- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதொழில் நஷ்டத்தை தவிர்க்கும் பரிகாரம்

தொழில் நஷ்டத்தை தவிர்க்கும் பரிகாரம்

- Advertisement -

ஒருவர் தன்னுடைய சொந்த காலில் நின்று வாழ்க்கையில் முன்னேற்ற வேண்டும் என்று நினைத்தால் அவர் முதலில் தேர்வு செய்யக்கூடிய ஒன்று சொந்தமாக தொழில் செய்வதுதான். அப்படி சொந்தமாக தொழில் செய்வது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அந்த தொழிலை செய்ய முன் அனுபவம் வேண்டும். அந்த தொழிலில் இருக்கக்கூடிய நுணுக்கங்களை அறிந்திருக்க வேண்டும். அந்த தொழிலை செய்வதற்கு போதுமான அளவு பண வசதி வேண்டும், இட வசதி வேண்டும், அந்த தொழிலை மேற்கொண்டு நல்ல முறையில் முன்னேற்றுவதற்கு போதுமான அளவு ஆள் வசதி வேண்டும். இப்படி நிறைய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் ஒருவரால் சொந்தமாக தொழிலை தொடங்க வேண்டும். அப்படி கஷ்டப்பட்டு சொந்தமாக தொழில் தொடங்கியும் அவர்களால் லாபத்தை அனுபவிக்க முடியவில்லை நஷ்டத்தை மட்டுமே எதிர்கொள்கிறார்கள் என்னும் பட்சத்தில் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தொழில் நஷ்டத்தை தவிர்க்கும் பரிகாரம்

ஒருவர் புதிதாக தொழிலை தொடங்குகிறார் என்றால் அந்த தொழிலை ஏற்கனவே செய்து கொண்டு இருப்பவர்கள் நம்மை விட முன்னேறக்கூடாது என்ற எண்ணத்தில் பார்ப்பார்கள். நமக்கு ஒரு போட்டியாளர் வந்துவிட்டார் என்று எண்ணத்திலும் பார்ப்பார்கள். இதனால் அவருக்கு கண் திருஷ்டி என்பது ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இந்த எதிர்மறை ஆற்றலால் பலருக்கும் நஷ்டம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த கண் திருஷ்டியை நீக்கவும் எதிர்மறை ஆற்றலை விரட்டி அடிக்கவும் செய்யக்கூடிய ஒரு தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு நான்கு பொருட்கள் வேண்டும். இந்த நான்கு பொருட்களையும் பூச நட்சத்திரம் வரும் நாள் அன்று தான் வாங்க வேண்டும். அவை கருப்பு உளுந்து, கருஞ்சீரகம், கருப்பு எள், வெண்கடுகு இவை நான்கையும் சரிசமமான அளவு வாங்கிக் கொள்ளுங்கள். இதை போட்டு வைப்பதற்கு போதுமான அளவு மண் குடுவை வாங்கிக் கொள்ளுங்கள். அதாவது சிறிய மண்பானை வாங்கிக் கொள்ளுங்கள். இவற்றை கொட்டி தொழில் செய்யும் இடத்தில் அனைவரின் கண்ணில் படும்படி இந்த நான்கு மண் குடுவைகளையும் வைக்க வேண்டும். அவ்வளவுதான் பரிகாரம்.

இந்த பொருட்களை மூன்று மாதத்திற்கு ஒரு முறை புதிதாக மாற்ற வேண்டும். மண் குடுவையுடன் அந்த பொருட்களை அப்படியே எடுத்து ஓடுகின்ற தண்ணீரில் போட்டு விட வேண்டும். ஓடுகின்ற தண்ணீர் இல்லாத பட்சத்தில் கால்படாத இடத்தில் போட்டு விடலாம்.. மறுபடியும் பூச நட்சத்திரம் வரும் நாளன்று இந்த நான்கு பொருட்களையும் நான்கு மண் குடுவைகளையும் வாங்கி வந்த அதே முறையில் வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தொழில் செய்யும் இடத்திற்கு வரக்கூடிய நபர்களின் எதிர்மறை ஆற்றல்களும் கண்திருஷ்டிகளும் நீங்கும். இதனால் தொழிலில் இருக்கக்கூடிய நஷ்டம் படிப்படியாக குறைவதோடு லாபமும் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:கணவரின் வருமானத்தை அதிகரிக்க சொல்ல வேண்டிய எளிய மந்திரம்
எவ்வளவு பரிகாரம் செய்தாலும் கடின முயற்சியும் உழைப்பும் இருந்தால்தான் ஒருவரால் அவர் செய்யும் தொழிலில் லாபத்தை பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்