இந்த வார ராசிபலன் 25/09/2023 முதல் 01/10/2023 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

vara rasipalan sep25 oct01
- Advertisement -

மேஷம்

இந்த வாரம் பொருளாதாரம் சிறப்பாக இருக்கக்கூடிய வாரமாக திகழப்போகிறது. வருமானம் நன்றாக இருக்கும். அதே சமயம் வீண் செலவுகளும் ஏற்படாது. கணவன் மனைவிக்குள் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அது விரைவிலேயே மறைந்துவிடும். இருப்பினும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மை பயக்கும். ஆரோக்கியமான வாரமாகவே திகழும், இருந்தாலும் சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

வண்டி, வாகனங்களில் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். ஆன்மீகத்தில் எண்ணம் அதிகரிக்கும். குடும்பத்தில் எதிர்பாராத அதிர்ஷ்டம் தேடி வரும். புதிய நபர்களுடன் பழகும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் லாபம் எப்போதும் போல் இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அண்ணன் தம்பியான விநாயகர் முருகரை வழிபட வேண்டும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஆதரவு கிடைக்கும் வாரமாக திகழப்போகிறது. கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சுப காரியங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கும். பயணங்களால் சாதகமான பலன் ஏற்படும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி செய்வீர்கள். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

மூன்றாவது நபரின் தலையீடை தவிர்ப்பது நல்லது. இருப்பினும் அக்கம் பக்கத்தினரிடம் அனுசரணையாக நடந்து கொள்வது நன்மை பயக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும். ஆதலால் நீங்கள் விரும்பிய சலுகைகளை பெறுவீர்கள். நிர்வாகத்திடம் பாராட்டை பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அதனால் வளர்ச்சியும் அதிகரிக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முயற்சிகள் வெற்றி அடையும் வாரமாக திகழப்போகிறது. உங்களை எதிரியாக நினைத்தவர்கள் விலகிச் செல்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பிறரிடம் பேசும் பொழுது பொறுமையாக பேச வேண்டும். குடும்ப விஷயத்தை வெளியில் யாரிடமும் பகிர்ந்து கொள்வது பிரச்சினையை உண்டாக்கும்.

கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம். அலுவலகப் பணியில் கூடுதல் கவனம் தேவை. உடன் பணிபுரிபவர்களுடன் எச்சரிக்கையாக இருப்பது பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க உதவும். வியாபாரத்தில் நினைத்த லாபத்தை அடைய கூடுதலாக உழைக்க வேண்டியதாக இருக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ராமபிரானையும் அவரின் பக்தரான ஆஞ்சநேயரையும் வழிபட வேண்டும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும் வாரமாக திகழப்போகிறது. கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். எந்த காரியத்திலும் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காமல் இருப்பது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் அதிகரித்தாலும் அதற்கேற்ற பணவரவு ஏற்படும். பயணங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அலுவலகத்தில் உற்சாகம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இருப்பினும் தானாக எந்த முடிவையும் எடுத்து செயல்படுத்தாமல் உடன் இருப்பவர்களிடம் ஆலோசனை பெற்று வியாபாரத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும். மேலும் இந்த வாரம் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு வராகி தாயாரையும், முருகப்பெருமானையும் வழிபட வேண்டும்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பண வரவு அதிகரிக்கும் வாரமாக திகழப்போகிறது. எவ்வளவுதான் பணம் வரவு வந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் ஏற்படும். ஆனால் அந்த செலவுகள் வீண் செலவுகளாக இருக்காது. கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். மனம் மகிழும் படியான சம்பவங்கள் நடைபெறும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.

வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. பணி சுமை சற்று கூடுதலாகவே இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. மேலும் மறைமுகப் போட்டியாளர்களை சமாளிக்கும் திறன் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவாக்கும் முயற்சியையும் மேற்கொள்வீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சூரிய பகவானையும் சிவபெருமானையும் வழிபட வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியான வாரமாக திகழப்போகிறது. குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். மதிப்பும், மரியாதையும் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. வாழ்க்கைத் தரம் உயர வாய்ப்பு அதிகமாக தென்படுகிறது. நீண்ட நாட்களாக இருந்து வந்த காரிய தடைகள் அனைத்தும் நீங்கி நல்ல விதமாக நடைபெறும்.

வேலையில் இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்கும். பணி சுமை அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த வெளியில் இருந்து கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பிகையையும், கால பைரவரையும் வழிபட வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்ப்புகளை தைரியமாக சமாளிக்கும் வாரமாக திகழப்போகிறது. பணவரவு வந்தாலும் செலவுகள் அதிகமாக இருப்பதால் சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை கூட ஏற்படும். எதிர்பார்த்த விஷயங்கள் நடக்க தாமதமாகும். ஒரு விஷயத்தில் முடிவெடுப்பதற்கு முன்பாக பிறரிடம் ஆலோசனை கேட்டு முடிவு எடுக்க வேண்டும்.

புதிய வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. அலுவலகத்தில் சாதகமான சூழ்நிலை ஏற்படும் என்பதால் விரும்பிய சலுகைகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. புதிய முயற்சிகளை மேற்கொள்வதையும், முதலீடுகள் செய்வதையும் சிறிது காலம் தள்ளி வைப்பது நன்மை பயக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் மிகுந்த வாரமாக திகழப்போகிறது. எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். அதனால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு பல திட்டங்களை செயல்படுத்துவீர்கள். பொருளாதார வசதிக்கு எந்தவித குறையும் இருக்காது. செலவுகள் ஏற்பட்டாலும் அதை சமாளித்து விடுவீர்கள். நண்பர்களிடம் கவனமாக பழகுவது நன்மை பயக்கும். தேவையற்ற வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.

மன குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை ஏற்படும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். அலுவலகத்தில் வேலை சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைத்து உற்சாகமாக செயல்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மை பயக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியையும், துர்க்கை அம்மனையும் வழிபட வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல செய்தி வந்து சேரக்கூடிய வாரமாக திகழப் போகிறது. தேவையற்ற இடங்களில் பேசுவதை தவிர்த்துக் கொள்வதன் மூலம் பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொள்ள முடியும். வீடு வாகனம் போன்றவற்றில் கூடுதல் கவனம் தேவை. சேமித்து வைத்த பணம் குறைய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஒரு சிலருக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்படலாம். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருந்தால் எதிர்ப்புகளை தவிர்த்துக் கொள்ள முடியும்.

கணவன் மனைவி விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து விலகி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும். சிலருக்கு திடீர் பணவரவு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. அலுவலகத்தில் வேலை சுமை அதிகரிக்கும். புதிதாக வேறு வேலைக்கு முயற்சிப்பதை தவிர்க்க வேண்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சிகள் வெற்றி அடையும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பேச்சாற்றலால் எல்லா வேலைகளையும் சுமூகமாக மாற்றிக் கொள்வீர்கள். இருப்பினும் யாருக்கும் எந்தவித வாக்குறுதியையும் தரக்கூடாது. அதனால் பிரச்சனைகள் ஏற்படும். பணவரவு சுமாரான நிலையில் இருக்கும். வெளியில் செல்லும் பொழுது கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். செலவுக்கேற்ற வரவு ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

அலுவலகத்தில் உற்சாகமாக செயல்படுவீர்கள். சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தை விரிவு படுத்துவதற்கான சாதகமான சூழ்நிலை ஏற்படும். சுமாரான லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு திருப்பதி வெங்கடாசலபதியை வழிபட வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிந்தித்து செயல்பட வேண்டிய வாரமாக திகழப் போகிறது. முக்கியமான முடிவுகள் எதுவும் எடுப்பதை சிறிது காலம் தள்ளி வைப்பது நன்மை பயக்கும். சிலருக்கு உறவினர்கள் உதவியாய் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. நண்பர்கள் எப்போதும் ஆதரவாக இருப்பார்கள். மன சங்கடம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால், மன அழுத்தம் ஏற்படாது அளவிற்கு மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். மூத்தோர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பதன் மூலம் நன்மைகள் உண்டாகும்.

கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். தொழில் மேன்மை அடைய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. லாபம் திருப்திகரமாக இருக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பெண் தெய்வத்தை வழிபட வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திறமையை வெளிப்படுத்தக்கூடிய வாரமாக திகழப் போகிறது. பணவரவு திருப்திகரமாக இருக்கும். சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் உடனே சரியாகிவிடும். அனுபவ அறிவை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் ஏற்படும். நினைத்த செயல்களை நினைத்தபடி எளிதில் முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. பணத் தொடர்பான விஷயங்கள் திருப்திகரமாக இருக்கும்.

உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சிறந்த காலமாக இந்த காலம் இருக்கும். வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். புதிதாக முதலீடு செய்வதற்கு முன்பு ஒரு முறைக்கு நான்கு முறை நன்றாக யோசித்து பிறரின் ஆலோசனை பெற்று முதலீடு செய்ய வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு நவகிரகங்களில் இருக்கும் குரு பகவானை வழிபட வேண்டும்.

- Advertisement -