இந்த வார ராசிபலன் 18/09/2023 முதல் 24/09/2023 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

sep 18-24
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உயர்வு கிடைக்கக்கூடிய வாரமாக திகழப்போகிறது. உடல் நலனில் இருந்த பாதிப்புகள் குறையும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவுடன் சில சலுகைகளை அனுபவிப்பீர்கள். போதுமான அளவு பண வரவு ஏற்பட்டாலும், திடீர் செலவுகளால் சிலர் சிரமத்திற்கு ஆளாவார்கள். அலுவலகத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு, இட மாறுதல் போன்றவற்றில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும். தொழில் எதிர்பார்த்தபடி லாபகரமாக நடக்கும். பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவற்றை சாமர்த்தியமாக சமாளித்து வெளியில் வருவீர்கள். கூட்டாளிகளிடம் இருந்த பிரச்சனைகளை பேசி தீர்த்து ஒரு முடிவுக்கு வந்து விடுவீர்கள். ஆபரணங்கள் வாங்குவதில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். குடும்பத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை மூன்றாவது நபரிடம் கூறுவதை தவிர்க்க வேண்டும். ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு ஒரு முறைக்கு மூன்று முறை நன்றாக யோசித்து உடன் இருப்பவர்களுடன் ஆலோசனை பெற்று முடிவெடுத்தால் குழப்பங்கள் ஏற்படாது. உடன் இருப்பவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புதிய தொடர்புகளால் லாபம் பெறும் வாரமாக திகழப் போகிறது. வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், கௌரவத்தையும் அடைவீர்கள். எதிர்பாராத பணவரவு ஏற்பட்டு மனதில் மகிழ்ச்சி ஏற்படும். ஆனால் எதிர்பார்த்த பண வரவிற்கு தாமதம் ஏற்படும். குடும்பத்தில் திட்டமிட்டபடி சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் மறைந்து மகிழ்ச்சி ஏற்படும். கடன்கள் வாங்குவதில் கவனமாக இருப்பது நல்லது. முடிந்த அளவு கடன்கள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் பணி சுமை அதிகமாக இருக்கும். தொழில் ரீதியாக வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உடன் பணி புரிபவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். தடைப்பட்டு நின்ற சுபகாரியங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. புதிய வியாபார தொடர்புகள் மூலம் லாபம் அதிகரிக்கும். சிலருக்கு மேல் மட்டத்தில் உள்ள முக்கிய நபர்களின் உதவியால் எடுத்த காரியங்கள் வெற்றி அடையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்க கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு வள்ளி தேவையான சமேத முருகப் பெருமானை வழிபட வேண்டும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணப்புழக்கம் அதிகரிக்கும் வாரமாக திகழப்போகிறது. எதிர்பாராத பண வரவிற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதனால் உங்களுடைய பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள். திருமண ஆசைகள் நிறைவேறும் வாரமாக திகளப் போகிறது. வேலை விஷயத்தில் எதிர்பார்த்த தகவல் விரைவில் வந்து சேரும். அலுவலகத்தில் அடுத்தவர்களின் விஷயத்தில் மூக்கை நுழைப்பதை தவிர்க்க வேண்டும். உடன் பணியாற்றுபவர்களிடம் பேசும் பொழுது பொறுமையை கடைப்பிடிப்பது மிகவும் நன்மை பயக்கும். தொழிலை மேலும் விரிவாக்க என்ன செய்யலாம் என்று யோசிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பழைய நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியும், ஆறுதலும் பெருகக்கூடிய வாரமாக திகழப் போகிறது. வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்து சமாதானமாக நடந்து கொண்டால் நன்மை ஏற்படும். தேவையற்ற செலவுகளை தவித்தால் கடன் வாங்கும் பிரச்சினையில் இருந்து வெளியில் வரலாம். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கக் கூடிய வாரமாக திகழப்போகிறது. முயற்சியோடு ஈடுபட்டால் முன்னேற்றங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் வேலை செய்யும் பொழுது கவனம் தேவை. சிறிய தவறுகளும் பெரிதாக கூடிய வாய்ப்பு இருக்கிறது. சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். தொழிலில் முன்னேற்றமும் பொருள் வரவும் உண்டாகும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி நடைபெற வாய்ப்பு இருக்கிறது. குழந்தை பாக்கியம் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அந்தஸ்தை உயர்த்தி காட்டுவதற்காக வீண் செலவுகளை செய்வீர்கள். தேவையற்ற கோபத்தை குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்கள் குறையும். சொந்த பந்தங்களின் வரவால் உற்சாகம் பொங்கும். புதிய நண்பர்களால் நன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் வேலை பளு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. போதுமான அளவு வருமானம் பெறுவதற்கே கூடுதலாக முயற்சியும், உழைப்பும் தேவைப்படும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஞாயிற்றுக்கிழமை விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டி வணங்க வேண்டும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புதிதாக பொருட்களை வாங்கி சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும் வாரமாக திகழப்போகிறது. அதற்கேற்ற போல் புதிய வீடு கட்டும் முயற்சியிலும், வாகனங்கள் வாங்கும் முயற்சிகளிலும் வெற்றி அடைவீர்கள். செய்யும் செயல்களில் முன்னேற்றமான பலன்களை பெறுவீர்கள். எதிர்பார்த்த நல்ல தகவலால் மகிழ்ச்சி ஏற்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக நடைபெறும். எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அது உடனே சரியாகிவிடும். அலுவலகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். உடன் பணிபுரிவுகளுடன் அனுசரித்து நடந்து கொள்வது நன்மை பயக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றமும், சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அலுவலகத்தில் எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஜாமீன் கையெழுத்து போடுவதை அறவே தவிர்த்து விட வேண்டும். பழைய கடன்களை அடைக்க எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் இடமாற்றம் செய்ய நினைப்பவர்கள் இந்த வாரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக அமைவதற்கு செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு செவ்வரளி மாலை அணிவித்து வழிபட வேண்டும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குழப்பங்களை சந்திக்கும் வாரமாக திகழப்போகிறது. வெளிநாட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அனுசரித்து செல்வது நன்மை பயக்கும். தெய்வ தரிசனத்தால் மனதில் அமைதி நிலவும். பணத்தை சம்பாதிப்பதற்கும், சேமித்து வைப்பதற்கும் உரிய சிந்தனைகள் மேலோங்கும். தம்பதிகளுக்கு இடையே அன்னோனியம் அதிகரிக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. புதிய பொறுப்புகள் வந்து சேரும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. வியாபாரத்தில் லாபம் குறைவாக தான் இருக்கும். புதிய வியாபார முயற்சிகளால் வாழ்க்கையில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இருக்கும். திருமணம் முயற்சிகள் கைகூடும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வருமானம் அதிகரிக்க கூடிய வாரமாக திகழப்போகிறது. எதிர்கால வாழ்க்கைக்காக சில திட்டங்களை தீட்டி அதை செயல்படுத்துவீர்கள். சேமிப்பு உயரும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடல் நலனில் அக்கறை தேவை. உடன் பழகுபவர்களுடன் எச்சரிக்கையுடன் பழகினால் அவ பெயர்கள் வருவதை தடுத்துக் கொள்ளலாம். அவசரப்பட்டு யாருக்கும் வாக்குறுதிகள் தருவதை தவிர்த்து விட வேண்டும். தொழிலில் புதிய வாய்ப்புகள் ஏற்படலாம். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் உங்கள் திறமை வெளிப்படும். அதனால் பதவி உயர்வு உங்களைத் தேடி வரும். உடன் இருப்பவர்களுடன் எச்சரிக்கையாக இருப்பது நன்மை பயக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பது கடினமே, எனினும் விடாமுயற்சியுடன் பொறுமையாக வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நன்மை பயக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பெருமாலை வழிபட வேண்டும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முயற்சித்து முன்னேற்றம் காண போகும் வாரமாக திகழப் போகிறது. உறவினர்களுடன் மனவருத்தம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பொறுமையாக நடந்து கொண்டால் நன்மை உண்டாகும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை இந்த வாரம் தவிப்பது நல்லது. வியாபாரம் தொடர்பாக வெளியூர் பயணம் செல்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தேவையற்ற திடீரென்று முளைக்கும் உறவுகளால் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. கொடுக்கும் பொறுப்புகளை கவனத்துடன் செயல்படுத்த வேண்டும். வெளிப்படையாக பேசுவதால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் லாபம் ஏற்படுவதற்கு அதிகமாக உழைக்க வேண்டும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். தேவைப்படும் சலுகைகளை எதிர்பார்க்காமல் பணியாற்றினால் பிரச்சனை ஏற்படாது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு நெய் தீபம் ஏற்ற வேண்டும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகம் மிகுந்த வாரமாக திகழப்போகிறது. நினைத்த காரியம் நினைத்த நேரத்தில் தானாக நடைபெறும் வாய்ப்பு உள்ளது. வரவேற்கேற்ற செலவு வரும். வீட்டு செலவிற்காக கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும். தேவையற்ற செலவுகளை தவிர்த்துக் கொள்வது நன்மை பயக்கும். தேவையில்லாத இடத்தில் பேசுவதை தவிர்ப்பது சிக்கல்களை ஏற்படாமல் பாதுகாக்கும். அலுவலகத்தில் பொறுப்புகளில் கவனம் தேவை. இதுவரை இருந்து வந்த வேலை நெருக்கடி சற்று குறையும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். கஷ்டப்பட்டு உழைத்தாலும் தொழிலில் நல்ல பெயர் கிடைக்க வாய்ப்பு இருக்காது. உடன் இருப்பவர்களை அனுசரித்து சென்றால் மட்டுமே தான் வியாபாரத்தில் வளர்ச்சி காண முடியும். விற்பனை வழக்கம் போல் இருந்தாலும் லாபம் ஈட்டுவது கடினமாக இருக்கும். உடன் இருப்பவர்களிடம் இருந்து மறைமுகமாக இடையூறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு புதன்கிழமை புதன் பகவானுக்கு நெய் தீபம் ஏற்று வழிபட வேண்டும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கக் கூடிய வாரமாக திகழப்போகிறது. வரவே வராது என்ற நினைத்த கடன் தொகையும் திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தம்பதிகள் அனுசரித்து செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். தடைகள் ஏற்பட்டாலும் அதை சமாளித்து வெளியில் வந்து விடுவீர்கள். மனதில் இனம் புரியாத தடுமாற்றம் ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை. வெளியூர் பயணம் மேற்கொள்ளும் பொழுது அருகில் இருப்பவர்களிடம் ஜாக்கிரதையாக இருந்தால் பொருட்களை தக்க வைத்துக் கொள்ள முடியும். வேலை பளு அதிகமாக இருக்கும். இருப்பினும் அந்த வேலைகளை செய்து முடிப்பதால் பல ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. உடன் பணிபுரிபவர்களிடம் சொந்த விஷயங்களை தலையிடுவதை தவிர்த்து விட வேண்டும். கவனமாகவும் நிதானமாகவும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது என்றாலும் திருப்திகரமான லாபம் இருக்கும். வியாபார விரிவாக்கத்திற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மனுக்கு சிவப்பு நிற மலர்களால் மாலைகள் சூட்டி வழிபட வேண்டும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிரமம் மிகுந்த வாரமாக திகழப் போகிறது. முயற்சி செய்யும் காரியங்களில் தொல்லைகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. இரவு பகல் பாராமல் உழைத்தாலும் அதற்குரிய பலன் கிடைப்பது கடினமாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகள் இடையூறுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. தடைகளை கண்டு தளர்ந்து விடாமல் முயற்சித்தால் வெற்றிகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணவரவு தாமதமாகவே கிடைக்கும். அதனால் எடுக்கும் முயற்சிகளும் தாமதமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். உடன் இருப்பவர்களுடன் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் நன்மை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதால் தடைபற்ற காரியங்கள் நடைபெறும். பணிபுரியும் இடத்தில் கவனமாக பணியாற்றுவதன் மூலம் உயர் அதிகாரிகளின் கோபத்தில் இருந்து தப்பிக்கலாம். எந்தவித சலுகைகளையும் எதிர்பார்க்காமல் பணியாற்றினால் மன வருத்தம் ஏற்படாது. வியாபாரத்தில் கடுமையாக உழைக்க வேண்டும். உடன் இருப்பவர்களுடன் பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலையே நிலவும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு செவ்வாய்க்கிழமை முருகனுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உறவினர்களால் பாராட்டு பெறக்கூடிய வாரமாக திகழப்போகிறது. இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகள் அனைத்தும் மறையும். இருப்பினும் கடன் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணவரவு ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. மனதில் சோர்வும் தளர்ச்சியும் ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கலாம். அவர்கள் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் இருக்கும். இதுவரை வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். தொழிலில் முதலீடு செய்வதற்கு முன்பாக ஒரு முறைக்கு பலமுறை யோசித்து முதலீடு செய்ய வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு வியாழக்கிழமை குரு பகவானுக்கு கொண்டக்கடலை மாலை போட்டு வழிபட வேண்டும்.

- Advertisement -