செய்யும் எந்த தொழிலும் அமோகமாக வளர பெருமாள் உண்டியலை இப்படி செய்து வாருங்கள்!

செய்யும் தொழிலை தெய்வமாக போற்றி வணங்க வேண்டும் என்பது அனைவரும் செய்ய வேண்டிய கடமையாகும். நீங்கள் எந்த வேலை வேண்டுமானாலும் செய்து கொண்டிருக்கலாம். உங்களுடைய வேலையை உங்களுடைய தெய்வமாக நினைத்து பயபக்தியுடன் செய்யுங்கள். சுயதொழில் செய்பவராக இருந்தாலும் சரி, கடை வைத்து வியாபாரம் செய்து வந்தாலும் சரி, உத்தியோகத்தில் இருப்பவர்களாக இருந்தாலும் கூட சரி இந்த பரிகாரத்தை செய்து வந்தால் படிப்படியாக முன்னேற்றம் உங்கள் வாழ்க்கையில் நடைபெறும்.

perumal

என்னடா இந்த வாழ்க்கை ஒரே மாதிரி போய்க் கொண்டிருக்கிறது!! என்கிற சலிப்பு நிலை மாறும். நீங்கள் எந்த அளவுக்கு பாடுபடுகிறார்களோ அந்த அளவிற்கு பலனும் கிடைக்கும். வீட்டின் வாஸ்து அமைப்பு என்பது எந்த அளவிற்கு முக்கியமோ! அந்த அளவிற்கு நீங்கள் செய்யும் தொழில் மற்றும் வியாபாரத்தில் பெருமாளுக்கு இதை செய்வது என்பதும் மிகவும் முக்கியம்.

திருப்பதி செல்வதற்கு என்று பிரத்தியேகமாக நாம் ஒரு உண்டியல் வீட்டின் பூஜை அறையில் வைத்து இருப்போம். அது போல் தொழில், வியாபாரம் நடக்கும் இடங்களில் ஏழுமலையான் படத்தையும், உண்டியலையும் வைத்திருக்க வேண்டும். தொழில் வியாபாரம் சிறக்க, அந்த இடத்தில் செல்வம் கொழிக்க நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் திருப்பதி ஏழுமலையான். திருப்பதியில் போதும் போதும் என்கிற அளவிற்கு செல்வம் அவரிடம் வந்து கொட்டுவதற்கு காரணம் அங்கிருக்கும் தன ஆகர்ஷன எந்திரம். ஏழுமலையானுக்கு மிகவும் பிடித்தது நாம் அவருடன் வைத்துக் கொண்டிருக்கும் டீலிங் அல்லது பார்ட்னர்ஷிப் என்று சொல்லலாம்.

perumal

பெரிய பெரிய பணக்காரர்கள், பணம் நிரம்பி வழிந்து கொண்டு இருப்பவர்கள் இப்படித் தான் செய்கிறார்கள். திருப்பதி ஏழுமலையானிடம் எனக்கு இவ்வளவு கிடைத்தால்! உனக்கு இவ்வளவு தருகிறேன் என்று டீலிங் வைத்துக் கொள்வார்கள். திருப்பதி கோவில் உண்டியலை எண்ணும் பொழுது வரும் காணிக்கையை செய்திகளில் வெளியிடுவார்கள். அதை நீங்கள் கவனித்திருந்தால் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். இவ்வளவு பணம் எங்கிருந்து தான் இவர்களுக்கு கிடைக்கிறது? எப்படி கட்டு கட்டாக காணிக்கை செலுத்துகிறார்கள்? என்ற கேள்வி நமக்குள் எழுந்திருக்கும்.

- Advertisement -

ஏழுமலையானை நம்பியவர்களுக்கு அவர் எப்போதும் கைவிட்டதில்லை என்பார்கள். ஏழுமலையான் படத்திற்கு முன்பு ஒரு உண்டியலை வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதித்தாலும், அது 100 ரூபாயாக இருந்தாலும் சரி, 100 கோடியாக இருந்தாலும் சரி அதில் இருந்து ஒரு சதவீதம் மட்டும் அந்த உண்டியலில் செலுத்தி வர வேண்டும். இப்படி தொடர்ந்து ஆறு மாதம் கணக்கு வைத்து செய்ய வேண்டும்.

Tirupati perumal hundi

ஆறு மாதம் கழிந்த பின்னர் உண்டியலை உடைத்து அதில் இருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு போய் திருப்பதியில் காணிக்கை செலுத்த வேண்டும். இது போல் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறையும் நீங்கள் செய்து வந்தால் உங்கள் வாழ்க்கையில் படிப்படியான மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் நீங்களே உணர முடியும். முதல் மாதத்தில் ஐந்தாயிரம் நீங்கள் செலுத்தினால் அடுத்த முறை நீங்கள் செல்லும் பொழுது அதை இருமடங்காக நீங்கள் செலுத்தும் படியான நிலையை உங்களுக்கு உருவாக்குவார். இது பல தொழில் அதிபர்கள் மற்றும் பணக்காரர்கள் செய்யும் சூட்சும பரிகாரங்கள். இப்படி நீங்களும் செய்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடையுங்கள்.

இதையும் படிக்கலாமே
கணவன் மனைவி பிரச்சினைகள் வர வீட்டில் இருக்கும் இந்த செடியும் ஒரு காரணமாக இருக்கலாம்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.