- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் பிரச்சினையை தீர்க்கும் தோரண கணபதி வழிபாடு

கடன் பிரச்சினையை தீர்க்கும் தோரண கணபதி வழிபாடு

- Advertisement -

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் தீர்க்க முடியாத பிரச்சினை என்று சில பிரச்சினைகள் இருக்கும். அப்படி பலதரப்பட்ட மனிதர்களிடம் இருக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக தான் கடன் பிரச்சினை திகழ்கிறது. கடன் பிரச்சினை தீர்வதற்காக பலவிதமான தெய்வங்களை பல விதங்களில் வழிபாடு செய்யும் வழக்கத்தை நாம் வைத்திருப்போம். இருப்பினும் முழுமுதற் கடவுளாக திகழக்கூடிய விநாயகப் பெருமானை கடன் பிரச்சினை தீருவதற்காக மிகவும் எளிமையான முறையில் வீட்டிலேயே வழிபாடு செய்யும் முறை இருக்கிறது. அதை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தோரண கணபதி வழிபாடு

அனைத்து தெய்வங்களுக்கு முன்பாக வணங்கக்கூடிய தெய்வமாக விநாயகப் பெருமான் திகழ்கிறார். விநாயகப் பெருமானுக்கு பலவிதமான ஸ்வரூபங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சொரூபத்திற்கும் ஒவ்வொரு விதமான வழிப்பாட்டு முறைகளும் அந்த முறையில் வழிபாடு செய்யும்பொழுது ஒவ்வொரு விதமான பலன்களும் கிடைக்கும். உதாரணமாக மஞ்சளில் பிடித்து வைக்கக்கூடிய பிள்ளையாரை வழிபட்டால் குரு பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கி மங்களங்கள் உண்டாகும். அதே போல் தான் பசுஞ்சாணத்தால் பிடித்து வைத்து வழிபாடு செய்யும் பொழுது சகல செல்வங்களையும் பெற முடியும். இப்படி நாம் பிடித்து வைக்கக்கூடிய பிள்ளையாருக்கே பல விதமான பலன்களை நம்மால் பெற முடியும் என்று புராணங்கள் கூறுகின்றன.

- Advertisement -

அந்த வகையில் நம்முடைய கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கு உதவக்கூடிய கணபதியாக தோரண கணபதி திகழ்கிறார். பொதுவாக தோரணகணபதி வழிபாட்டை ஆலயத்தில் சென்று தான் மேற்கொள்ள வேண்டும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நாம் மிகவும் எளிமையாக வீட்டிலேயே தோரண கணபதி வழிபாட்டை செய்யலாம். இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். ஏனென்றால் செவ்வாய் பகவான் தான் கடன் தொடர்பான பிரச்சனைக்கு காரணமாக திகழ்கிறார். செவ்வாய்க்கிழமை அன்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்யலாம். ஒரு வேளை அந்த நேரத்தில் வழிபாடு செய்ய இயலாதவர்கள் ராகுகால, எமகண்ட நேரத்தை தவிர்த்து விட்டு நல்ல நேரம் பார்த்து சுபஹூரை பார்த்து வழிப்பாட்டை மேற்கொள்ளலாம்.

இதற்கு கண்டிப்பாக முறையில் தோரண கணபதியின் படம் என்பது வேண்டும். படத்தை வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். தோரண கணபதிக்கு முன்பாக அரச இலையின் மேல் ஒரு அகல் விளக்கை வைத்து அதில் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். தோரண கணபதிக்கு நெய்வேத்தியமாக ஒரு கைப்பிடி அளவு பச்சரிசி, ஒரு கைப்பிடி அளவு நாட்டுச்சக்கரை மற்றும் இரண்டு ஏலக்காய் இவை மூன்றையும் ஒன்றாக கலந்து ஒரு கிண்ணத்தில் வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு விநாயகப் பெருமானின் 108 போற்றிகளை கூறி அர்ச்சனை செய்யலாம் அல்லது “ஓம் கம் கணபதியே நமஹ” என்னும் மந்திரத்தை கூறி 108 முறை அர்ச்சனை செய்யலாம் அல்லது தோரண கணபதியின் மூல மந்திரத்தை கூறியும் அர்ச்சனை செய்யலாம். இப்படி அர்ச்சனை செய்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: பணம் தரும் 10 ரூபாய் பரிகாரம்

இந்த முறையில் தொடர்ச்சியாக ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நாம் செய்வதன் மூலம் விநாயகப் பெருமானின் அருளால் கடன் தொடர்பான பிரச்சனைகள் முற்றிலும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்