- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதொழிலில் சிறக்க அம்மன் பரிகாரம்

தொழிலில் சிறக்க அம்மன் பரிகாரம்

- Advertisement -

முதலீடு செய்து பெரிய அளவில் வியாபாரம் செய்பவர்களுக்கு, தொழிலில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் இருந்து விடுபட, சுலபமான எளிய ஆன்மீகம் சொல்லும் சில பரிகாரங்களை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பின் சொல்லக் கூடிய பரிகார முறைகளில் உங்களுக்கு எது சுலபமாக இருக்கிறதோ, அதை நீங்கள் பின்பற்றி பலனை பெற்றுக் கொள்ளலாம்.

இதில் அந்த பரிகாரம் பெரியது, இந்த பரிகாரம் பெரியது என்ற எந்த மன குழப்பமும் தேவையில்லை. நம்பிக்கையோடு நாம் செய்யும் எந்த பரிகாரமும் நமக்கு முழு பலனை கொடுக்கும். தொழிலில் லாபம் பெற பரிகாரம். முதல் பரிகாரம் பெருமாளுடைய பரிகாரம். பெருமாளை உங்கள் வியாபாரத்தில் பாட்னராக சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

1000 ரூபாய் லாபம் வந்ததால், 10 ரூபாய் பெருமாள் உண்டியலில் போடுங்கள். இதை வழக்கமாக வைத்துக் கொண்டால், நிச்சயமாக இந்த வருடம் பத்தாயிரம் ரூபாய் பெருமாளுக்கு கொடுத்தால், அடுத்த வருடம் 20 ஆயிரம் ரூபாயாக பெருமாளுக்கு நீங்க கமிஷன் கொடுப்பீங்க. அந்த அளவுக்கு உங்க லாபமும் உயரும். அந்த உண்டியலுக்கு பெயர் திருப்பதி உண்டியல் என்று பெயர் வையுங்கள். லாபத்தை கொண்டு போய் திருப்பதியில் இருக்கும் பெருமாள் உண்டியில் சேர்க்கவும். இது முதல் பரிகாரம்.

இரண்டாவது பரிகாரம். தொழிலில் எதிரி தொல்லை அதிகமாக இருக்கிறது. நான் முன்னேறுவது என்னுடைய பார்ட்னரும் விரும்ப மாட்டேங்குறாங்க, நண்பர்களும் விரும்ப மாட்டிங்கறாங்க, சக போட்டியாளர்கள் ரொம்ப பிரச்சனை செய்கிறார்கள். இவர்களை எல்லாம் என்னதான் செய்வது என்று குழம்பி போய் நீங்கள் இருந்தால், நீங்கள் செய்ய வேண்டிய வழிபாடு, நரசிம்மர் வழிபாடு. இதுபோல தெய்வங்களை வழிபாடு செய்யும்போது, தொழிலில் இருக்கும் எதிரிகள் விலகுவார்கள்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை இதுபோல உக்கிர தெய்வங்களுக்கு சிவப்பு நிற வஸ்திரம் தானம் கொடுத்து, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பானகம் தானமாக கொடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவிட்டம் நட்சத்திரத்தில் நீங்கள் இந்த பரிகாரத்தை, உக்கிர தெய்வங்களுக்கு செய்யலாம். நிச்சயம் வியாபாரத்தில் இருக்கும் எதிரி தொல்லை விலகும்.

எனக்கு வியாபாரத்தில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை, ஒரே நாளில் சரியாக வேண்டும். இல்லை என்றால், என்னால் வியாபாரத்தை நடத்தவே முடியாது. பெரிய அளவில் நஷ்டம் வந்துவிடும். உடனடி தீர்வு கிடைக்க வேண்டும் என்றால், யாரை வழிபாடு செய்வது. திருவேற்காடு கருமாரியம்மன் பாதத்தை போய் இருக்க பற்றி கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: வாழ்நாள் கஷ்டங்கள் தீர அமாவாசை பரிகாரம்

திருவேற்காடு கருமாரியம்மன் பார்த்து விட்டு வந்தால் வியாபாரத்தில் இருக்கும் பிரச்சனை உடனடியாக தீரும் என்பது நம்பிக்கை. முடிந்தால் வியாபாரம் செய்யும் இடத்தில், திருவேற்காடு கருமாரியம்மன் புகைப்படத்தை வைத்து தினமும், அந்த படத்திற்கு பூ போட்டு, அர்ச்சனை செய்து “ஓம் சக்தி பராசக்தி நீயே துணை” என்று சொல்லி வழிபாடு செய்ய, உங்களுடைய வியாபாரம் ஜாம் ஜாம் என்று நடக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த பரிகார முறைகளை பின்பற்றி பலன் பெறலாம்.

சற்று முன்