இந்த வார ராசிபலன் 5/9/2022 முதல் 11/9/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

vara-palan2
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாகத் தான் இருக்கப் போகின்றது. எந்த விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது. பொறுமையுடன் இருக்க வேண்டும். பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு நடக்க வேண்டும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். மருத்துவ செலவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் இருக்கும் பெண்கள் தினமும் குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும். உங்கள் குடும்ப பிரச்சனையை அனாவசியமாக வெளி நபரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் வேலை பளு அதிகமாக இருக்கும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரம் நல்லபடியாக நடக்கும். தினம் தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன நிறைவு தரக்கூடிய வாரமாகத்தான் இருக்கப் போகின்றது. வருமானத்தில் உயர்வு இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டில் இருப்பவர்களுடைய ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற மருத்துவ செலவு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சொந்த தொழிலில் புதிய முயற்சிகளை எடுக்க வேண்டாம். செய்யும் வேலையை தொடர்ந்து செய்து வந்தால் எந்த பிரச்சனையும் கிடையாது. வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கும். தினம் தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும். இந்த வாரம் 5, 6 தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் வீண் விரயம் ஏற்படும். கையில் இருக்கும் சேமிப்பு கரையும். கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன வாக்குவாதம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆகவே ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. வாக்குவாதம் செய்ய வேண்டாம். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய புதிய முயற்சிகளில் சிறிது தாமதம் ஏற்பட்டாலும், இறுதியில் உங்களுக்கு வெற்றி உண்டு. வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உடன் வேலை செய்பவர்களால் சண்டை போடாதீங்க. உங்கள் வேலையை மட்டும் பார்த்தால் பிரச்சனை இல்லை. அடுத்தவர்களுடைய விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள். தினம்தோறும் குரு பகவான் வழிபாடு நன்மை தரும். இந்த வாரம் 7, 8 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது ஜாக்கிரதை.

கடகம்:
கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் எல்லா விஷயத்திலும் சிந்தித்து செயல்பட வேண்டும். அடுத்தவர்கள் வந்து இதை சொன்னார்கள், அதை சொன்னார்கள் என்று முன்கோபப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. யாரையும் நம்பாதீர்கள். கண்ணால் பார்த்தாலும், சில விஷயங்களை தீர விசாரிப்பதன் மூலம் தான் உண்மை வெளிவரும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். காரியத்தடை விலகும். வேலை செய்யும் இடத்தில் உடன் பணி புரிபவர்களுடன் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். கூடுதல் உழைப்பை போட்டால் தான் நல்ல பெயர் கிடைக்கும். இந்த வாரம் உங்களுக்கு 9, 10 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமும் உள்ளது. ஜாக்கிரதை. தினமும் முடிந்தால் சிவன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமான வாரமாக இருக்கப் போகின்றது. உங்களுடைய மனதில் மகிழ்ச்சி பொங்கும். குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்த சண்டை சச்சரவுகள் விலகும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உங்களுடைய குழந்தைகளின் மூலம் மன மகிழ்ச்சியை அடைவீர்கள். சொத்து சுகம் வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பாராட்டை பெறுவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். எல்லோரிடமும் அனுசரணையாக நடந்தால் பிரச்சனை இல்லை. இந்த வாரம் 10 11 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மனதிற்குள் ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருங்கள்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரக்கூடிய வாரமாக தான் அமையப் போகின்றது. வாரா கடன் வசூல் ஆகும். வருமானம் எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு அதிகமாக கிடைக்கும். குடும்பத்தில் தடைபட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் தொடக்கும். ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய வேலையில் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும். கவனக்குறைவு சின்ன சின்ன பிரச்சனைகளை உண்டு பண்ணிவிடும். வியாபாரத்தில் நினைத்ததை விட நல்ல லாபத்தை பார்க்க முடியும். தினம்தோறும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியான வாரமாக இருக்கப் போகின்றது. வீட்டில் உறவினர்கள் வருகை இருக்கும். தந்தை வழி உறவுகள் உங்களுடைய முன்னேற்றத்திற்கு கை கொடுபாபார்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ள வேண்டும். எந்த வேலையையும் முடிப்பதற்கு குறுக்கு வழியை தேர்ந்தெடுக்காதீர்கள். கொஞ்சம் நேரம் எடுத்தாலும், காத்திருந்து நேர்வழியில் செல்வது நல்லது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு கூடிய சீக்கிரம் நல்ல பதில் காத்துக் கொண்டிருக்கிறது. சொந்த தொழிலில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். போட்டி பொறாமை அதிகரிக்கலாம். வியாபாரத்தில்  எதிர்பார்த்ததை விட குறைவான லாபமே கிடைக்கும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. தினம் தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதானம் தேவை. முன்கோபடக்கூடாது. அனாவசியமாக அடுத்தவர்களிடம் வார்த்தைகளை கொட்ட கூடாது. ஒரு வார்த்தை பேசுவதற்கு முன்பு ஆயிரம் முறை யோசிக்க வேண்டும். கணவன் மனைவி கிடையே சின்ன சின்ன சலசலப்பு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வேலை செய்யும் இடத்தில் பிக்கல் பிடுங்கள் அதிகரிக்கும். நீங்கள் நல்லதை செய்தாலும் அடுத்தவர்கள் அதை குறை சொல்லுவார்கள். வியாபாரத்தில் புதிய முதலீட்டை போட வேண்டாம். உடன் இருந்து ஜால்ரா போடுபவர்களை நம்பாதீர்கள். எதிர்த்து பேசும் எதிரியை கூட நம்பிவிடலாம். தினம் தோறும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகம் தரக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. எதிலும் சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்பாக உங்களுடைய வேலையை செய்து முடித்து விடுவீர்கள். பாராட்டும் புகழும் குவியும். கமிஷன் தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்க தொடங்கும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி இரட்டிப்பாகும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும்‌. தினம்தோறும் நவகிரக வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமான வாரமாக இருக்கப் போகின்றது. நீங்கள் எதிர்பாராத நல்லது உங்களைத் தேடி வரும். தொலைபேசியின் மூலம் வரக்கூடிய செய்தி உங்களை சந்தோஷப்படுத்தும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை தரும். நீண்ட நாட்களாக விற்க முடியாத சொத்துக்களை விற்பதற்கு நேரமும் காலமும் கூடி வந்துவிட்டது. கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் கவனமாக உங்கள் வேலையை பார்க்க வேண்டும். முக்கியமான பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். யாரை நம்பியும் ஒப்படைக்க வேண்டாம். தினம் தோறும் முருகர் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல வருமானம் இருக்கும். ஆனாலும் செலவுகளை சமாளிக்க முடியாது. கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாயப்பு உள்ளது. சில பேர் கூடிய சீக்கிரம் சொந்த ஊர் திரும்பலாம். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் வேண்டாம். ஒருத்தரை ஒருத்தர் அனுசரித்து செல்லுங்கள். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க. வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க பாருங்க. செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எதிர்பார்த்தபடி புதிய வேலைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. சொந்த தொழிலில் பெரிய லாபத்தை பார்க்க முடியாது. சில சிரமங்கள் ஏற்படும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு தடைகளை தகர்க்கும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து எட்டிப் பார்க்கும். குடும்ப செலவுகளை சமாளிப்பதில் சிரமங்கள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் குறைபாடு உண்டாகும். சிறுவயது ஞாபகங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். சில பேருக்கு இரவு ஒரு சில சமயங்களில் நன்றாக தூக்கம் இருக்காது. பசி எடுக்காது. எதையோ இழந்தது போல இருப்பீர்கள். கவலை வேண்டாம். இந்த வார இறுதியில் எல்லாம் சரியாகிவிடும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கதவை தட்ட போகின்றது. வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -