இந்த வார ராசிபலன் 21-09-2020 முதல் 27-09-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் கவனமாக செயல்பட வேண்டியது அவசியம். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அனாவசிய பேச்சுக்களை, தவிர்க்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும், அடுத்தவர்களுடைய பிரச்சனையில் தலையிட கூடாது. யாரை நம்பியும் யாருக்கும் வாக்கு கொடுத்து விடாதீர்கள். ஜாமீன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடவேண்டாம். பணபரி மாற்றங்களில் கவனத்தோடு இருக்க வேண்டும். வீட்டில் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும், சுபகாரியப் பேச்சுக்கள் தொடங்குவதன் மூலம் மனதுக்கு நிம்மதி கிடைக்கும். தினம் தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அற்புதமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. இதுநாள் வரை இருந்து வந்த மனக் கஷ்டம் நீங்கி, நிம்மதி பிறக்கும். கடன் தொல்லை நீங்கி, வருமானம் அதிகரிக்கப் போகின்றது. அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சொந்தத் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. முடிந்தவரை வெளியூர் பயணங்களை மட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள். தவிர்க்க முடியாத பயணமாக இருந்தால், மாஸ்க் அணியாமல், சானிடைசர் எடுத்து கொள்ளாமல் பயணம் செல்ல வேண்டாம். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தினந்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பார்க்காத நல்ல சம்பவங்கள் நிறையவே நடக்கப்போகின்றது. சந்தோஷத்தில் திக்கு முக்காட செய்வீர்கள். எந்த சூழ்நிலையிலும் நிதானத்தை இழக்க வேண்டாம். குலதெய்வ வழிபாட்டை குடும்பத்தோடு செய்வது நல்லது. மற்றபடி இந்த வாரம் முழுவதும் நீங்கள் தொட்டது அனைத்துமே வெற்றி அடையும் என்பதில் சந்தேகமே கிடையாது. முடிந்த வரை குடும்ப பிரச்சனைகளை மூன்றாவது நபரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. வழக்கத்தைவிட, உடல் ஆரோக்கியத்தில் சற்று அதிக அக்கறை காட்ட வேண்டும். தினந்தோறும் சூரிய நமஸ்காரம் செய்யும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் லாபகரமான வாரமாக அமையப்போகின்றது. தொழிலில் எதிர்பாராத வருமானம் வரப்போகின்றது. அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்க்காத பதவி உயர்வோடு சேர்ந்த, சம்பள உயர்வும் உங்களைத் தேடிவரும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கலாம். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. எத்தனை வெற்றிகள் வந்தாலும், நிதானத்தோடு செயல்படுவது நல்லது. தலைக்கனத்தை மட்டும் உயர்த்திக் கொள்ளாதீர்கள். தினம்தோறும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணவரவு அதிகரித்தாலும், அதற்கேற்ற சுபச்செலவுகள் வரிசையாக வந்து கொண்டே இருக்கும். வீட்டில் விசேஷங்கள், உறவினர்களின் வருகை இருக்கும். செலவு என்றால், விரைய செலவு கட்டாயம் இருக்காது. சிலபேருக்கு பூர்வீக சொத்தில் இருந்து பங்கு பாகம் தீர்க்கப்பட்டு, சொத்துக்கள் வரலாம். அரசாங்க ரீதியான பிரச்சினைகள் இந்த வாரம் ஒரு முடிவுக்கு வந்துவிடும். எல்லாம் நன்மையாகவே நடந்தாலும், உங்களை யாராவது ஒருவர் ஏமாற்ற வாய்ப்பு உள்ளது. யாரை நம்பியும் பணத்தை கொடுத்து ஏமாறாதீர்கள். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகம் தரும் வாரமாக அமைந்தாலும், சில பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். அலுவலகத்தில் நீங்கள் செய்த வேலைக்கு, வேறு ஒருவர் நல்ல பெயரை தட்டிச் சென்று விடுவார்கள். சொந்த தொழிலில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். இருப்பினும் அதையும் தாண்டி வெற்றி அடைய வேண்டும் என்ற, உங்களது மன உறுதியும், உற்சாகமான செயல்பாடும், பிரச்சினைகளில் இருந்து உங்களை வெளிக்கொண்டு வந்து விடும். மன தைரியத்தோடு செயல்படுங்கள். தன்னம்பிக்கையோடு செயல்படுங்கள். நேர்மையோடு செயல்படுங்கள். எல்லாம் உங்களுக்கு சாதகமாக அமையும். தினம் தோறும் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் யோகம் தரும் வாரமாக தான் இருக்கப் போகின்றது. குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். குடும்பத் தலைவருக்கு வருமானம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை மனைவிக்கு வாங்கி கொடுத்து சந்தோஷப்படுவார். அலுவலகப் பணிகளில் இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்து வேலை செய்வது நன்மை தரும். சொந்தத் தொழிலில் யாரை நம்பியும் முதலீட்டு பணத்தை செலுத்த வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வருமானத்தில் எந்த பிரச்சினையும் இருக்காது. இருப்பினும் பண பரிமாற்றத்தில் கவனம் தேவை. தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமான வாரமாக இருக்கப் போகின்றது. உங்களைப்பற்றி தவறாக பேசியவர்கள் எல்லோரும், உங்களின் அருமை பெருமைகளை தெரிந்துகொண்டு, வந்து மன்னிப்பு கேட்கும் அளவிற்கு நிலைமை மாறப்போகின்றது. இருப்பினும் நிலைமையை புரிந்துகொண்டு, நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டியது உங்கள் கையில்தான் உள்ளது. அலுவலகப் பணியில் இருந்து வந்த பிரச்சினைகளுக்கெல்லாம் விடிவு காலம் பிறக்கப் போகின்றது. சொந்த தொழிலில் நல்ல லாபம் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று அக்கறை தேவை. பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். தினம்தோறும் ஹனுமன் வழிபாடு நன்மையை தரும்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு நினைத்த காரியம் வெற்றி தரும் வாரமாக தான் அமையப்போகின்றது. எவ்வளவுதான் வேலை இருந்தாலும், வேலை வேலைக்கு சாப்பிடும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை வீட்டு உணவையே சாப்பிட்டு வாருங்கள். வெளியிடங்களுக்கு அனாவசியமாக செல்வதை தவிர்த்துக் கொள்வது நல்லது. அலுவலகப் பணியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நல்ல பெயர் வாங்குவீர்கள். சொந்தத் தொழிலை விரிவு படுத்தலாம். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் தொடங்கலாம் மாணவர்களுக்கும் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நல்ல வருமானம் இருக்கும். அனாவசிய செலவை குறைத்துக் கொண்டு சேமிப்பது நல்லது தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்களுக்கு மன உறுதி அதிகரிக்கும். இத்தனை நாட்களாக செய்யலாமா? வேண்டாமா? என்று சிந்தித்துக் கொண்டிருந்த ஒரு செயலை தொடங்கி அதில் வெற்றியும் அடையப் போகிறீர்கள். சொந்தத் தொழிலை விரிவுபடுத்த வங்கிக் கடன் கிடைக்கும். வங்கியில் மட்டுமே கடன் வாங்குங்கள். வெளியிடங்களில் அதிக வட்டிக்கு கடன் வாங்குவதை தவிர்த்து கொள்வது நல்லது. சொத்துக்களை அடமானம் வைக்க வேண்டாம். புதிய சொத்துக்கள் வாங்குவதாக இருந்தால் கவனத்தோடு செயல்படுங்கள். கைமாத்தாக கூட நண்பர்களிடமிருந்து காசு வாங்காதீங்க! இந்த வாரம் முழுவதும் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உஷார். தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்கள் இந்த வாரம் கவனத்தோடு இருக்க வேண்டும். எந்த ஒரு செயல்பாட்டிலும் சிந்திக்காமல் காலை வைத்து விடாதீர்கள். பின் விளைவுகள் மிக அதிகமாக இருக்கும். பொறுமையும் நிதானமும் மட்டும் தான் உங்களுக்கு கை கொடுக்கும். மற்றபடி குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். வருமானத்தில் சின்ன சின்ன பிரச்சினை இருந்தாலும், அதை சமாளித்து விடுவீர்கள். அனாவசிய செலவை குறைத்துக் கொள்ளுங்கள். வீண் வம்புக்கு செல்ல வேண்டாம். அலுவலக பணியிலும் சரி, சொந்தத் தொழிலில் அனுசரி, அனுசரித்து சென்றால் உங்களுக்கே ஜெயம். பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு அவ்வப்போது சின்னச் சின்னப் பிரச்சினைகள் வரத்தான் செய்யும். இருப்பினும், அந்த பிரச்சனைகளை சமாளிக்கும் அளவிற்கு உங்களுக்கு மன தைரியம் இருக்கும். அனாவசிய பேச்சுகளை குறைத்துக் கொள்ளுங்கள். வேலையில் பிரச்சினை இருந்தாலும், அதை எதிர்கொண்டு அதே வேளையில் இருப்பதுதான் நல்லது. இருக்கும் சூழ்நிலையில், புதிய வேலை கிடைப்பது குதிரைக்கொம்பு. கோபத்தைக் குறைத்துக் கொண்டால் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். முருகன் வழிபாடு நன்மை தரும்.