சருமத்தில் இருக்கும் சுருக்கங்களை நீக்கி வயதான தோற்றத்தை மறைய செய்து இளமையை மீட்டுக் கொடுக்கும் சீரகம்! அதை எப்படி பயன்படுத்துவது நல்லது?

jeera-face-pack
- Advertisement -

சீரகம் உணவிற்கு மட்டுமல்லாமல், நம் சரும நோய்களை நீக்கவும், சரும ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது. முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் ரொம்பவே எளிதாக நீக்கி, நெகிழ்ச்சி தன்மையை மாற்றி, வயதான தோற்றத்தில் இருந்தே நம்மை இளமையாக இருக்க செய்ய பெருமளவு பங்கு பெற்று உதவி செய்கிறது. சீரகம் எப்படி நம் சருமத்தை பாதுகாக்கிறது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

பொதுவாக சீரகம் ஜீரணத்தை அதிகரிக்க பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அஜீரண கோளாறுகளை சரி செய்து, நம்முடைய ஜீரணத்தை சமன்படுத்தும் அற்புதமான ஒரு பொருள் சீரகம்! இந்த சீரகத்தை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், சரும ஆரோக்கியத்திற்கும் கூட பயன்படுத்தப்படுகிறது. ரொம்ப எளிதாக நம் இளமையைத் தக்க வைத்துக் கொள்ள இந்த சீரகத்தை எப்படி பயன்படுத்தலாம்?

- Advertisement -

சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள், நெகிழ்ச்சியான வயதான தோற்றத்தை மறைய செய்யக்கூடிய விட்டமின் ஏ, சி, ஈ போன்ற சத்துக்கள் சீரகத்தில் நிறைந்துள்ளது. இதை சருமத்தின் வெளிப்புறத்தில் மட்டுமல்லாமல், உட்புறத்திலும் எடுத்துக் கொள்வது எத்தகைய பிரச்சனைகளில் இருந்தும் நம்மை விடுவிக்க செய்கிறது. இளம் வயதிலேயே வயதான தோற்றத்தை உடையவர்கள் தினமும் அரை ஸ்பூன் அளவிற்கு சீரகத்தை ஒரு டம்ளர் நீரில் வெதுவெதுப்பாக போட்டு கலந்து குடித்தால் வயதான தோற்றம் நீங்கி இளமையான தோற்றத்தை விரைவாக அடைவீர்கள்.

இந்த சீரகத் தண்ணீரை வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை டோனர் போல முகத்தில் ஸ்ப்ரே செய்து வந்தால் முகப்பரு விரைவில் மறையும். மேலும் எண்ணெய் பசையுள்ள சருமம் நீங்கி நல்ல ஆரோக்கியம் பெறும். சீரகத்தை தூள் செய்து அதனுடன் சிறிதளவு பன்னீர் சேர்த்து முகத்தில் பேக் போட்டு வந்தால் சருமத்துளைகளுக்குள் சென்று சுரப்பிகளை சமநிலை செய்து புத்துயிர் பெற செய்கிறது. பொட்டாசியம், தாமிரம், கால்சியம், செலினியம், மாங்கனீசு போன்றவை அதிக அளவு சீரகத்தில் காணலாம்.

- Advertisement -

எனவே இத்தகைய சீரகத்தை உடலுக்கு உள்ளே வெதுவெதுப்பான தண்ணீருடன் தினமும் குடித்து வரலாம். அதே போல உடலுக்கு வெளியே இது போல பேக் போட்டு சருமத்தை பாதுகாக்கலாம். சருமத்தில் இருக்கும் அலர்ஜி, தோல் அரிப்பு போன்றவற்றை எளிதாக நீக்கக் கூடிய அற்புதமான அருமருந்தாகவும் சீரகம் செயல்படும். சீரகத்தில் இருக்கும் விட்டமின் இ பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால் சரும நோய்களை அண்டவிடாமல் தடுக்கும். அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால் சரும துளைகளுக்குள் சென்று நோய்க் கிருமிகளுடன் போராடி நம் சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது.

உடம்பில் அரிப்பு இருப்பவர்கள் குளிக்கும் தண்ணீரில் கொஞ்சம் சீரகத்தை போட்டு அதனுடன் கொஞ்சம் கல் உப்பு சேர்த்து குளித்து பாருங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும். தடிப்புகள், அரிப்பு, கொப்புளங்கள் போன்றவற்றுக்கு கூட நல்ல ஒரு நிவாரணம் கொடுக்கக் கூடிய இந்த சீரகத்தை அரைத்து பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி பாருங்கள். சீரகத்தில் பாஸ்பரஸ் மற்றும் தைமோல் போன்றவை இத்தகைய நச்சுக்களை நீக்கி நமக்கு சரும பராமரிப்பை அள்ளிக் கொடுக்கிறது. அதிக செலவில்லாமல் கொஞ்சம் சீரகத்தை இப்படியும் பயன்படுத்தி நம் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளலாமே!

- Advertisement -