- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவாழ்நாள் கஷ்டங்கள் தீர அமாவாசை பரிகாரம்

வாழ்நாள் கஷ்டங்கள் தீர அமாவாசை பரிகாரம்

- Advertisement -

நாளைய தினம் திங்கட்கிழமையோடு சேர்ந்து வரும் அமாவாசை திதி. கூடவே கிருத்திகை நட்சத்திரமும் இருக்கிறது. திங்கட்கிழமை என்பது சந்திர பகவானுக்கு உரிய நாள். அந்த நாளில் அமாவாசை சேர்ந்து வந்திருப்பது அதிசிறப்பு. இதை இன்னும் கூடுதல் சிறப்பாக்க கிருத்திகை நட்சத்திரம் நாளைய தினம் இருக்கிறது. கிருத்திகை நட்சத்திரம் முருகனுக்கு உரிய நட்சத்திரம். இந்த கிருத்திகை நட்சத்திரத்தை உடைந்த நட்சத்திரம் என்று சொல்லுகிறார்கள்.

இந்த நட்சத்திர நாளில் பெரும்பாலும் நல்ல காரியங்கள் எதுவும் செய்ய மாட்டார்கள். அதேபோல இந்த நாளில் நாம் செய்யக்கூடிய பரிகாரங்கள் எல்லாம் உடனே பலன் தரும் என்றும் நம்பப்படுகிறது. கிருத்திகை நட்சத்திரம் கூர்மையாக சிவப்பு நிறத்தில், வேல் போல அமைந்திருப்பதால், இதை முருகர் கையில் இருக்கும் வேல் உடன் ஒப்பிட்டு கிருத்திகை நட்சத்திரத்தை முருகருக்கு உகந்த நட்சத்திரமாக வழிபாடு செய்கின்றோம்.

- Advertisement -

கிருத்திகை நட்சத்திரம் நெருப்புக்கு உரிய நட்சத்திரம் என்பதால் இந்த நாளில், சூரிய பகவானுக்கும் அதீத சக்தி இருக்கிறது. சூரியன் சந்திரன் என்று, இந்த நாளில் ஒட்டுமொத்த கிரக சூழ்நிலையும் கூடி வந்திருக்கிறது. இந்த நாளில் கட்டாயம் நாம் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகளை பற்றியும் பரிகார முறைகளையும் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த நாளில் நீங்கள் எந்த பரிகாரத்தை செய்தாலும், என்ன வேண்டுதல் வைத்தாலும் அது முழு பலனை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அமாவாசை திதி என்பதால் தந்தை இல்லாதவர்கள் எல்லாம் கட்டாயமாக அவர்கள் வீட்டில் முன்னோர்களது வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இது முதல் விஷயம். அடுத்த படி இந்த உடைந்த நட்சத்திர கிருத்திகை நாளில், நம்முடைய கடனை உடைப்பதற்கு உண்டான பரிகாரத்தை பார்க்க போகின்றோம். அமாவாசை சந்திர பகவானுக்கு உரியது. கிருத்திகை நட்சத்திரம் சூரிய பகவானுக்கு உரியது. ஆகவே இந்த நாளில் சூரிய கிரகத்துக்கு உகந்த கோதுமை, சந்திரனுக்கு உகந்த பச்சரிசி இந்த இரண்டு பொருட்களை தானம் செய்வது அதீத பலனை நமக்கு கொடுக்கும்.

- Advertisement -

திங்கட்கிழமை அமாவாசை தானம்

வாயில்லா ஜீவன்களுக்கு நாளைய தினம் ஏதாவது ஒரு வகையில் இந்த இரண்டு பொருளை நீங்கள் தானம் செய்யுங்கள். திங்கட்கிழமை அதிகாலை வேலை சூரிய உதயத்திற்கு முன்பாகவே, பறவைகள் விழித்துக் கொண்டு பறக்க துவங்கும். கொஞ்சம் கோதுமையை கொண்டு போய் மொட்டை மாடியில் தூவி விட்டால், அந்த பறவைகள் வந்து சாப்பிடும். உங்களுடைய கர்ம வினை குறையும். கடனும் நிச்சயம் குறைவு.

மதியம் முன்னோர்கள் வழிபாட்டை முடுத்து விட்டு, கொஞ்சம் பச்சரிசி சாதத்தில் நெய் விட்டு பருப்பு சாதமாகவும் காகத்திற்கு வைக்கலாம். அப்படி இல்லை என்றால் எள்ளு சாதமாகவும் காகத்திற்கு வைக்கலாம். முன்னோர்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். கொஞ்சம் பச்சரிசி மாவு வெல்லம் இது இரண்டையும் கலந்து மரத்தடிகளில் தூவி விடலாம்.

இதையும் படிக்கலாமே: ஞாயிற்றுக்கிழமை ராகுகால நேரம் பைரவர் வழிபாடு

பச்சரிசி மாவில் வாழைப்பழம் வெல்லம் சேர்த்து கலந்து பிசைந்து உருண்டையாக மாற்றி பசு மாட்டிற்கு உங்கள் கையால் கொடுத்தாலும் உங்கள் கர்ம வினைகள் குறைந்து, செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கிடைத்து, கடன் சுமைகள் படிப்படியாக குறைய துவங்கும். கடனும் கர்மவினையும் குறைந்து விட்டால் மகாலட்சுமி நம் வீடு தேடி வருத்துவங்கி விடுவார்கள். பிறகு லட்ச லட்சமாக என்ன, கோடி கோடியாக உங்கள் வீட்டில் பணம் கொட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இந்த ஆன்மீகம் சார்ந்த அரிய தகவல் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்