இழந்த பணத்தை திரும்பவும் மீட்டெடுக்க வேண்டுமா? இந்த கோவிலுக்கு போங்க.

cash3
- Advertisement -

சில பரிகாரங்கள் சில ஜாதகத்திற்கு பலன் கொடுக்கும், சில பரிகாரங்கள் சில ஜாதகத்திற்கு பலன் கொடுக்காது. ஆனால் இன்று நாம் பார்க்கப் போகும் பரிகாரம் நீங்கள் யாராக இருந்தாலும் உங்களுக்கு பலனை கைமேல் கொடுக்கக்கூடிய பரிகாரம். நீங்கள் அடுத்தவர்களிடம் பணத்தை கொடுத்து இழந்திருக்கலாம். யாருக்காவது ஜாமீன் கையெழுத்து போட்டு பண சிக்கலில் சிக்கி இருக்கலாம்.

கடனாக வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் கஷ்டப்படலாம். வருமானம் குறைவாக இருக்குது, குடும்பத்தை நடத்த முடியவில்லை இன்னும் கொஞ்சம் வருமானத்தை பெருக்க வழி தேடுபவர்களாக இருக்கலாம். இப்படி பணம் பணம் பணம் என்ற சிக்கலில் நீங்கள் சிக்கியிருந்தால் இந்த பரிகாரம் உங்களுக்காக மட்டுமே.

- Advertisement -

பண இழப்பை சரி செய்ய செல்ல வேண்டிய கோவில்

நம்முடைய வாழ்க்கையில் மிகப் பெரிய பிரச்சினையை கொடுக்கும் இந்த பண கஷ்டத்தை தீர்க்கப் போகும் கோவில் எது தெரியுமா. தொப்பூர் தர்கா. இந்த கோவில் சேலமில் இருந்து தர்மபுரி செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில், தொப்பூர் சுங்க சாவடிக்கு 1 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தர்காவுக்கு போனால் பணகஷ்டம் தீருமா என்று பல பேர் சிந்திக்கலாம். இந்த கோவிலுக்கு நம்முடைய மாநிலத்திலிருந்து மட்டுமல்ல, வெளிமாநிலத்தில் இருந்தும் எல்லா மதத்தினரும் வருகிறார்கள்.

உடம்பு சரியில்லை, குழந்தை அழுது கொண்டே இருக்கிறது. பயந்து இருக்கிறது என்றால், பக்கத்தில் இருக்கும் தர்காவுக்கு கொண்டு போய் மந்திரித்து தாயத்து போடும் பழக்கம் நாம் எல்லோருக்குமே இருக்கிறது. அப்படி தான் இந்த பரிகாரமும். ஒருமுறை இந்த தர்காவுக்கு நீங்க போயிட்டு வாங்க. உங்க பண கஷ்டத்தை எல்லாம் இந்த பிரபஞ்சம் தீர்த்து வைக்கும்.

- Advertisement -

மாதத்தில் ஒரு முறை இந்த கோவிலுக்கு செல்லும் பழக்கத்தை வைத்துக் கொண்டால் உங்களுக்கு இருக்கும் பெரிய பெரிய பண பிரச்சனைகள் எல்லாம் கூட அவ்வளவு சுலபமாக தீர்ந்துவிடும். வருமானம் பெருகும். இழந்த பணத்தை எல்லாம் மீட்டு எடுத்து விடுவீர்கள். பணத்தால் ஏமாந்து நொந்து போனவர்கள் எல்லாம் கூட தங்களுடைய வாழ்க்கையை சரி செய்து கொள்ளலாம்.

சரி, இது தர்காவாச்சே இங்க போயிட்டு நாம என்ன வழிபாடு செய்வது, நமக்கு தெரியாதே. எதுவுமே செய்யாதீங்க. இந்த கோவிலுக்கு உள்ள போய் இரண்டு மணி நேரம் அமைதியாக உட்கார்ந்து விட்டு வாங்க. உங்களுக்கு நல்லது நடந்துவிடும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த கோவிலுக்கு அசைவம் சாப்பிட்டு செல்லக்கூடாது. கோவிலுக்கு செல்வதற்கு முன்பு 7 நாட்கள் அசைவம் சாப்பிடாமல் இருக்க வேண்டும். பெண்கள் மாதவிடாய் முடிந்து 7 நாட்கள் கழித்து தான் இந்த தர்காவுக்கு செல்ல வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இதையும் படிக்கலாமே: பணத்தேவையை பூர்த்தி செய்யும் பரிகாரம்

இந்த தர்காவிற்கு காலை 11 மணியிலிருந்து 2 மணி வரை செல்லலாம். மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை செல்லலாம். இழந்த பணத்தை மீட்டு எடுப்பதற்கு வழி தெரியாமல், திக்கு தெரியாமல் திணறிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு நிச்சயம் பயன்படும் என்ற நம்பிக்கையுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -