கையை வந்து சேரும். வீட்டிற்கு ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு சீக்கிரம் நல்ல செய்தி வந்து சேரும். எல்லாம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று நன்றி தெரிவித்து, வழிபாடு செய்வது மேலும் நன்மைகளை கொடுக்கும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகப் போகின்றது. குறிப்பாக சொந்த பந்தங்கள் உங்களை புரிந்து கொள்ளாமல் பேசுவார்கள். நீங்களும் பதிலுக்கு பேசி வாக்குவாதம் ஏற்படும். சில எதிரிகள் கூட புதியதாக வரலாம். மற்றபடி வியாபாரம் எப்போதும் போல சீராக நடக்கும். வேலை செய்யும் இடத்தில் வழக்கம் போல உங்களுடைய வேலையை செய்து முடிப்பீர்கள். புதிய முதலீட்டில் மட்டும் கொஞ்சம் கவனம் தேவை. நீண்ட தூர பயணம் கொஞ்சம் அலைச்சலை கொடுக்கும். இருப்பினும் எல்லாத்தையும் நீங்கள் சமாளித்துக் கொள்வீர்கள். தெரியாத மூன்றாவது மனிதர்களுக்கு உதவி செய்வதாக நினைத்து எந்த சிக்கலிலும் போய் மாட்டிக் கொள்ளாதீர்கள். கண்ணுக்கு முன்னே அநியாயம் நடந்தால் கூட உங்கள் கண்களை மூடிக்கொள்ளுங்கள். தினம் தோறும் அஷ்டலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் மன கஷ்டம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே சண்டை, நெருங்கிய நண்பர்களோடு சண்டை, என்று இப்படி பிடித்தவர்களே உங்களுடைய மனதை காயப்படுத்தி விடுவார்கள். வேதனையை வெளியில் சொல்ல முடியாமல், உள்ளே முழுங்கவும் முடியாமல் சில நேரங்களில் திக்குமுக்கு ஆடச் செய்யும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். அலைபாய விடாதீர்கள். மற்றபடி எல்லாம் உங்களுக்கு நன்மை தரக்கூடிய விஷயங்கள் தான் நடக்கும். சொத்து சுகம் வாங்க கூடிய யோகம் இருக்கிறது. வீட்டை அலங்கரித்து பார்க்கக் கூடிய ஆர்வம் மேம்படும். புதிய துணிமணிகள் வாங்கக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும். அதேசமயம் சேமிப்பும் கையில் இருந்து கரையும். அத்தியாவசிய தேவைக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். கூடுமானவரை செலவை குறைத்துக் கொள்ளுங்கள். தினம் தோறும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிக மிக அவசியம் தேவை சிக்கனம். வரவுக்கு ஏற்ற செலவு இருக்க வேண்டும். ஆடம்பர செலவை குறைத்துக் கொள்ளுங்கள். அனாவசிய செலவு செய்யாதீங்க. ஏற்கனவே வருமானத்தில் பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கும் நீங்கள், மேலும் பல பண பிரச்சினைகளில் மாட்டிக் கொள்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதிக வட்டிக்கு கைநீட்டி கடன் வாங்கவே வாங்காதீங்க. செய்யும் தொழில் கொஞ்சம் சுமாராகத்தான் செல்லும். வேலை செய்யும் இடத்தில் மேல் அதிகாரிகளின் பிரஷர் தாங்க முடியாது. ஆனாலும் வேறு வழி இல்லை மேனேஜர் சொல்வதைக் கேட்டு நடக்கத்தான் வேண்டும். வேலையை விடக்கூடாது. புதிய வேலை கிடைப்பது குதிரை கொம்பு. கணவன் மனைவி கடையே இருந்து வந்த சண்டை சச்சரவு நீங்கி, நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களின் வருகை மணமகிழ்ச்சியை கொடுக்கும். தினமும் சிவன் வழிபாடு நன்மையை தரும்.

- Advertisement -