உங்கள் ராசிப்படி இந்த பரிகாரம் செய்தால் தொழிலில் பணம் குவியும் தெரியுமா ?

Astrology

இன்று உலகெங்கிலும் அரசாங்கத்திலோ அல்லது ஏதேனும் ஒரு நிறுவனத்திலோ வேலைக்கு செல்பவர்கள், தங்கள் வேலையின் நிரந்தர தன்மை குறித்து உறுதியாக கூற முடியாத நிலையிலேயே உள்ளனர். ஆதலால் பெரும்பாலானோர் தங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு சொந்த தொழில் அல்லது வியாபாரங்களில் ஈடுபட்டு சாதிக்க நினைக்கின்றனர். அந்த வகையில் ஜோதிட சாத்திரத்தில் 12 ராசியினருக்கும் தொழில், வியாபாரங்களில் நஷ்டம் ஏற்படாமல் இருக்க, லாபம் பல மடங்காக பெருக சில பரிகார முறைகள் கூறப்பட்டுள்ளன. அவை என்ன என்பதை இங்கு காண்போம்.

மேஷம்:
Mesham Rasiமேஷ ராசியினர் தூய்மையான மஞ்சள் தூளை சிறிது எடுத்து ஒரு சிகப்பு நிற காகிதத்தில் மடித்து தங்கள் தொழிலோ அல்லது வியாபாரமோ செய்யும் இடங்களில் உள்ள பணம் வைக்கும் கல்லா பெட்டியில் வைத்துக்கொள்ள உங்களுக்கு பண வரவுக்கு என்றும் குறை ஏற்படாது. செவ்வாய்க் கிழமைகளில் இளம் சிவப்பு நிறத்திலாலான ஆடைகளை நீங்கள் தொழில் புரியும் இடத்திற்கு அணிந்து செல்லுங்கள்.

ரிஷபம்:

Rishabam Rasiரிஷப ராசியினர் தாங்கள் வசிக்கும் இடத்தின் அருகில் லட்சுமி நாராயணர் கோவில் அல்லது மஹாலட்சுமி கோவில் இருந்தால், அங்கு வெள்ளிக்கிழமையில் காலையில் சென்று அந்த மகாலட்சுமியின் சந்நிதானத்திற்கு
நேரே ஒரு நெய் தீபத்தை ஏற்றி வழிபட்டு தங்கள் தொழில் வியாபாரங்களை மேற்கொள்ள செல்வம் விருத்தியாகும். தினமும் ஏதேனும் ஒரு விலங்குக்கு உணவளிப்பதை வாடிக்கையாக கொள்ளுங்கள்.

மிதுனம்:

midhunamதினமும் உங்கள் தொழில் அல்லது வியாபார இடங்களுக்கு செல்லும் பொது உங்கள் குலதெய்வத்தையும், உங்கள் இஷ்ட தெய்வத்தையும் வேண்டிக்கொண்டு, நறுமணம் மிக்க வாசனை திரவியத்தை உங்கள் மீது பூசிக்கொண்டு செல்ல உங்களிடம் இருக்கும் துஷ்ட சக்திகள் விலகி தேவர்களின் ஆசிக்கிட்டும். உங்கள் தொழில் வியாபாரம் நன்கு நடந்து, பண வசதி பெருகும்.

- Advertisement -

தினசரி தமிழ் காலண்டர் மற்றும் பஞ்சாங்க குறிப்புகளை அறிய இங்கு கிளிக் செய்யவும்.

கடகம்:

Kadagam Rasiநீங்கள் ஒரு கற்பூரத்தைக் கொளுத்தி அதில் சிறிது செந்தூரத்தை போட்டு இரண்டும் நன்கு எரிந்து பஸ்பமான பின்பு, அந்த பஸ்பத்தை எடுத்து ஒரு வெள்ளை நிற காகிதத்தில் மடித்து, உங்கள் கல்லா பெட்டிகளில் வைத்துக் கொள்ள என்றுமே உங்கள் தொழில் வியாபாரங்களில் பண குறைவு ஏற்படாது. திங்கட்கிழமைகளில் வெள்ளை நிற ஆடைகளை அணிவது நன்மை தரும்.

சிம்மம்:

simmamநீங்கள் உங்கள் தொழில் வியாபாரம் செய்யும் இடங்களுக்குள் நுழையும் போதும், அங்கிருந்து வீட்டிற்கு கிளம்பும் போதும் அந்த இடங்களின் வாயிற்படியில் நுழையும் முன்பு அதன் வாயிற்படியை தொட்டு, அதே நேரத்தில் உங்கள் மனதில் உங்கள் இஷ்ட தெய்வத்தையும் வேண்டி உங்களின் தொழில்களை தொடங்க உங்கள் தொழில், வியாபாரம் என்றென்றும் லாபத்தையே கொடுக்கும்.

கன்னி:

Kanni Rasiநீங்கள் உங்கள் தொழில்,வியாபாரங்களில் லாபத்தை பெற, அந்த இடங்களை எப்போதுமே தூய்மையாக இருக்குமாறு வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் புதன் கிழமைகளில் சிறிது பச்சை பயிரை புத பகவானுக்கு நிவேதனமாக வைத்து அவரை வணங்க வேண்டும். தொழில் கூடங்களில் அங்கு பயன்படுத்தப்படும் செருப்பு, துடைப்பம் போன்றவற்றை நீங்கள் மற்றும் உங்கள் வாடிக்கையாளர்கள் பார்வையில் படாதவாறு வைக்க வேண்டும்.

துலாம்:

Thulam Rasiநீங்கள் உங்கள் பெற்றோரையும்,உங்கள் வாழ்க்கைத் துணையையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதன் மூலம் அவர்களின் அந்த மனநிறைவு உங்களுக்கு தெய்வங்களின் ஆசிகளைப் பெற்று தந்து உங்கள் தொழில் வியாபாரம் போன்ற விஷயங்களில் எப்போதும் வெற்றியைக் கொடுக்கும். வெள்ளிக்கிழமைகளில் அருகிலுள்ள பெருமாள் கோவில்களில் அங்கு வரும் பக்தர்களுக்கு இனிப்புகளை தானமாக அளிப்பது சிறப்பு.

விருச்சிகம்:

virichigamஅடிக்கடி உணர்ச்சி வசப்படும் நீங்கள் தினமும் காலையில் உங்கள் இஷ்ட தெய்வத்தை உங்கள் மனதில் இறுதி சிறிது நேரம் தியானம் செய்து உங்கள் தொழில், வியாபாரங்கள் செய்யும் இடங்களுக்கு செல்ல, அன்றைய தினம் உங்களுக்கு பண விஷயங்களில் நன்மை ஏற்படும். மேலும் மாதத்தில் ஒரு செவ்வாய்க்கிழமை அன்று முருகன் ஆலயங்களுக்கு சென்று பக்தர்களுக்கு சிகப்பு நிற இனிப்புகளை வழங்க, உங்களுக்கு என்றுமே நஷ்டம் என்பது இல்லை.

தனுசு:

Dhanusu Rasiநீங்கள் உங்கள் தொழில், வியாபாரங்களில் கோலோச்ச நீங்கள் காலையில் சிற்றுண்டி உண்ணும் போது அதிலிருந்து சிறிதளவு எடுத்து ஒரு பசு நாட்டிற்கோ, ஒரு நாய்க்கோ அல்லது ஒரு காக்கைக்கோ அளித்து விட்ட பிறகே நீங்கள் உண்ண வேண்டும். மேலும் வெள்ளிக்கிழமைகளில் உங்கள் வீட்டிலுள்ள துளசி மடத்திலுள்ள துளசி செடிக்கு சிறிது பாலை ஊற்றி வர தெய்வங்களின் ஆசி உங்களுக்கு கிடைக்கும்.

மகரம்:

Magaram rasiஉங்கள் தொழில் வியாபாரங்களில் என்றுமே நல்ல லாபங்களை பெற தினந்தோறும் உங்கள் தொழில் நடக்கும் இடங்களில் பத்திகள் கொளுத்தி, காமாட்சி விளக்கில் தீபம் ஏற்ற வேண்டும். மேலும் அங்கு ஆத்திரத்தில் கத்துவது, நகம் வெட்டுவது போன்ற செயல்களை தவிர்த்தால், அங்கு லட்சுமி கடாச்சம் ஏற்பட்டு, உங்களுக்கு தாராளமான பண வரவு கிடைக்கும்.

கும்பம்:

Kumbam Rasiநீங்கள் தொழில் அல்லது வியாபார இடங்களுக்கு செல்லும் முன்பு சிறிதளவு சர்க்கரை அல்லது வெல்லத்தை எடுத்து உங்கள் வீட்டிலோ அல்லது வீட்டிற்கு வெளியிலோ இருக்கும் எறும்புகளுக்கு உணவாக தந்து விட்டு செல்ல வேண்டும். மேலும் தினமும் நீங்கள் உண்ணும் முன்பு காக்கைகளுக்கு சிறிது உணவளிக்கும் பழக்கத்தை மேற்கொண்டால் உங்கள் முன்னோர்கள் மற்றும் சனிபகவானின் ஆசிகளைப் பெற்று தரும். இதனால் உங்களுக்கு தொழில் வியாபாரங்களில் கஷ்டமான நிலை ஏற்படாது.

மீனம்:

meenamநீங்கள் தொழில், வியாபாரங்களில் சாதிக்க உங்களுக்கு கல்வி அல்லது ஏதேனும் கலைகளை சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களுக்கு வஸ்திர, தன தானத்தைக் கொடுத்து அவர்களின் ஆசிகளை பெற வேண்டும். மேலும் வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு கொண்டை கடலை மாலை சாற்றி வழிபட்டு வரவேண்டும். இதனால் அந்த குரு பகவானின் ஆசி கிடைத்து அனைத்து நன்மைகளும் ஏற்படும்